Tuesday, March 26, 2024

TAMIL TALKS - EP. 57 - இந்த வகை விஷயங்களை தடுத்தே ஆகவேண்டும் !


போதை பழக்கம் இந்த காலத்தில் மிகவும் அதிகமாக இருக்க காரணம் என்ன ? உலகம் முழுவதும் நிறைய காரணங்கள் இருக்கிறது ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முன்னதாக உள்ளூர்களில் பொருட்கள் விற்பனை ஜேக ஜோதியாக எப்படியோ சப்ளை வந்து விற்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்க்கலாம். இந்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை பண்ணும் அந்த கெட்டவர்கள் யார் என்று யாருமே கண்டுபிடித்து தண்டனைகளை கொடுப்பதே இல்லை. பழுக்க காய்ச்சிய இரும்பை சம்மட்டியால் அடிப்பது போல இரும்பு கரம் கொண்டு இந்த குற்றங்களை அடக்க வேண்டும் என்று அனைவரும் போராடினால்தான் இத்தகையை குற்றங்களை அடக்க முடியும். இந்த உலகம் ஒரு சாச்சுரேஷன் பாயிண்ட் அதாவது திகட்டக்கூடிய நிலை என்ற ஒரு அளவை அடைந்துவிட்டது என்று சொல்லலாம். மக்கள் எப்போதுமே புது விதமான சந்தோஷங்களை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வகையான பொருட்கள் உட்கொள்ள ஆரம்பித்தால் சாப்பாடு சாப்பிடுவது முதல் வயிற்றை சுத்தம் செய்வது வரை எல்லவற்றுக்குமே மோட்டிவேஷன் என்பது மண்டைக்குள்ளே கிடைக்க வேண்டும் என்றால் கொஞ்சமாக இந்த பொருட்களை உட்கொண்டால் மட்டும்தான் முடியும் என்று போதை பொருட்கள் மூளைக்குள் நன்றாக பதிவு பண்ணி வைத்துவிடுகின்றன. ஒரு நகைச்சுவை காட்சியில் கூட ஹீரோ அவரது நண்பரிடம் விளையாட்டாக இந்த வார்த்தைகளை சொல்லுவார் "மனிதனாக பிறந்தால் ஏதேனும் ஒரு தீய பழக்கம் இருக்க வேண்டும் அப்போதுதான் அவன் வாழ்க்கை முழுமை அடையும்". இப்படி எந்த அவசியமே இல்லாமல் போதை பொருட்களை இரத்தத்தில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்து குட்டி சுவாராக போகும் இன்னொரு வகை கூட்டமுமே இருக்கிறது. விளையாட்டாக சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். என்ன கொடுமை பாருங்களேன் ? மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்தே போதை மற்றும் பொழுதுபோக்கு மனிதனின் வாழ்க்கையில் அவசியமானது என்று ஒரு கற்பனையான விதிகளை சமூகம் உருவாக்கிவிட்டது. மனிதனுடைய பெரிய உழைப்பையும் பெரிய வெற்றிகளையும் தடுக்கும் நச்சு காரணிகள் இந்த போதை மற்றும் பொழுதுபோக்கு. எந்த வகை போதையும் உடலுக்கு கேடானது. எந்த வகை பொழுது போக்கும் மனதுக்கு கேடானது. மனிதனுக்கு திருப்தி மற்றும் மன நிறைவே இல்லாமல் பண்ணுவதோடு மட்டுமல்லாது மனிதனை எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் பிச்சைக்காரனாக கொண்டுவந்து நிறுத்துகிறது. என்னை கேட்டால் இயந்திரங்களை கொண்டு இரும்பை உருக்கி தூய்மைப்படுத்துவதை போல போதையில் சிக்கியவர்களை நன்கு தூய்மைப்படுத்தி மறு சுழற்சி செய்ய வேண்டும். போதை பழக்கம் இருப்பவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக மட்டுமே இருக்கின்றார்கள். அவர்களால் முடியவில்லை. அடிப்படையில் அவர்களுக்கு வாழ்க்கையை தொடர்ந்து வாழவும் சோகங்களை தூரத்தவும் ஏதோ ஒரு வகை சந்தோஷம் தேவைப்படுகிறது, ஆகவே போதையை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த மாற்றத்தை கொண்டுவந்தாக வேண்டும், நெருப்பில் பொருட்களை அழித்து ஆதாரம் இல்லாமல் சாம்பலாக மாற்றுவதை போல  இந்த விஷயங்களை வரலாற்றில் இருந்தே அழிக்க வேண்டும். 

 

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...