Tuesday, March 26, 2024

GENERAL TALKS - நேருக்கு நேராக மோத வேண்டும் !




மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன ? நாளை மழை வருமா ? இல்லை வெயில் வருமா ?  என்று நான் மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு சம்பவங்களும் என்னை இன்னுமே மோசமான கசப்பான விஷயங்களை அனுபவிக்க வைக்கிறது. சொல்லப்போனால் நான் இப்படி இருக்க வேண்டிய நபர் அல்ல. நான் எந்த விஷயங்களிலுமே தவறுகளை செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து தண்டனைகளை கொடுத்துக்கொண்டே இருந்தாலுமே நேருக்கு நேராக என்னை தாக்காமல் மறைந்தே என்னை என்னுடைய வாழ்க்கையை தாக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் எப்போதுமே நான் ஒரு விஷயம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். நான் மறுமுறை மறுமுறை அழித்து எழுத முடிந்த நோட் புத்தகத்தை போல மனதை பக்குவமாக வைத்து இருக்கிறேன். அழிக்க முடியாத அளவுக்கு நிரந்தரமான கொடிய மாற்றங்களை என்னுடைய மனதுக்குள்ளே கொண்டு வந்தால் மட்டுமே உங்களை எல்லோரையும் என்னால் ஜெயிக்க முடியும் என்ற கட்டாயம் வந்துவிட்டால் எப்படிப்பட்ட எல்லைக்கு வேண்டுமென்றாலும் சென்று வேலை பார்க்கும் கட்டாயம் எனக்குள்ளே உருவாகிவிடும். வாழ்க்கையின் சுவர்களை ஜே.ஸி.பி வைத்து காலி பண்ண நான் தயங்கவே மாட்டேன். வாழ்க்கை மோசமான முறையில் சென்றுக்கொண்டு இருக்கிறது. கேட்க வேண்டியவர்களுக்கு இந்த கேள்வி போய் சேரட்டும். என்னுடைய கேள்வி என்னவென்றால் எனக்கு இப்படி எல்லாம் செயல்களை பண்ணுவது உங்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறதா ? ஈஸ் திஸ் எண்டெர்டைனிங் ?  இதுவரைக்கும் நான் என்னுடைய சிறிய வயதில் நடந்ததில் இருந்து இப்போது வரைக்கும் எனக்கு நடந்த எல்லா விஷயங்களுக்குமே பழி வாங்காமல் நான் பாட்டுக்கு மன்னிப்பு கொடுத்துவிட்டு சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று போக வேண்டுமா ? எனக்கு மட்டும் அல்ல அப்படி நான் சென்றுவிட்டால் என்னை போலவே ஒவ்வொரு சின்ன சின்ன பதின்ம வயதினரின் வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த கஷ்டங்களுக்கு எல்லாமே நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் ? உங்களுடைய ஆசை நான் என்னை நூறு சதம் மாற்றிக்கொண்டு கெட்டவனாக மாற வேண்டும் என்றால் இந்த ஒரு செயலின் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். பாதிப்பு கனவில் கற்பனையில் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். இதுதான் உங்களுடைய ஆசையா ? யோசித்து நிதானமாக முடிவு எடுங்கள் ! நான் மன்னிக்க மாட்டேன். எப்போதும் யாரையும் நான் மன்னிக்க மாட்டேன். இது ஒரு பெரிய போர் என்றும் நான் கட்டாயமாக வென்றாக வேண்டும் என்றும் என்னுடைய மனதுக்கு என்னால் நம்ப வைக்க முடியவில்லை. என்னுடைய மனது இன்னுமே எதிர் தரப்புகளை நல்லவர்கள்தான் என்று நம்பிக்கொண்டு இருக்கிறது. நான் எப்போது என்னுடைய மனதுக்கு புரிந்துகொள்ள வைக்கிறேனோ அப்போது என்னால் நிறைய விஷயங்களை செய்து முடிக்க முடியும். காலம் கடந்துவிட்டது. நிறைய காம்பெஸ்ஸேஷன் எனக்கு கொடுத்து ஆக வேண்டும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...