நான் எப்போது எழுதினாலும் கண்டெண்ட் எடிட் பண்ணும் வாய்ப்புகளை கொண்டுள்ளதா என்பதை அவசியம் சோதித்தே களத்தில் இறங்குவேன். காரணம் என்னவென்றால் எழுதுதல் மிகவுமே நுணுக்கமாக ஒரு பிராசஸ். நிறைய நேரங்களில் தரமான கண்டெண்ட் கொடுக்க முடியவில்லை என்று மனதுக்குள்ளே தோன்றுகிறது. குறிப்பாக ஃபிக்ஷன்களை எழுதவேண்டும் என்றால் சுத்தமாக இரு பக்கங்களுக்கு மேலே எழுதவே திணறல் இருக்கிறது. எழுதக்கூடிய வேகம் மற்றும் நேர்த்தி எப்போதுமே ஃபிக்ஷன் வொர்க்களுக்கு தேவையான ஒரு விஷயம். நிறைய நேரங்களில் நான் என்னதான் எழுதினாலும் எனக்கே திருப்திகரமாக இல்லவே இல்லை. இது சம்மந்தமாக யோசிக்கும்போது எல்லாமே கோபம் மட்டும்தான். போதுமான முன்னேற்றத்தை அடையாத கோபம் மட்டும்தான் இருக்கிறது. இந்த எழுத்து துறை நான் மாதாந்திர சம்பளம் வாங்கி வயிற்றை கழுவிக்கொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த துறை கிடையாது. இந்த துறை சார்ந்த வெற்றியை நான் அடைந்தே ஆக வேண்டும். கண்டிப்பாக நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த வகையில் கிடைக்கக்கூடிய வருமானம் எனக்கு கண்டிப்பாக தேவை. இது நான் பின்னாட்களில் உருவாக்கப்போகிற மிகப்பெரிய கம்பெனிக்கு ஆதாரமாக இருக்க போகிறது என்று நம்புகிறேன். இந்த உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் மேஜிக் போல மனதுக்கு தோன்றலாம் ஆனால் அவைகளால் பிளாஸ்டிக் பொல்யூஷன் மாதிரி உலக அளவிலான பெரிய பிரச்சனையை தடுக்க முடியாது. இந்த பிரச்சனையை தடுக்க வேண்டுமென்றால் என்னால் மட்டுமேதான் முடியும். வேறு யாராலுமே இந்த பிரச்சனைக்களுக்காக முடிவுகளை எடுத்தாலும் என் அளவுக்கு யாராலுமே பண்ண முடியாது. வெயிட்.. நான் பேச்சு வாக்கில் டாபிக் மாறிவிட்டேன். இங்கே நான் டிப்ஸ் கொடுக்கிறேன் என்று வந்துவிட்டேன் ஆனால் எனக்கே போதுமான டாலெண்ட் இருக்கிறதா என்றால் சந்தேகமாக இருக்கிறது. இப்போது இந்த புள்ளி வரைக்குமே சேல்ஸ் என்ற வகையில் புத்தக விற்பனை வகையில் சம்பாத்தியம் என்று எதுவுமே இல்லை. இந்த சம்பாத்தியத்தை நான் எப்படியாவது மறு முதலீடு பண்ண முடியும். இது எப்படி என்றால் கைகளில் கிடைக்கும் ஒரு விதையை நகல் என்று எடுத்து ஒரு செடி கூட்டத்தை கொண்டுவர வேண்டும். இந்த செடி கூட்டம் பின்னாட்களில் மரக்கூட்டம் ஆகவேண்டும். மாறினால் மட்டும்தான் பணம் நன்றாக கொட்டும். விஷயம் இல்லாமல் எழுத்து மேலே வேறு எந்த ஆசையும் இல்லாமல் பணத்துக்காக எழுதுவதால் நான் எழுத்து துறையில் சம்பாதிக்கும் பணத்துக்காக நிறைய குற்ற உணர்வுதான் இருக்கிறது. இருந்தாலுமே நான் தனித்த எழுத்தாளர். வேறு யாருமே சப்போர்ட் இல்லை என்பதால் வாழ்க்கை மிகவுமே கடினமாக உள்ளது.
No comments:
Post a Comment