Wednesday, March 27, 2024

TAMIL TALKS - EP. 58 - இப்படியே போனால் என்ன ஆகப்போகிறதோ ?

 






இந்த உலகத்தை பார்க்கும்போது தெளிவான வெறுப்பு மட்டும்தான் கண்களுக்கு தெரிகின்றது. இந்த உலகத்தில் மெடீரியல்லிஸ்டிக்காக இருக்க வேண்டாம் என்று சொல்கின்றார்கள். இருந்தாலும் மெடீரியல் பொருட்களால் மட்டும்தான் வாழ்க்கையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லா அன்புமே தற்காலிகமானது அவைகளில் நிரந்தரமான அன்பு என்று எங்கே உள்ளது ? பெரும்பாலும் முட்டாள்களுக்கு மட்டும்தான் அன்பு பொது சொத்து போல பயன்படுகிறது. புத்திசாலிகள் பணத்தையும் பொருட்களையும் அடைந்துவிட்டு சந்தோஷமாக இருக்கின்றார்கள். நம்முடைய வாழ்க்கை நிறைய ஏற்ற தாழ்வுகளை கொண்டது என்பது கண்டிப்பாக புரிகின்றது. ஆனால் தாழ்வான பகுதியில் இருக்கும் ஒருவர் மேலே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக அவரால் முடிவதே இல்லை. காரணம் என்னவென்றால் மேலே இருப்பவர்கள் தரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களை ஒரே நொடியில் தள்ளி விட்டுவிட்டு சந்தோஷமாக போட்டிகளை காலி பண்ணிவிட்டு சென்றுவிடுகிறார்கள் ஆனால் தரையில் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரவேண்டி போராடியவர்கள் மறுபடியுமே தரையில் சென்று விழுந்த காயத்தால் வலிகளை அனுபவித்து கொண்டு மறுபடியும் மேலே வந்தே ஆக வேண்டும். முன்னதாக கஷ்டப்பட்டு மேலே வந்து இருப்பார்கள் அல்லவா ? அந்த கடினமான முயற்சியானது கடைசியில் வேஸ்ட்டாக மாறிவிடுகிறது. மறுபடியும் முன்னதாக கொடுத்த வலியை விட இன்னமும் அதிகமாக வலியை நாம் கொடுக்க வேண்டியது உள்ளது. இந்த விஷயங்களுக்கு நாம் என்னதான் பதில் சொல்ல முடியும் ? நன்மை என்ற விஷயத்தை சிறிய அளவில் செடியாக வளர்த்தாலும் கூட அப்படியே வேரோடு பிடுங்கி தூக்கியெறிந்துவிடுகிறார்கள். மனதுக்குள்ளே கொடிய எண்ணங்கள் இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை பாதுகாப்பு பண்ணிக்கொள்ள முடிகிறது. இப்படித்தான் இந்த உலகம் வேலை பார்க்கிறது. நமக்குள்ளே எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தும் அவைகளால் எந்த பலனும் இருக்காது. நம்மை நாம் மாற்றிக்கொள்வது கடினம். தினசரி சுமாராக வேலை பார்க்கும் ஒரு சம்பளதாரரை ஒரு மாதம் மட்டும் இரவு பகல் பாராது இருபத்து நான்கு மணி நேரமும் கடினமாக வேலை வாங்கி பாருங்கள் அவர் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார் என்பதை நீங்களே பார்க்கலாம். தினம் தினம் ஒரு நல்ல உடற் பயிற்சியை மேற்கொள்வதும் கஷ்டம் அல்லது தினமும் நாம் பண்ணும் ஒரு தேவையற்ற வழக்கமாக மாறிப்போன செயலை விடுவதும் கஷ்டம். இருந்தாலும் மொத்தமாக இந்த உலகம் என்ன சொல்கிறதோ அதனையே நாம் எப்போதுமே கேட்டாக வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் சத்துள்ள சாப்பாடு கிடைப்பதே கடினமானது. இளமை என்ற வயதில் மட்டும்தான் உலகத்தில் நம்மை சுற்றி இருக்கும் இடங்களில் கொஞ்சமாகவாவது மாற்றங்களை கொண்டுவர முடியும். அதுவே முதுமை அடைந்துவிட்டால் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். வயது முதிர்ச்சியால் உடல் சோர்ந்து போன பின்னால் நம்மால் எந்த வேலையும் செய்துகொண்டு இருக்க முடியாது. சாப்பாட்டுக்காக நாம் இன்னொருவரை சார்ந்து இருக்க வேண்டும். இப்போது மெடீரியல்லிஸ்டிக்காக இருக்காதே என்று வசனம் பேசும் ஆட்கள்தான் அப்போது பொருள்களை சேகரித்து வைத்துக்கொண்டு தற்பெருமையாக பேசிக்கொண்டே இருப்பார்கள். கடந்த 20000 ஆண்டுகளில் இந்த உலகத்தின் மொத்த கலாச்சாரம் மாறவே இல்லை. வலிமை மிக்க மனிதர்கள் சந்தோஷமிக்க வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்க முடிகிறது. இல்லாதவர்கள் படும் கஷ்டங்கள் இத்தனை வருடங்களிலும் அதிகரித்துக்கொண்டுதான் சென்றுக்கொண்டு இருக்கிறதே தவிர்த்து குறைந்து போன பாடு இல்லை. இதனால் இந்த போஸ்ட் மூலமாக நான் இந்த உலகத்துக்கு சொல்ல வரும் கருத்து ஒன்றுதான். இந்த உலகத்தை மாற்ற நம்ம மொத்த சக்தியும் போதாது 100 வருடம் ஆயுள் காலமும் போதாது. உலகம் இப்படித்தான் இருக்கும். எப்போது பார்த்தாலும் பாதிப்புகள் மனிதர்களால் எல்லோருக்குமே நடந்துகொண்டுதான் இருக்கும். இல்லை நான் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்துவிடுவேன் என்று களத்தில் இறங்கினால் அடுத்த பத்து வருடங்கள் ஆனாலும் கடவுள் கொஞ்சமுமே சப்போர்ட் பண்ண மாட்டார். செல்வம் , உடல் நலம் , மனதின் தெளிவு என்று எல்லாவற்றையுமே இழந்து நடு தெருவில் நிற்க வேண்டும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். 

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...