போருடோ: நாருடோ நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ் என்பது நெடுந்தொடர் நாருடோவின் வெற்றிக்கு பின்னால் தொடர்ச்சியாக உருவானது. ஹோகேஜ் ஆன நாருடோவின் மகன் போருடோ உசுமாகி, தன் தந்தையின் நிழலில் வாழும் சிரமத்துடன் தொடங்குகிறார். அவர் சரடா உச்சிஹா மற்றும் மிட்சுகியுடன் சேர்ந்து, கோனோஹாமாருவின் கீழ் டீம் 7-இல் பயிற்சி பெறுகிறார். ஆரம்பக் கதைகள் பள்ளி வாழ்க்கை, நட்பு, சிறிய பணி ஆகியவற்றைச் சுற்றி நடக்கின்றன.
சூனின் தேர்வில் போருடோ, அறிவியல் நிஞ்ஜா கருவிகளைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார். ஆனால் அந்த நிகழ்ச்சி மோமோஷிகி ஓட்சுட்சுகியின் தாக்குதலால் இடைநிறுத்தப்படுகிறது. நாருடோ கிராமத்தை காப்பாற்ற தன்னை அர்ப்பணிக்கிறார், போருடோ மோமோஷிகியை வீழ்த்த உதவுகிறார். இதன் மூலம் போருடோவுக்கு “கர்மா” என்ற மர்மமான அடையாளம் கிடைக்கிறது.
பின்னர், காரா என்ற புதிய அமைப்பு தோன்றுகிறது. ஜிகன் (இஷிகி ஓட்சுட்சுகியின் வேஸ்ஸல்) தலைமையில், அவர்கள் உலகிற்கு அச்சுறுத்தலாக மாறுகிறார்கள். இங்கு கவாகி என்ற சிறுவன் அறிமுகமாகிறார்; அவருக்கும் போருடோவுக்கு போலவே கர்மா உள்ளது. கவாகி, நாருடோவுடன் ஆழமான பந்தத்தை உருவாக்குகிறார், இது கதையின் மையமாகிறது
இஷிகி ஓட்சுட்சுகி, கவாகியின் உடலை கைப்பற்ற முயல்கிறார். நாருடோ, சசுகே, போருடோ இணைந்து போராடுகிறார்கள். நாருடோ “பாரியன் மோட்” என்ற சக்தியைப் பயன்படுத்தி, தன் உயிரையும் சக்தியையும் பலியாக்குகிறார். இறுதியில், இஷிகி வீழ்த்தப்படுகிறார்.
ஆனால் காராவின் மீதமுள்ள உறுப்பினரான கோட், பழிவாங்கும் நோக்கில் புதிய அச்சுறுத்தலாக எழுகிறார். போருடோவின் கர்மா ஆபத்தான நிலையில் வளர, கவாகி, மோமோஷிகியின் பிடியிலிருந்து காப்பாற்ற போருடோவை தற்காலிகமாகக் கொல்கிறார்
இந்த தொடரின் அடுத்த பாகம் டூ ப்ளூ வார்ட்டெக்ஸ் அடுத்த வருடம் வெளியாக வேண்டியது ஆனால் இன்னும் தள்ளிப்போகிறது - சொல்லப்போனால் தயாரிப்பே காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது என்றும் சொல்லலாம் !
1 கருத்து:
#BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும்
2. மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும்
(நிபந்தனை: 60 வயது வரையிலான பெண்களுக்கு உரிமை தொகை; மத்திய, மாநில ஊழியர்களுக்கு விலக்கு)
3. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்
4. அண்ணன் சீர் திட்டம்: 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை
5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய்(அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை
6. வெற்றிப் பயணத் திட்டம்: அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
7. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக "ராணி வேலுநாச்சியார் படை" உருவாக்கப்படும்
8. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்
9. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்
10. ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்
11.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத்தில் வழங்கப்படும்
12. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
#TVKVijay #TVKforTN
கருத்துரையிடுக