வியாழன், 12 மார்ச், 2026

MORATTU SINGLE VIBEZZ! - GAS THATTUPAADU ! 2026


இப்போ LPG சிலிண்டர் கிடைப்பது, இணையத்தில் அமைதியான கமெண்ட் செக்ஷன் கிடைப்பதைவிட கஷ்டம் என்றே சொல்லலாம். காதலுக்கு ரொமான்ஸ் டைரி மில்க் கொடுத்து சொல்ல வேண்டிய காலம் போய்ச்சு இப்போ "நான் ரீஃபில் புக் பண்ணிட்டேன்"ன்னு சொன்னா தான் உண்மையான அன்பு பரிசாக இருக்கிறதே !   

டொமேஸ்டிக் ரீஃபில் இடைவெளியை 25 நாட்கள் ஆக்கிட்டாங்க. 25 நாட்களா?! நாம எல்லாம் காய்கறி சாலட் சாப்பிட்டு உயிரோட இருக்கிறோம்னு நினைக்கிறாங்க போல. நாலு பேரு குடும்பம், அதுவும் ஒரே வாரத்தில் பிரியாணி பாயசம் பண்ணினா, அடுப்பே ரஷ்யன் ரூலெட் மாதிரி. 20-ஆவது நாள்ல அந்த சிவப்பு சிலிண்டரையே "டைம் பாம்" மாதிரி கவனமாக பார்த்து, தீயின் நிறம் ஆரஞ்சு ஆகாம இருக்க பிரார்த்தனை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.  

கோயம்புத்தூர், சென்னை ஹோட்டல்களுக்கு போயிருக்கீங்களா? மெனு "RAW FOOD FESTIVAL" மாதிரி. பரோட்டா இல்லை,  தோசை இல்லை, சைனீஸ்  இல்லை. ஏன்? கமெர்ஷியல் கேஸ் சப்ளை  20% -க்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கு. ஹோட்டல்கள் 1926-க்கு திரும்பி, மரக்கட்டையிலே சமைக்கிறாங்க. "WOOD-FIRED EXPERIENCE" வேண்டும்னா, நான் கேம்பிங் போவேன்; லஞ்ச் சாப்பிட ஹோட்டலுக்கு வரமாட்டேன்!   

டெலிவரி பையனிடம் கேஸ்சிலிண்டர் எங்கேன்னு கேட்டா, ஜியோகிராபி லெக்சர். "சார், STRAIT OF HORMUZ பிளாக் ஆயிருக்கு." சரி, உலக அரசியல் சிக்கல்னு புரியும். ஆனா, எனக்கு தேவை, டீக்காக பால் கொதிக்க வைக்க! என் காலை காபி மிடில் ஈஸ்டு-ல டாங்கர் ஓடுற பாதைக்கு டைரக்ட்-ஆ டைட் ஆயிருக்கு என்று யாரும் நினைக்கல. 

அடடா, இனிமே ஹோட்டல் எல்லாரும் "TECH-CHEF". எலக்ட்ரானிக்ஸ் கடைகள்ல INDUCTION STOVES SOLD OUT. "MASTER-CHEF" இருந்து "MASTER-ELECTRICITY-BILL பேமென்ட் கொடுக்க" சம்பளம் வாங்கி செலவு பண்ணும் நிலைக்கு தயார் ஆக மாறிட்டோம். கிச்சன் இப்போ எலெக்ரிக் அடுப்பு இல்லாமல் இருக்கப்போவது கிடையாது - செகண்ட்ஸலயாவது வாங்கணும் ! 

NON-STICK PAN-கள் சப்ளை தயார் ஆனால் அடுப்புகள் வேகமான விற்பனையில் "SHORTAGE"ன்னு நியூஸ் வந்த உடனே IVRS LINE CRASH ஆகிவிட்டது. VIJAY அல்லது AJITH படம் FIRST DAY FIRST SHOW டிக்கெட் புக்கிங்கை விட கஷ்டம். பரிசு என்னன்னு கேட்டா? ஒரு முட்டை வறுக்க வாய்ப்பு தான்.  



கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...