புதன், 16 அக்டோபர், 2024

MUSIC TALKS - MUTHAMIZHE MUTAMIZHE MUTHA SATHAM ONDRU KETPADHENNA - MUTHA TAMIL VITHAGARE ENNIL VANDHU UNNAI PAARPADHENNA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன 
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன 
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

காதல் வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக் குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை
தாகம் வந்து பாய் விரிக்க தாவணி பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்

முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன 
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன 
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன 
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே

கனவு வந்து காத்திருக்கு தூங்கி கொள்ள மடி இருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிகொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்திச் சிரித்தாய் 
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...