வியாழன், 28 மார்ச், 2024

MUSIC TALKS - OODHAA OODHAA OODHAA POO SONG LYRICS - பாடல் வரிகள் !




ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே நலம்தானா ஊதா பூவே ?

தேன் வார்த்த ஊதா பூவே சுகம்தானா ஊதா பூவே ?

ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நீ பார்த்தால் ஊதா பூவே நலமாகும் ஊதா பூவே

தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே

ஓர் உயிர்தேக்கி வைத்தேன் நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா.
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதா.

ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஓதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழைகூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன்

உன் விழி பார்வை அன்று என்னை விலைபேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு நான் உன்னை வாங்கி கொண்டேன்

எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை

ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே

தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ





கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - SHARK BOY AND LAVA GIRL MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

  மேக்ஸ் என்ற பத்து வயது சிறுவன், தனிமையும் பள்ளியில் துன்புறுத்தலையும் சந்திக்கிறான். அதிலிருந்து தப்பிக்க, அவன் பிளானெட் ட்ரூல் என்ற கனவுல...