கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி..
தூரம் போனாலே என்னமோ பண்ணிடுதே ! இதயம் நின்னுடுதே.
பேச கேட்டாலே மதியும் கேட்டுடுதே மழையும் கொட்டிடுதே
திண்ணைக்கு பேச்சானா , சென்னைக்கு பீச்சானா..
இன்னைக்கு ரீச் ஆனா ! குத்து குத்து.. டப்பான்குத்து !
எத்தனையோ எத்தனையோ கற்பனைதான் !
அவளுடைய அழகு ஒரு அரியணைதான் !
அவளை பார்த்த கண்ணு ரெண்டும் ஆசையால தூங்கிடாம
அவளை தொட்ட கை இரண்டும் வேற வேலை பார்த்திடாம
ஏங்கிடுமே ஏங்கிடுமே ஓய்வு இல்லாம
வந்தா வந்தா வந்தா வானவில்லா !
தந்தா தந்தா தந்தா சேதி நல்லா !
கலகலப்பா அவ போறந்து கரைய வெச்சாளே
கிளுகிளுப்பா அவ வளர்ந்து கிழிய வெச்சாளே
தாவி தாவி நடக்குறாளே ! தவில போல அடிக்குறாளே
கொத்தொட பூத்தாளே ! கெத்தோட பார்த்தாளே !
கட்ட கட்ட நாட்டு கட்டை !
கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி..
தூரம் போனாலே என்னமோ பண்ணிடுதே ! இதயம் நின்னுடுதே.
பேச கேட்டாலே மதியும் கேட்டுடுதே மழையும் கொட்டிடுதே
கறி விருந்தா அவ இருந்தா பசி எடுக்காது
அரு மருந்தா அவ அசைஞ்சா ஜுரம் அடிக்காது
வேம்பும் கூட கசந்திடாது ! வெயிலும் வீச துணிஞ்சிடாது
சிங்காரம் தீராது செல்வாக்கும் மாறாது
அங்கம் அங்கம் சொர்க்க தங்கம்
கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி..
தூரம் போனாலே என்னமோ பண்ணிடுதே ! இதயம் நின்னுடுதே.
பேச கேட்டாலே மதியும் கேட்டுடுதே மழையும் கொட்டிடுதே
No comments:
Post a Comment