என்னை விட்டு செல்லாதே
உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே
ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய்
அடி மின்சார விழியால் கடத்தி விட்டாய்
ஓ மழை விட்ட தெருவை போல மயக்கி விட்டாய்
ஓ மழை விட்ட தெருவை போல மயக்கி விட்டாய்
நீ என்னை துடிக்க வைத்தாய்
ஓ நெஞ்சம் உருகுதே நாட்கள் நீளுதே
ஓ நெஞ்சம் உருகுதே நாட்கள் நீளுதே
புவி ஈர்ப்பு விசை கூட நேர் எதிர் ஆனதே
மோகம் திமிறுதே தூக்கம் தொலைந்ததே
மோகம் திமிறுதே தூக்கம் தொலைந்ததே
புத்தன் இரவு போலேயே கரைந்து போனதே
ஏன் நின்று போகிறேன் உன் மீது சாய்கிறேன்
அன்பே நீ என்ன மாயம் செய்தாய்
கொஞ்சம் வானம் கொஞ்சம் காதல்
ஏன் நின்று போகிறேன் உன் மீது சாய்கிறேன்
அன்பே நீ என்ன மாயம் செய்தாய்
கொஞ்சம் வானம் கொஞ்சம் காதல்
என்று கரைகிறேன்
1 கருத்து:
அந்த தெலுங்கு ரீமேக் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் YMCA ல ஷூட்டிங் எடுத்துன்னு இருக்கான். மொத்த சென்னை தவெக-வையும் ஓரிடத்தில் கூட்டி அலப்பறை பண்ணின்னு இருக்கான். ஒரு நிமிடம் பாலகிருஷ்ணா போலக் கத்துறான். அடுத்த நிமிடம் பொய்யா அடுக்குறான். உடனே சிரிக்கிறான், மறுபடியும் காட்டு கூச்சல்... நடுவுல நடுவுல சம்மந்தமே இல்லாமல் ஸ்டாலின் சார்...இறுதியில் "ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று காலில் விழுந்து சினிமா மாதிரி கெஞ்சுறான். தேர்தல் அரசியல் என்பது கிணறு தாண்டுவதைப் போன்றது. பாதி கிணறு தாண்டினாலும், 95% கிணறு தாண்டினாலும் அதலபாதாளம்தான் மிஞ்சும். இவரால் 100% தாண்ட முடியுமா? அப்படியே இவர் தாண்டினாலும், இவரோடு நிற்கும் முகம் தெரியாத மற்றவர்களால் அது முடியுமா ? நான் பலமுறை சொன்னதுதான், இப்போதும் சொல்கிறேன்: இது ஒரு கட்சியல்ல, இது ஒரு 'Cult'. அளவுக்கு அதிகமாக ஹிப்னாடைஸ் செய்யப்பட்ட இளைஞர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கலாம், அதில் தவறில்லை. ஆனால், 'ஓவர் கான்ஃபிடன்ஸ்' (Over Confidence) கொடுப்பது மிகப்பெரிய ஆபத்து. துளியும் பகுத்தறிவு இல்லாத இந்தக் கூட்டத்திற்கு விஜய் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த அதீத நம்பிக்கை, சமூக ரீதியாக மிகவும் அபாயகரமானது.
மே 4-ஆம் தேதி, 233 தொகுதிகளிலும் அவர் தோற்றுப் போனால், அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் வெளியே வரப்போவதில்லை. (41 பேர் இவனால செத்தாலே வரமாட்டான்) ஆனால், அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இந்த அப்பாவித் தொண்டர்களுக்கு இருக்கிறதா? விஜய் ஏன் இதை யோசிக்கவில்லை?
இதைவிட கொடுமை....இன்று அவனோட 'பாடி லாங்குவேஜ்' பார்த்தால், அவனே இந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள மாட்டான் என்றே தோன்றுகிறது.
இவ்வளவு பெரிய மாயையை உருவாக்கிவிட்டு, ஒரு எதார்த்தமான தோல்வி, முகத்தில் அறையும்போது இந்த முட்டாள் கூட்டத்தின் நிலை என்னவாகும் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது.
🙅⚠️
கருத்துரையிடுக