ஞாயிறு, 18 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 48 - ஒரு பாதுகாப்பு அட்வைஸ் மக்களே !

 


நம்முடைய வாழ்க்கையைப் பற்றி நாம் அடிக்கடி “பாதுகாப்பாக இருக்கிறது” என்ற ஒரு கருத்தில் நிலைத்து நிற்கிறோம். ஆனால் உண்மையில், பாதுகாப்பு என்பது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம், எவ்வளவு நிதி பலம் கொண்டிருக்கிறோம் என்பதில்தான் பெரும்பாலும் அமைகிறது.

சினிமாக்களில் காட்டுவது போல, ஒருவர் தவறு செய்தால் உடனே தண்டனை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் நிஜ வாழ்க்கையில் அரிதாகவே நடக்கும் மக்களே. சட்டத்தில் உள்ள இடைவெளிகளையும், பண பலத்தையும், ஆட்களுடைய பலத்தையும் பயன்படுத்தி, தவறான செயல்களைச் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் மக்களே. அதிகமான பலம் கொண்டவர்களுக்கு எப்போதுமே தண்டனைகள் வழங்கப்படுவதில்லை என்பது இக்காலத்தின் கடுமையான உண்மை. சட்டங்கள் ஏழைகளை அதிகமாக தாக்குகிறது என்பதே வருத்தமான விஷயம்.

எனவே, இக்காலத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று கணிக்க முடியாத வாழ்க்கையை வாழாமல், போதுமான அளவுக்கு பணம் சேர்த்து, நிதி பலத்தோடு இருக்க வேண்டும். அதுவே வருங்காலத்தில் நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்றும் ஒரே வழி. பணம் என்பது வெறும் வசதிக்கான கருவி அல்ல; அது பாதுகாப்பிற்கும், சமூகத்தில் நிலைத்தன்மைக்கும் அடிப்படை என்பதே நிதர்சனம் ஆகிறது.

தன்னை ஏமாற்றியவர்களை கடவுள் நிச்சயமாக தண்டிப்பார் என்று ஒரு மனிதர் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார், இப்போது அவர் நம்மோடு இல்லை, ஏமாற்றியவர்கள் ராஜ சந்தோஷத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் மக்களே, கடவுள் கொடுக்க வேண்டிய தண்டனைகளும் தாமதிக்கபடுகிறது அல்லது மறுக்கப்படுகிறது என்று நான் இந்த வலைப்பூவில் சொல்லலாமா என்று யோசித்தாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்காதான் செய்கிறது மக்களே !

கருத்துகள் இல்லை:

SPECIAL TALKZ - பேட்-மேன் வேர்ஸஸ் சூப்பர் மேன் !

பொதுவாக, அமெரிக்க காமிக் புத்தகங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், நாம் நிறைய சாகச அம்சங்களைக் காண்கிறோம். நான்...