Saturday, March 30, 2024

GENERAL TALKS - இந்த நொடி நாம் மாற்றத்துக்கான நொடியாக !

 


இது வரைக்குமே நடந்தது எல்லாவற்றையுமே விட்டுவிடுவோம். இந்த உலகம் ஒரு மிகப்பெரிய போராட்டமாக மட்டும்தான் சென்றுக்கொண்டு இருக்கிறது. நம்ம வாழ்க்கையில் நாம் என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் நம்ம வாழ்க்கை முடியப்போவது நெருப்பில் வெந்துபோன சாம்பலில்தான். ஒரு மனுஷனுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது. இருந்தாலுமே எது டேஸ்டினி என்ற கேள்வி எனக்குள்ளே இருந்துகொண்டே இருக்கிறது. பொதுவாக டேஸ்டினி போன்ற ஒரு இமாஜினேஷன் நிறைந்த கான்ஸேப்டை நம்ப மாட்டேன் ஆனால் சமீப காலமாக டேஸ்டினியை முழுவதுமாக நம்ப ஆரம்பித்துவிட்டேன். ஒரு கதையை தொடங்கும்போதே முடிவுகளை பற்றி யோசிக்காமல் தொடங்குவது சிக்கலானது. இந்த வகையில் என்னுடைய வாழ்க்கைக்கு நானும் ஒரு முடிவை செலக்ஷன் பண்ணி வைத்து இருக்கின்றேன். இந்த செலக்ஷன் பண்ணிய முடிவை அடையவேண்டும் என்றால் என்னை நானே நூறு சதவீதம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாக நான் தோற்கக்கூடிய மனிதன் இல்லை, என்னுடைய வாழ்க்கையில் வெற்றிகள் அதிகமாக இருந்தால்தான் வெற்றிதான் வெற்றியின் அடுத்த படி என்ற கான்ஸேப்ட் போல தொடர்ந்து என்னால் ஜெயித்துக்கொண்டே இருக்க முடியும் என்று முடிந்தவரைக்கும் நான் வெற்றிகளை சேர்த்துக்கொண்டு இருக்கின்றேன், பெரும்பாலான நேரங்களில் எனக்கு போதுமான அனுபவம் இல்லாமல் நன்றாக சிக்கலில் மாட்டிக்கொள்கிறேன். இருந்தாலுமே இன்றைய தேதிக்கு இது வரையில் நாம் செய்த அனைத்து செயல்களை விடவும் இனிமேல் நாம் செய்யும் செயல்கள் மிகவும் புதிதாகவும் தெளிவாகவும் இருப்பது போல நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். இன்டர்நேஷனல் லேவல்லில் கடலில் குப்பைகளை கொட்டும்போது உருவாகும் பிளாஸ்டிக் மாசுபாடு இந்த உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்களை அழித்துக்கொண்டு இருக்கிறது. நான் இன்னுமே எதுவுமே செய்யாமல் இருந்தால் அதுவே உலகத்துக்கு பேராபத்தாக முடியும் கட்டாயம் உள்ளது. இருந்தாலும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் போராடும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். "உனக்கு சக்திகளுக்கும் சாகாவரத்துக்கும் என்ன தகுதி இருக்கிறது ?" என்று எதிர் தரப்பில் இருந்து கேட்கலாம். கடந்த காலத்தில நான் எதுவுமே பண்ணவில்லை என்று குற்ற உணர்வை விதைக்க முயற்சிக்கும் ஜீனியஸ் மூளையை எல்லாம் எதிர் தரப்பு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதுவரைக்கும் நான் அடைந்த நஷ்டத்துக்கு எல்லாம் எதிர் தரப்பு பண்ணிய காரியங்கள்தான் காரணம். இவர்கள் மட்டும் சக்திகளையும் சாகாவரத்தையும் வைத்துக்கொண்டு உருப்படியாக எதுவுமே செய்ய மாட்டார்களாம். இதுவே வேறு யாராவது அந்த சக்திகளை கொடுங்களேன் என்று கேட்டால் அதுவுமே கொடுக்க மாட்டார்களாம். தானும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். செய்பவர்களையும் விட மாட்டேன் என்கின்றார்கள். இவர்களை என்னவென்று சொல்ல ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...