Thursday, March 28, 2024

GENRAL TALKS - நம்பிக்கை இல்லை ! நம்பிக்கை சுத்தமாக இல்லை !

 




இந்த உலகத்தின் மேலே இதுக்கு முன்னாடி இருந்தது போல ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை. சமீப நாட்களாக நொடிகள் மற்றும் நிமிடங்கள் கொண்ட இயற்பியல் காலமும் வேகமாக எதிர் தரப்பால் நகர்த்தப்பட்டது. காலம் மெதுவாக நகர்ந்தால் எங்கே நான் பயன்படுத்தி வெற்றி அடைய போகின்றேனோ என்று ஒரு பயத்தை என்னால் எதிராக நிற்கும் தரப்பில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஒரு முறையும் என்னை தோல்வி அடைய வைத்தால் ஒரு மிகப்பெரிய சாதனையை பண்ணியது போல சந்தோஷப்பட்டு என்னை தோற்கடித்த நாட்களை மட்டும் மிகவும் ஆனந்தமாக கொண்டாடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்குள்ளே இருக்கிறது. இன்னைக்கு தேதிக்கு என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்னவென்றால் என்னுடைய பொறுமை தேய்ந்துகொண்டு இருக்கிறது. இப்படி நான் பாதிக்கப்படுவதை பார்த்து உங்களுக்கு என்ன பொழுது போக்காக இருக்கின்றதா ? நான் இனிமேல் வலைப்பூவில் தேவை இல்லாததை பேசி நேரத்தை அதிகமான வகையில் வேஸ்ட் பண்ண போவது இல்லை. நானும் நிறையவே யோசித்து பார்த்துவிட்டேன். எதிர் தரப்புடைய ஆதரவும் எனக்கு கிடைத்தால் மட்டும்தான் என்னால் சாதிக்க முடியும். இதனால் நான் இனிமேல் செய்ய வேண்டியது நன்றாக பேசி எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். என்னுடைய பேச்சுக்களில் இருக்கும் நியாயமான கருத்துக்கள் எல்லாம் எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு புரிந்துகொண்டு அவர்களுடைய சக்திகளை எனக்கு கொடுக்க வேண்டும். இவர்களால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய இல்லாமையால் என்னை ஒரு சிறையின் கைதியை போல சூழ்நிலைகளுக்கு உள்ளேயும் காலத்தின் விதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயும் நன்றாக அடைத்து வைத்து இருக்கின்றார்கள். இது தவறு. மிக மிக தவறான செயல் இதுவாகும். இந்த உலகத்தில் நிறைய பேர் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டர்கள். உதாரணத்துக்கு மாடர்ன் கலாச்சார வாழ்க்கையில் இருக்கும் சிறப்பான என்ஜாய் பண்ணி வாழும் லைஃப் ஸ்டைல் இனிமேல் எனக்கு கிடைக்காது. இது நான் பல வருடங்களாக ஆசைப்பட்ட ஒரு வகையான திட்டம். இந்த யாக்கை திரி காதல் சுடர் பாடலில் இடம்பெற்ற கலாச்சாரம் போல ஒரு சிறப்பான இசையுடன் இணைந்த கலாச்சாரம் நான் பெர்சனல் என்று ஆசைப்பட்ட ஒரு விஷயம். இனிமேல் அந்த வகையான விஷயம் எனக்கு கடைசி வரைக்கும் கிடைக்காது. இதுவே எனக்கு ஒரு பெரிய தண்டனைதான். கடந்த காலங்களில் சராசரிக்கும் மேலேதான் நான் எப்போதுமே வாழ வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நடந்தது எல்லாமே சராசரிக்கும் மிக மிக அற்பமான ஒரு வாழ்க்கை. சராசரி என்ற ஸ்டாண்டர்ட் வாழ்க்கையில் 10 பவர் 15 டைலுஷன் என்ற அளவுக்கு சாம்பிள் எடுத்தால் கடைசியில் என்ன மிஞ்சும் ? அந்த அளவுக்குத்தான் என்னுடைய வாழ்க்கையில் எனக்கு எதிராக இந்த எதிர் தரப்புகள் பண்ணிய விஷயங்களால் கிடைத்து இருக்கிறது. நானும் உயர்வான இலட்சியமாக இருக்கும் மெரேஸியாஸை அடைந்து விடலாம் என்று பார்க்கின்றேன். அதுவும் எனக்கு நடக்கவே இல்லை.

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...