JURASSIC WORLD - FALLEN KINGDOM -ன் அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் காட்சிக்கு பின்னால் சலிக்காத ஒரு விறுவிறுப்பான சயின்ஸ் ஃபிக்ஷன் படைப்பு இந்த JURASSIC WORLD : DOMINION - விடுதலை டைனோசர்கள் இப்போது உலகம் முழுவதும் மனிதர்களுடன் கலந்து வாழ்கின்றன. இதற்கிடையில், 'பயோசின்' (BIOSYN) என்ற மரபணு நிறுவனம் இத்தாலியில் டைனோசர்களுக்கான ஒரு பாதுகாப்பான காப்பகத்தை உருவாக்கி, அங்கு ரகசிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. ஓவன் கிரேடி மற்றும் கிளேர் டீயரிங் ஆகியோர் மேஸி லாக்வுட் என்ற சிறுமியை ஒரு ரகசிய இடத்தில் வளர்த்துப் பாதுகாக்கிறார்கள். மேஸியின் தனித்துவமான மரபணு அமைப்புக்காக ஒரு கும்பல் அவளைக் கடத்தத் திட்டமிடுகிறது. அமெரிக்காவின் விவசாயப் பயிர்களை ராட்சத வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. இந்தப் பூச்சிகள் 'பயோசின்' நிறுவனத்தின் விதைகளால் வளர்க்கப்படும் பயிர்களை மட்டும் விட்டுவிடுவதைக் கவனிக்கும் டாக்டர் எல்லி சாட்லர், இதன் பின்னணியில் சதி இருப்பதை உணர்கிறார். அவர் தனது பழைய நண்பர் டாக்டர் ஆலன் கிராண்டின் உதவியை நாடுகிறார். இவர்கள் இருவரும் பயோசின் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களை அம்பலப்படுத்த அந்த நிறுவனத்திற்குள் நுழைய திட்டமிடுகிறார்கள். மேஸியும், ஓவனால் வளர்க்கப்பட்ட 'ப்ளூ' என்ற வேலோஸிராப்டர் டைனோசரின் குட்டியும் (பீட்டா) மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற ஓவன் மற்றும் கிளேர் மால்டா நகருக்குச் செல்கிறார்கள். அங்கு டைனோசர்களின் கறுப்புச் சந்தையில் நடக்கும் மோதல்களுக்குப் பிறகு, மேஸியும் டினோசர் குட்டியும் பயோசின் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அறிகிறார்கள். ஒரு தைரியமான விமான ஓட்டியின் உதவியுடன் அவர்கள் இத்தாலிய காப்பகத்திற்குப் பயணிக்கிறார்கள் பயோசின் நிறுவனத்திற்குள், டாக்டர் இயன் மால்கம் மற்றும் ராம்சே கோல் ஆகியோர் ரகசியமாக எல்லி மற்றும் ஆலனுக்கு உதவுகிறார்கள். அங்கு மேஸி தனது பிறப்பின் பின்னணியில் உள்ள வியக்கத்தக்க உண்மைகளை அறிகிறார். பயோசின் நிறுவனத்தின் சி.இ.ஓ லூயிஸ் டாட்ஜசன் தனது லாபத்திற்காக உலக உணவுச் சங்கிலியைச் சீர்குலைக்க முயல்வது தெரியவருகிறது. வெட்டுக்கிளிப் படையால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க மேஸியின் மரபணுவே திறவுகோலாக இருக்கிறது என்பதை கண்டறிந்து நடக்கப்போகும் ஆபத்தை தடுக்க இந்த JURASSIC PARK காலத்து ஆராய்ச்சியாளர்களும் JURASSIC WORLD காலத்தின் கதாநாயகர்கள் இணைந்து செயல்படும் ஒரு படமாக இருக்கிறது !! நிறைய சயின்ஸ் ஃபிக்ஷன் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் மிக கவனமா எடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலும் சுற்று சூழல் பாதுகாப்பு பற்றியும் தனியார் நிறுவன சுயநலங்கள் பற்றியும் எடுக்கப்படும் படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளாக்கபடுவது தவறானது, இந்த படத்தின் 1.03 பில்லியன் பாக்ஸ் ஆபீஸ் போதும் இந்த படம் நேர்மையானது என்று சொல்வதற்கு ! பெர்பெக்ட் 8.5 / 10 படம் கண்டிப்பாக பாருங்கள் மக்களே , விமர்சனங்களை நம்ப வேண்டாம் !!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - இது ஒரு தேர்தல் காலத்து பதிவு !
"இந்த வலைப்பூவானது அரசியல் விவாதங்களுக்காகவோ அல்லது தேர்தல் களம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. இதன் முதன...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
-
EN : In the hyper-accelerated landscape of 2026, our visual intuition has undergone a radical recalibration. We now inhabit a "post-t...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக