திங்கள், 19 ஜனவரி, 2026

GENERAL TALKS - இணையத்தில் கிடைத்த அட்வைஸ் !! #1

 


அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இந்த உண்மை பொருந்துகிறது. யாரையும் அதிகமாக நம்பினால், அவர்கள் துரோகத்திற்கு ஆளாக்கக் கூடும். யாரையும் அதிகமாக காதலித்தால், அந்த காதல் உங்களை தொடுத்து விடும். எதையும் அளவுக்கு மீறி சிந்தித்தால், மன அழுத்தம் உங்களை வாட்டும். அதிகமாக பேசினால், சில நேரங்களில் பொய்களை சொல்ல வேண்டிய கட்டாயம் வரும். அதிகமாக எதிர்பார்ப்புகளை வைத்தால், ஏமாற்றம் அடைவது தவிர்க்க முடியாது. அதிகமாக அன்பு செலுத்தினால், சிலர் அதை தவறாக பயன்படுத்தி, தலைமீது ஏறி விளையாடுவார்கள். அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல், அதிகமாக செலவு செய்தால் ஏழையாக மாறிவிடுவீர்கள். இவை அனைத்தும் வாழ்க்கையின் சமநிலையை குலைக்கும் எச்சரிக்கைகள்.

பலருக்கும் ஒரு தவறான எண்ணம் உண்டு  “என்னுடைய ஒவ்வொரு அசைவையும் எல்லோரும் கவனிக்கிறார்கள், நான் எங்கு சென்றாலும் அனைவரும் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று. உண்மையில் அது ஒரு மாயை. உலகம் முழுவதும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பிரச்சனைகள், சிந்தனைகள், கவலைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களைப் பற்றி யோசிப்பதற்கு நேரமே இல்லை. நாம் நினைப்பது போல, அனைவரும் நம்மை கண்காணிக்கவில்லை. வாழ்க்கையில் சிறு தவறுகள் நடந்தாலும், அது உலகம் முழுவதும் பேசப்படும் விஷயம் அல்ல. “ஸ்பாட்லைட்” என்ற தோற்றம், நாம் நம்பும் ஒரு மாயை மட்டுமே.

வாழ்க்கையில் தடைகள் தவிர்க்க முடியாதவை. செடிகள் மழையை சந்திக்காமல் வளர்ச்சி அடைய முடியாது; அதுபோல மனிதர்கள் சவால்களை சந்திக்காமல் முன்னேற முடியாது. தடைகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. அந்த தடைகள் தான் நம்மை வலுவாக்குகின்றன. கடைசியில், நம்முடைய தழும்புகள் அனைத்தும் நம்முடைய தோளோடு கலந்து விடும்; நாம் பட்ட பாயங்கள் அனைத்தும் வரலாறாக மாறிவிடும். நம்முடைய வழியே, நம்முடைய கதைகளில், நம்முடைய பெயர் மறைந்தாலும், அனுபவங்கள் மட்டும் நிலைத்திருக்கும்.

மேலும், எல்லா புகழும் வாழ்க்கையை சீர்குலைப்பதாக வருவதில்லை. சில நேரங்களில், புகழும் சவால்களும் நம்மை சீர்குலைக்க அல்ல, நம்மை வலுப்படுத்துவதற்காகவே வருகின்றன. வாழ்க்கையில் வரும் தடைகள், சவால்கள், தோல்விகள் — இவை அனைத்தும் நம்மை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகள். உண்மையான வளர்ச்சி, சவால்களை எதிர்கொண்டு, அவற்றை வென்று முன்னேறுவதில்தான் உள்ளது

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!

  பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...