Tuesday, March 26, 2024

TAMIL TALKS - EP. 56 - ஸ்மார்ட்வொர்க் என்பது மக்களை பாதிக்கிறது !!

 



பொதுவாக இதுபோன்ற விஷயங்களை நான் நம்புவதே இல்லை. இங்கே அதிர்ஷ்டம் என்பது நிஜமாகவே இருக்கக்கூடிய கான்ஸேப்ட்டா ? விஷயம் என்ன மனதுக்குள் சென்றுகொண்டு இருக்கிறது என்றால் வருமான வரித்துறையில் முறையாக கணக்கு காட்டும் பட்சத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஒரு சராசரிக்கு குறைவான நிலையில் இருக்கும் இளைஞரும் ஆசைப்பட்டது போல வீடு , கார் , ஃபர்ன்னிச்செர் , திருமணம் , குழந்தைகள் , மேற்படிப்பு , காப்பீடு , சேமிப்பு , நகைகள், தொழில் கட்டிடம் என்று எல்லாவற்றையும் அடைந்துவிடுவார்கள். இருந்தாலுமே ப்ரிவிலேஜ் பக்கமே வீசும் காற்று ஒரு போதும் அன்டேர்கிரேடு வாழ்க்கையில் இருப்பவர்கள் பக்கம் வீசவே இல்லையே ? தேவைப்படக்கூடிய ஆசைகளை எல்லாமே இவர்கள் அடையவேண்டும் என்றால் கையில் மிகப்பெரிய தொகை இருந்தால் மட்டுமே முடியும். இல்லையென்றால் கண்டிப்பாக முடியாது அல்லவா ?. அடுத்த 7 தலைமுறைக்கு இன்ஹேர்ரிட்டேன்ஸ் என்று நிறைய சொத்துக்கள் வைத்து இருப்பதால் புது புது விஷயங்களையா நஷ்டம் இல்லாமல் செய்வதற்கும் சோதனை முயற்சிகளை எடுத்து பார்க்கவும் எப்போதுமே பிரிவிலேஜ்களில் இருப்பவர்களிடம் காசு பணம் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் சம்பாதிப்பது மற்றும் சொத்துக்களை சேர்ப்பது என்பது சுலபமான ஒரு விஷயமாக இருக்கலாம் ஆனால் இப்போது இந்த காலத்தில் எல்லாம் ஹார்ட் வொர்க் பண்ணினால் கூட நேர்மையாக 10000 சம்பாதிக்க முடிவது இல்லை. எங்கே பார்த்தாலும் எல்லோருமே தப்பாக மட்டும்தான் நடந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு மனிதனுடைய உழைப்பை எந்த அளவுக்கு பணமாக மாற்ற முடிகிறதோ அந்த அளவுக்கு வாழ்க்கையை பின்னாட்களில் பணம் எப்படியாவது காப்பாற்றிவிடுகிறது. பணம் ஒரு ஒரு மனிதனின் அடிப்படை தேவையாக உள்ளது. இப்போது நான் மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களுமே ஆசைகள் என்றும் கனவுகள் என்றும் சொல்லலாம் ஆனால் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் இந்த சமூகத்தில் ஆடவர்  சம்பாதிக்க வேண்டிய உருவாக்க வேண்டிய அடிப்படையான தேவைகள் என்பதே நிதர்சனமான உண்மை. இவைகளை கூட ஹார்ட் வொர்க் பண்ணுபவர்களால் சம்பாதிக்க முடிவதே இல்லை. இன்னொரு பக்கம் ஸ்மார்ட் வொர்க் பண்ணுபவர்கள் , அதாவது ஸ்மார்ட் வொர்க் என்பது வேறு எதுவும் அல்ல அடிப்படையில் அடுத்தவர்களின் உழைப்பை எடுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருப்பதுதான். எப்படி பார்த்தாலும் ஸ்மார்ட் வொர்க் பண்ணுபவர்கள் ஹார்ட் வொர்க் பண்ணுபவர்களை விட குறைவான ரிஸ்க் எடுத்து அதிக இலாபம் பார்க்கின்றார்கள். ஹார்ட் வொர்க் பண்ணுபவர்கள் கடன்களில் சிக்கிக்கொண்டு தரமற்ற உடைகள் தரமற்ற சாப்பாடு மற்றும் கெட்ட பழக்க வழக்கங்கள் என்று அனைத்தாலுமே பாதிக்கப்படுகிறார்கள். இந்த அதிர்ஷ்டம் என்ற ஒரு கான்ஸேப்ட்டை வைத்துக்கொண்டு எதிர் தரப்பு என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும் எப்படி வேண்டுமென்றாலும் செய்யட்டும் , "நீ பிறப்பால் தாழ்ந்தவன். உன்னால் வசதி வாய்ப்புகளை பெறவே முடியாது பெறவும் விடமாட்டோம். நாங்கள் செலேக்ஷன் பண்ணிய வெற்றியாளர்களுக்கு அடிமையாக வேலை பார்த்து பழைய சாதம் சாப்பித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். நீ ஒரு ஒரு முறை வெற்றியை அடைய நினைத்தாலும் ஒரு செடியை நறுக்குவதை போல உன்னுடைய முயற்சிகளை நறுக்கிவிடுவேன்" இந்த மாதிரியான வார்த்தைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தால் அது மிக பெரிய மன்னிக்க முடியாத தவறு ஆகும். என்னிடம் இருந்தே தண்டனைகள் மோசமானதாக எதிர் தரப்புக்கு கிடைக்கும்.  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...