மிகவும் சமீபத்தில்தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் உண்மையில் வேறு லெவல் படம். அவ்வளவு நெருக்கமாக பழக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வெளியூரில் இருந்து கதாநாயகர் வீட்டில் வந்து சில வாரங்கள் தங்கிய கதாநாயகியின் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வளர்கிறது. கதாநாயகன் ஒரு கட்டத்தில் விபத்தின் காரணமாக கதாநாயகியை பிரிந்துவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இருந்தாலும் எப்படியோ கதாநாயகியை சந்தித்து அவளோடு பேசும்போது கதாநாயகியின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதை கதாநாயகன் புரிந்துகொள்ளவும் நேருக்கு நேராக எதிர்ப்பவர்கள் அனைவரிடமும் சண்டை போட்டு கதாநாயகியின் உயிரை உள்ளங்கையில் தாங்கிக்கொண்டு கதாநாயகன் மரணப்போரட்டத்தை மேற்கொள்கிறார். இந்த படத்துடைய இன்டர்வெல் காட்சி வரையிலும் ஒரு கியூட் லவ் ஸ்டோரிதான் சென்றுகொண்டு இருக்கிறது. இன்டர்மிஷன் பின்னால் கதை மின்னல் வேகத்தில் நகரும் ஒரு ஆக்சன் அட்வென்சர் கதைமாக வெற்றிவாகை சூடுகிறது. இந்த படத்தை பார்த்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்டென்டட் இன்ஸ்பெரேஷன் பண்ணிய க்ரைம் டிராமாதான் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம். இந்த படம் எதனால் இப்போது வரைக்குமே பெஸ்ட் ஆப் பெஸ்ட் என்றால் க்ளைமேக்ஸ் காட்சியில் காவல்துறை அதிகாரியாக வந்து நேருக்கு நேராக சந்திக்கும் காட்சி வரைக்கும் நேரடியாக ஒரு ரியல்லிஸ்டிக் ஃபீலிங் இல்லை என்றாலும் கமெர்ஷியல் என்டர்டென்மென்ட் படம் பார்த்த ஒரு நல்ல ஃபீலிங்கை இந்த படம் கொடுத்துவிடுகிறது. சிலம்பரசன் மற்றும் மஞ்சிமா அவர்களின் பிரமாதமான நடிப்பு இவர்களுடைய கேரக்டர்ஸ்களுக்கு நிறைய மதிப்பை கொடுத்துவிடுகிறது.
No comments:
Post a Comment