இங்கே நடக்கக்கூடிய விஷயங்களில் மிகப்பெரிய தவறுகள் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை பார்க்காதே , கேட்காதே , பேசாதே என்ற அடிமைத்தனத்தை நமக்கு எந்த வகையில் சமூகம் நடந்துகொள்கிறதோ அதே வகையில் சமூகமும் கொடுத்துவிடுகிறது. ஒரு சின்ன குருவி கூட்டுக்குள்ளே காலம் முழுக்க வாழவேண்டும் என்று மட்டும்தான் நாம் ஆசைப்படுவோம். இது சம்மந்தமாக திரைப்படங்களின் காட்சிகளை போல யோசித்து பார்த்தால் நம்ம வாழ்க்கையில் நாம் இனிமே செய்ய வேண்டிய செயல்கள் என்ற பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த செயல்களை செய்ய வேண்டும் என்றால் நாம் முன்னதாக சொல்லக்கூடிய அந்த குருவிக்கூடு வாழ்க்கையை நடத்தும் அணுகுமுறை கண்டிப்பாக ஸேட் ஆகாது. ஒரு பருந்து போல ஆகாயத்தை மொத்தமுமே கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பறக்க வேண்டும். இருந்தாலும் இந்த அடக்கு முறை நடப்பில் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை. இதனை ஒரு பக்கம் விட்டுவிடுங்கள். இந்த அடக்குமுறை கலாச்சாரம் நம்முடைய சுதந்திரமான வாழ்க்கையை பறித்துக்கொண்டு இருப்பதால் நமக்கு சக்திகள் இருந்தாலுமே அவைகளை கடைசி வரைக்குமே பயன்படுத்தாமல் வீணாக மட்டுமேதான் போகிறோம். நன்றாக சுவையாக சமைக்கப்பட்ட உணவுகள் யாருமே சாப்பிடாமல் வீணாக குப்பைக்கு செல்வது போல இந்த விஷயங்கள் நடக்கிறது. எல்லாமே கடைசியில் வேஸ்ட் என்று ஆகிறது. கோபப்பட கூடாது கோபமே படக்கூடாது என்றால் மாற்றங்கள் எப்படி வரும். பாதிக்கப்பட்டது நான் என்றால் பாதிப்புகளை கொடுத்தவர்களுக்கு தண்டனைகள் என்பதை நான் எப்படித்தான் கொடுக்க முடியும். இப்போது என்னால் ஒரு பாதிப்பு என்றால் எதிர் தரப்பு என்னை சும்மா விட்டுவிடுமா ? இல்லையென்றால் நான் எதிர் தரப்பில் ஒரு பெரிய தொகையை கடனாக பெற்றுவிட்டால் அந்த கடனில் குறைந்தது 10 சதவீதம் ஆவது நான் கேட்டேன் என்பதற்காக குறைத்துதான் கொடுக்கப்போகிறார்களா ? எதிர் தரப்பு இவ்வளவு குளிர் இரத்த மனதில் கடுமையாக நடந்துகொண்டு இருக்கும்போது என்னிடம் மட்டுமே அன்பை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் ஆனது. இத்தனைக்கும் நான் படுகிற கஷ்டம் அனைவருமே அறிந்ததே. இந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நான் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே எனக்கு எதிராக மட்டும்தான் வந்து விடிகிறது. தெரியாமல் நடந்தால் பரவாயில்லை. எல்லாமே வேண்டுமென்றே நடந்துகொண்டு இருக்கிறது. நான் வேண்டுமென்றே கஷ்டப்பட வேண்டும் மேலும் வேண்டுமென்றே வலியை நான் அனுபவிக்க வேண்டும் என்று எதிர் தரப்பு நினைப்பது எல்லாமே வேறு விஷயம். நான் பாதிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று நினைப்பதை கூட நான் மன்னிக்கலாம். இப்போது உச்சகட்ட பிரச்சனை என்னவென்றால் இந்த உலகத்துக்கு மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். உங்களிடம் ஆயிரம் மாயாஜால சக்திகள் இருந்து இருக்கலாம் ஆனால் இந்த உலக மாற்றத்துக்கு மாயாஜாலம் தேவையே இல்லை. மாயாஜால சக்திகளுக்குமே அப்பாற்பட்ட உண்மையான சிறப்பு திறன்கள் இந்த உலக மாற்றத்தை உருவாக்க தேவைப்படுகிறது. எதிர் தரப்புக்கு நான் சொல்லிக்கொள்ளும் விஷயம் இந்த சிறப்பு திறன்களை வேறு எவராலுமே கொண்டு வர முடியாது. இந்த விஷயத்துக்கு காலமோ , நேரமோ , மாயாஜாலமோ அல்லது அறிவியலோ தேர்ந்தெடுத்த ஒரு நபர் என்பது நான்தான். இது என்னுடைய நம்பிக்கை இல்லை. இதுதான் உண்மை. உண்மை கசப்பானதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் பொய்களும் கற்பனைகளும் மட்டுமே சாதித்துவிட முடியாது. இந்த உலகத்தின் மாற்றம் என்ற குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை மட்டுமேதான் சாதிக்க முடியும்.
No comments:
Post a Comment