இந்த படத்தை கண்டிப்பாக எல்லோருமே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும். ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் திறமை மிக்க இளைஞராக நமது கதாநாயகர் விவசாயத்தை மீட்டெடுக்க களத்தில் இறங்குகிறார். ஆனால் அவரால் தாங்க முடியாத அளவுக்கு அரசியல் சக்திகளும் கார்ப்பரேட் வியாபார சக்திகளும் அவருக்கு நஷ்டத்தையும் வலிகளையும் பாதிப்புகளையும் கொடுக்கின்றனர். இது எல்லாமே கடைசியில் எங்கே சென்று முடியப்போகிறது. விஞ்ஞான அறிவை வைத்து தன்னை விட பல மடங்கு சக்திவாய்ந்த அமைப்புகளை தோற்கடிக்க கதாநாயகர் பண்ணும் அனைத்து முயற்சிகளுமே சிறப்பாக வெற்றியை கொடுத்ததா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். இந்த படத்துடைய மொத்த ரொமான்ஸ் போர்ஷனுமே படத்துக்கு ஒரு ஃபார்மாலிட்டிக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர்த்து படத்துடைய கதை வேறு ஒரு ஜெனரில் இருக்கிறது. கத்தி படத்தில் தண்ணீர் பற்றாற்குறை என்று விவசாயத்துக்கு கார்ப்பரேட்டுகளால் கொடுக்கப்படும் ஒரு பிரச்சனையை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் என்றால் இந்த படத்தில் விவசாயம் முதல் சந்தைப்படுத்துதல் வரைக்கும் கார்ப்பரேட் எந்த அளவுக்கு விவசாயம் பண்ணும் மக்களை தொந்தரவு பண்ணுகிறார்கள் என்று மிகவுமே சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த படத்துடைய இயக்குனருக்கு கண்டிப்பாக நமது வலைப்பூவின் சார்பாக மிகப்பெரிய பாராட்டுகளை கொடுத்தே ஆகவேண்டும். இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகள் கண்டிப்பாக இருந்திருக்கும் ஆனால் எடிட்டிங் பண்ணும்போது போதுமான நேரம் இருக்காது என்பதால் நிறைய நல்ல விஷயங்கள் இந்த படத்தில் சொல்லப்படாமல் போனதோ என்று ஒரு சின்ன கெஸ்தான். இந்த படம் நல்ல படம். கம்பேரிஸன் பண்ணும்போது நிறைய படங்களை விட சிறப்பான கதைக்களத்தை இந்த படம் கொடுக்க முயற்சித்துள்ளது என்றே சொல்லலாம்.
No comments:
Post a Comment