நிற்க நேரம் இல்லாமல் வாழ்க்கை நகருகிறது. இன்னைக்கு தேதிக்கு AI அதாவது செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. மனிதனுடைய அனைத்து வேலைகளை செயற்கை நுண்ணறிவு பண்ண ஆரம்பித்துவிட்டதால் நிறைய வேலை இழப்புகள் நடக்கப்போகிறது. செயற்கை நுண்ணறிவை பற்றி பொதுவாகவே எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. மனிதர்கள் மாசம் 20 - 30 ஆயிரம் சம்பளம் வாங்கி குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அது மேலோகத்துக்கு பொறுக்கவில்லை. கோரோனா வைரஸ் பேன்டெமிக்குக்கு பின்னால் யாருக்குமே யாரிடமுமே நம்பிக்கை இல்லை. உலகம் நேருக்கு நேராக சண்டை போடும் போர்க்களமாக மட்டுமே மாறிவிட்டது. கையில் நிறைய காசு இருந்தால் சந்தோஷம் சந்தோஷம் என்றே வாழ்க்கை இருப்பதால் இந்த உலகத்தை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நடப்பு முன்னேற்றங்கள் மாற்றிக்கொண்டு இருக்கிறது என்று யாருக்குமே கவலையே இல்லை. இந்த விஷயங்களை பற்றி கவலைப்படுகிறேன் என்றாலுமே காலம் கடந்துவிட்டது. டெக் உலகத்தில் செயற்கை நுண்ணறிவு பண்ணிய மாற்றங்களால் உலகம் முழுக்க வேலை இழப்பு நடக்கிறது. நம்ம உலகத்தில் மனிதர்களை எல்லாம் வேலையை விட்டு எடுத்துவிட்டு மெஷின்னாக வாங்கி போட்டுவிட்டால் எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்பே இருக்காது. குடும்பத்தை காப்பாற்ற குடும்ப தலைவர்கள் போராட வேண்டிய கட்டாயம் எல்லா குடும்பத்திலும் இருக்கிறது என்பது அறிந்ததே ! இந்த விஷயங்களை கண்டிப்பாக சரி பண்ணி ஆகவேண்டும். போன தலைமுறையில் இதுபோன்ற டெக் விஷயங்கள் இல்லை. விவசாய வேலைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பண்ணினால் கூட சிறப்பான பணம் சம்பாதித்துவிடலாம். இப்போது உலகத்தின் மொத்த பணமும் கம்ப்யூட்டர் பக்கமே சென்றுக்கொண்டு இருந்தால் இயந்திரங்கள் பக்கமே சென்றுகொண்டு இருந்தால் எப்படித்தான் இந்த தலைமுறையால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் ? இத்தனைக்கும் யாரும் யாருக்குமே ஆதரவு கொடுக்கும் மன நிலையில் இல்லை. தடுக்கி விழுந்தாலும் மிதித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற மனதுக்குள்ளே மட்டும்தான் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட உலகத்தில் நாம் செய்யும் செயல்களை கவனமாக இருக்க வேண்டும் இது ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய பிரச்சனை பொல்யூஷன் கலாச்சாரம் காரணமாக மழை குறைந்து விவசாயம் நிறைய செயற்கையான பொருட்களை பயன்படுத்தி உணவை தயாரிக்கும் கலாச்சாரம் வந்துவிட்டது. மண்ணில் விளையவைக்கும் உணவுகளையே நாம் நம்ப முடியாத நிலைமையில் இருக்கின்றோம். இன்றைக்கு தலைமுறை இளைஞர்களுக்கு உடல் பலம் , மனதுடைய தெளிவு மற்றும் ரேஃப்லக்ஸேஸ் என்று நிறைய விஷயங்கள் குறைந்து இருக்கின்றது. காரணம் நச்சு மிக்க உணவுகள். குடும்பத்தில் சாப்பிடும் சாப்பாட்டை விட்டுவிட்டு வெளி சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வாழும் ஒரு வாழ்க்கை வாழ்ந்ததால்தான் காசு பார்க்க முடியும் ஆனால் அப்படி சம்பாதிக்கும் காசையும் நிலைத்து பாதுகாக்க முடியாது/ அதுவுமே உடல்நல குறைவு அவசர செலவு என்று மொத்தமாக காலியாகிறது/ பிறப்பில் இருந்து குளிர் சாதன அறைகளில் சில்லென்று வாழ்ந்த மக்கள் கட்டுப்பாட்டில் இப்போது உலகம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு இருக்கின்றது/ இவர்கள் விளையாட்டாக கிறுக்குவதுதான் பின்னாட்களில் ஏழைகளுக்கு சட்டம் என்று ஆனால் கண்டிப்பாக பூமி தாங்காது கடவுளே ! உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கான்டேமினேஷன் இருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புற்று நோய் ஆபத்துகளில் மாட்டிககொள்கிறார்கள்/ இந்த விஷயங்களை எல்லாம் எப்படித்தான் சரிப்பண்ண போகிறேன் என்று இந்த புள்ளியில் எனக்கும் சரியான திட்டம் இல்லை. எனக்கு மிக அதிகமான சக்தி கண்டிப்பாக தேவைப்படுகிறது. இந்த சக்தியை கொடுக்க வேண்டியது எதிர் தரப்பு என்பதால்தான் பயங்கரமான சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கின்றேன்/
No comments:
Post a Comment