ஒரு செயலை செய்வதால் இன்னொருவர் பாதிக்கப்படுவதாக இருந்தால் கண்டிப்பாக அத்தகைய செயலை செய்யும் முன்னால் ஒரு முறைக்கு ஆயிரம் முறையாவது யோசித்து இருக்க வேண்டும். அப்படி யோசிக்காமல் அப்படிப்பட்ட செயல்களை செய்துவிட்டால் பின்னாட்களில் நமக்கு வரும் அத்தனை எதிர்ப்புகளையும் நாம் தனித்து நின்றே வெற்றி அடைய வேண்டும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர் தரப்பிடம் நான் சொல்லிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால் என்னுடைய கடந்த காலத்தில் என்னை நிறைய செயல்களை செய்ய அனுமதித்து இருந்தால் இந்த நிகழ் காலம் வெற்றிகரமான முறையில் இருந்திருக்கும். அப்படி இருக்கும்போது எதிர் தரப்பு என்னுடைய கடந்த காலத்துக்கு அதிக பாதிப்பு கொடுத்து வயதையும் காலத்தையும் வீணாக செலவு செய்ய வைத்து மாற்ற முடியாத மன்னிக்க முடியாத பாதிப்புகளை கொடுத்ததுக்கு இப்போது என்ன பண்ணலாம் ? இங்கே எனக்கு நேர்ந்த பாதிப்பு அதிகம் மேலும் இழக்க கூடாதது எல்லாமே இழந்துகொண்டு இருந்தேன். மறுபடியும் அது கிடைக்காது. என்னை தவிர்த்து அனைவருக்கும் தொட்ட விஷயங்கள் எல்லாமே வெற்றியாக அமைகிறது. இனிமேலும் என்னுடைய செயல்களில் தவறு இருப்பதாக மனதை சோப்பு பவுடர் போட்டு சலவை பண்ணி மூளையை கழுவும் வேலைகளை எதிர் தரப்புகள் செய்து தாழ்வு மனப்பான்மை உருவாக்க நினைக்கின்றார்கள். இது எல்லாமே தப்பாக உள்ளது. காயங்களை இவர்களே உருவாக்குவார்களாம் பின்னாட்களில் மருந்தை போட்டுவிட்டு நல்லவரை போல நடிப்பார்களாம். இந்த உலகம் இப்போது சென்றுகொண்டு இருக்கும் நிலையை பார்க்காமல் எதிர் தரப்பு பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகும் என்ற லாஜிக்கில் வேலைகளை பார்ப்பது மிகவுமே பரிதாபமானது. என்னை விட்டுவிடுங்கள் சாவை கண்டு நான் அஞ்சியதே இல்லை. ஆனால் எதிர் தரப்பின் இந்த முன்யோசனையற்ற விரோத நோக்கமுள்ள அணுகுமுறை என்னை தரம் தாழ்த்த வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. இங்கே நான் எதிர் தரப்புகளுக்கு சொல்லிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால் உங்களுடைய சக்திகள் எல்லாமே எனக்கு சொந்தமானது. எனக்கு பைனல் கவுன்ட் டவுன் போடும் முன்னால் உயிரோடு இருக்கும் ஒரு ஓரு உயிரையுமே பாருங்கள். இந்த மாற்றத்தை நீங்கள் பண்ணிதான் ஆகவேண்டும். உங்களிடம் சக்திகள் இருப்பதால் உங்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எனக்கு புரிகின்றது. ஆனால் ஒரு ஒரு முறையும் எனக்கு நிரந்தர இழப்பாகவே இருக்கிறது ? இன்று நான் அப்படியே நின்று காத்திருந்தால் நான் இழந்த விஷயங்கள் எனக்கு கிடைத்து விடுமா ? இன்னொரு கேள்வி நான் இழந்த விஷயங்களை பெற்றவர்கள் எல்லோரும் என்னை விட இப்போது வலிமை மிக்க மனிதர்களாக இருக்கின்றார்கள். ஒரு ஒரு சின்ன சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் என்னை கொடுமைப்படுத்துவார்கள். என்னுடைய கைகளை இப்படி கட்டிப்போடுவது பொதுவான பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து. மறுபடியும் மறு யோசனை பண்ணுங்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அடுத்து என்ன பண்ண வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்ததே !
No comments:
Post a Comment