ஞாயிறு, 6 அக்டோபர், 2024

MUSIC TALKS - ORU CHINNA THAMARAI EN KANNIL POOTHATHE - ADHAN MINNAL VAARTHTHAIGAL EN ULLAM THEDI THEIKKINDRATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா 
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே 
உன் ஈர புன்னகை சுடுதே 
என் காட்டுப் பாதையில் நீ ஒற்றை பூவடா 
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் ஏன் உயிரே ?

உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலை மோதும் உன் வாசல்
தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்
அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்
உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது



கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...