Saturday, March 23, 2024

GENERAL TALKS - ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான் இப்போது இருக்கிறது !!




இந்த உலகத்தில் சரியான நேரத்தில் சரியான சப்போர்ட் கிடைக்க வேண்டும் அப்போதுதான் எந்த ஒரு சராசரி மனிதனாலும் நன்றாக போராட முடியும். இந்த உலகம் ஒரு மிகப்பெரிய போராட்டம் மக்களே ! தனித்த ஒரு மனிதனாக இங்கே சண்டைபோடுவதை விட யாராவது எப்போதுமே நமக்கு சப்போர்ட் என்று நம்முடைய பக்கத்தில் நின்று சண்டை போட்டுக்கொண்டு நம்மை காப்பாற்ற முயற்சி பண்ணினால் வாழ்க்கையில் நமக்காக யாராவது இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி நம்மோடு இருக்கிறது. நான் என்னுடைய வாழ்க்கையில் வெற்றிக்காக எடுத்து இருக்கும் இந்த முயற்சிகளில் சொல்லப்போனால் யாருடைய சப்போர்ட்டும் இல்லை. மட்டமாக பேசுகிறார்கள். நான் வெற்றி அடைந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இங்கே யாருக்குமே இல்லை. எல்லோருமே எப்போது என்னுடைய உயிர் என்னை விட்டு பிரியும் என்றுதான் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். யாருக்குமே அக்கறை இல்லை. இருந்தாலுமே இதுதான் நான் தேர்ந்தெடுத்த துறை. மற்றவர்களுடைய நன்மைக்கு ஆசைப்படடால் அவர்களுக்காகவும் சேர்த்து நான் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு எல்லாம் இளக்காரம் மட்டும்தான் மனதில் இருக்கிறது. இந்த சமூகமே எப்போதுமே ஒரு மனிதன் மனிதனாக ஆடவராக பிறந்தால் குடும்பத்தை காக்கும் நாயாகவும் சம்பளத்துக்கு உழைத்து போடும் நாயாகவும் நன்றியுடனும் விசுவாசம் நிறைந்தும் காணப்பட வேண்டும் என்றே சொல்கின்றார்கள். புத்தம் புதுசாக நல்ல தினுசாக ஒரு சுய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பண்ணப்போகிறேன் என்றால் அசிங்கமாக பார்க்கின்றார்கள். எல்லாமே மாறவேண்டும்.  இங்கே மற்றவர்களுக்கு நிறைய பாதைகள் இருக்கு, நமக்கு இந்த ஒரே ஒரு பாதை மட்டும்தான் . இதுதான் நமக்கு இருக்கும் ஒரே ஒரு ஆப்ஷன். அடுத்து என்ன நடந்தாலும் இந்த எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆப்ஷன் மட்டும்தான் இப்போதைக்கு கைவசம் இருக்கிறது. நமக்கு இருக்கும் இந்த பாதையை எவன் என்ன பேசினாலும் இப்போதைக்கு நேரடியாக சந்தைக்கு போகாமல் நோட் பண்ணி வைத்துக்கொண்டு வெற்றி அடைந்து காட்டிய பின்னால் பேசியவர்கள் எல்லாம் பொறாமையால் விஷத்தை கக்க வரும்போது வாயை உடைக்க வேண்டும். வெற்றி இவர்களுக்கு வேண்டாம் என்றால் வாயை மூடிக்கொண்டு சென்றுவிட வேண்டியதுதானே. வெற்றியை அடைபவர்களை எதுக்காக தடுத்து நிறுத்துகின்றார்கள் ? இவர்களின் கருத்துக்கள் மிகவும் புனிதமான பொருட்களால் உருவாக்கப்பட்டது என்ற நம்பிக்கையில் கண்களை மூடிக்கொண்டு கருத்துக்களை சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் இவர்களின் கருத்துக்கள் செரிமானம் அடைந்த உணவுகளின் வெளியீடு போன்றவை என்பதை வாழ்க்கை இவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அப்போதுதான் இவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வார்கள் !! 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...