வியாழன், 28 மார்ச், 2024

CINEMA TALKS - ANIMAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் திரைப்பட வரலாற்றின் சரித்திரத்திலேயே மோசத்திலும் மோசம் என்று இருக்கும். அப்படி ஒரு படம்தான் இந்த படம். காட்சிகள் காண சகிக்கவில்லை. வசனங்கள் தமிழ் மொழியில் முடிந்த அளவுக்கு தணிக்கை செய்யப்பட்டு கொஞ்சம் நன்றாக பண்ணி இருக்கிறார்கள். பாடல்கள் எல்லாம் நம்ம ஊரு தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் எபிசோட்கள் போல நினைவில் நிற்காமல் செல்கிறது. போர் அடித்துவிடும். படம் மொக்கை என்று சொல்ல முடியாது. தரம் இல்லாத கலாச்சாரம் இல்லாத காட்சிகளை மட்டுமே நிறைய படங்களில் இருந்து அப்படியே காப்பி அடித்து கிளிப் போட்டு கொடுத்து இருக்கின்றார்கள். பாலிவுட்டில் மேச்சுரிட்டியான படங்களைத்தான் கேட்கின்றோம் ஆனால் அடல்ட் காணொளிகள் போல ஒரு வகையான இப்படி ஒரு படம் வருங்கால தலைமுறையை போதை மற்றும் மகிழ்ச்சி கலாச்சாரத்துக்கு ஈர்த்துவிடும். பெண்களுக்கு இந்த படத்தில் மரியாதை இல்லை. காட்சி பொருட்களாக பயன்படுத்த படுகிறார்கள். கமர்ஷியல் ஆடியன்ஸ் திருப்திப் படுத்த என்ன என்னவோ படத்தில் பண்ணி கதையின் கதாநாயகனாக இருக்கும் கதாப்பாத்திரம் அப்பா மேலே அன்பு வைத்து இருக்கிறார் என்று நன்றாக ரீல் ரீலாக ஓட்டி இருக்கின்றார்கள். மக்கள் பொழுது போனால் போதும் என்ன காட்டினாலும் பார்ப்பார்கள் என்று சோதனை முயற்சி விட்டால் மக்கள் இந்த படத்தை சாதனையாக மாற்றி விட்டார்கள். பணக்காரர்கள் என்றால் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படி ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ கூடாது. இந்த வகை வாழ்க்கை கலாச்சாரம் நல்ல மனது இருப்பவர்களின் குடும்பத்தை பாதிக்கும் என்பதை மக்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த படம் கண்டிப்பாக தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டிய அளவுக்கு மிகவுமே முக்கியமான படம்‌. ஹாலிவுட் கலாச்சாரம் என்றாலும் அர்த்தமற்ற கதைக்களமாக இருக்கிறது. காசை செலவு பண்ணி வேலையை முடிப்பது இந்த வகையறா படங்களில் மிகவும் சிம்பிளாக காட்டிவிடுகிறார்கள். ஆல்பா தத்துவத்துக்கு மட்டும் மண்டையில் நன்றாக நூறு முறை கொட்ட வேண்டும்‌. ஒழுக்கமற்ற கணவராக மோட்டிவேஷன் வேண்டுமென்று தகாத செயல்களில் ஈடுபடுகிறார். பெண்களை மரியாதையுடன் நடத்துவது போல கதாநாயகர் காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் போதை பழக்கத்தால் சுயநலமாகவே இருக்கிறார். இந்த படத்தின் கதை சலிப்பு தட்டாமல் சென்றுகொண்டு இருப்பதால் படத்தின் நிறை குறைகளை பாராது பொழுதுபோக்குக்காக பார்க்கலாம். அடுத்த பாகம் அனிமல் பார்க் என்ன ஆகப்போகிறதோ ? இந்த படத்தை விமர்சிக்க கண்டிப்பாக ஒரு பக்கம் போதவே போதாது !

1 கருத்து:

DX சொன்னது…



எல்லா குடும்பங்களிலும் வெற்றி பெற்ற அண்ணனுக்கு, திறமை இருந்தும் முழுமையாக வெற்றி பெற முடியாத ஒரு தம்பி இருப்பான

இது உடைக்க முடியாத உலகச் சட்டம்.

திரை உலகிலும் இதே விதி காணப்படுகிறது. ஹிந்தி சினிமாவில் ரிஷி கபூர் மிகப்பெரிய ஹீரோ. ஆனால் அவரது தம்பி ராஜீவ் கபூர் ‘ராம் தேரி கங்கா மைலி’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்தும் நிலைத்து நிற்க முடியவில்லை. அனில் கபூரின் தம்பி சஞ்சய் கபூர் கூட அதே நிலை. சல்மானின் தம்பி அர்பாஸ், அமீர்கானின் தம்பி ஃபைசல் கான், சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு, அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரீஷ் — இப்படி பட்டியல் நீளமாகச் செல்லும்.

அப்படிப்பட்ட தம்பி தான் நம்ம கதையின் நாயகன். ஸன்னி தியோலின் தம்பி பாபி தியோல். தர்மேந்திரா தனது இரு மகன்களில் பாபியிடம் அதிக பாசம் வைத்திருந்தார். அண்ணன் ஸன்னிக்கும் தம்பி விஜய் சிங்கிடம் அதிக அன்பு. ஆம், விஜய் சிங் என்பதே பாபியின் உண்மையான பெயர். அழைப்பது பாபி. அஜய்சிங் என்பதே ஸன்னியின் பெயர். பாபிக்கும் ஸன்னிக்கும் 13 ஆண்டுகள் இடைவெளி. அதிலும் பாபி சிறுவயதில் அழகான தோற்றம் கொண்டவர்.

ஸன்னி பாலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் பாபி அறிமுகமானார். முதல் படம் *Barsaat*. நாயகி டிம்பிள் கபூரின் மகள் ட்விங்கிளின் அறிமுகமும் அதே படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு. அதோடு “Humko Sirf Tumse Pyar Hai” பாடல் மிகப்பெரிய ஹிட். பாபியின் நீண்ட முடியும், குழி விழும் சிரிப்பும் மும்பை இளைஞர்களை கவர்ந்தது.

*Barsaat* வெற்றிக்குப் பிறகு வந்த *Gupt* ஒரு அதிரடி ஹிட். மணீஷா, காஜல், பாபி — மூவரும் நடித்த அந்த படம் பெரும் வெற்றி. பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட். “Mere Khwabon Mein Tu” பாடலுக்கு தியேட்டர் அதிர்ந்தது. குற்றம்-சஸ்பென்ஸ் கதை என்பதால் அனைத்து மாநில மக்களும் ரசித்தனர்.

அதன்பின் *Soldier* வெற்றி. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் மனதில் நிற்கும் சில படங்களே வெற்றி. அடுத்து சரிவு தொடங்கியது. வயது அதிகரிக்க, முடி உதிரத் தொடங்கியது. முதல் படத்தில் இருந்த நீண்ட முடியை குறைத்தபோது, அந்த ஸ்டைல் குறைந்தது. அண்ணன் ஸன்னி பாபியை காப்பாற்ற பல படங்களில் சேர்ந்து நடித்தார். *1931 Shaheed* படத்தில் பாபி பகத்சிங்காக நடித்தார்; ஸன்னி சந்திரசேகர் ஆசாதாக நடித்தார். ஆனால் மக்கள் அஜய் தேவ்கன் நடித்த *The Legend of Bhagat Singh* படத்தையே அதிகம் ரசித்தனர்.

2010க்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே. 2014, 2015, 2016 — படமே இல்லை. அப்படித்தான் 2024ல் *Animal* படத்தில் பாபி நடித்தார். அப்போது அவருக்கு வயது 54. மிகுந்த உடல் ஆரோக்கியத்துடன் பாபியின் கதாபாத்திரம் *Animal* படத்தில் அவரை மீண்டும் உயர்த்தியது. அவரது “Jamal Jamalu” என்ற ஈரானிய பாடல் ஒலிக்காத மொபைல் இல்லை. இந்தியா முழுவதும் அந்த பாடலும் நடனமும் பரவியது. அப்ரார் ஹக் தனது எதிரியை வீழ்த்தி, மேலே படுத்து சிகரெட் பிடிக்கும் காட்சி — அதுவே பாபியின் வீழ்ச்சிக்குப் பின் எழுச்சி. தோற்கும் தம்பிகளின் விதியை உடைத்து வெளிவந்தார் பாபி.

அப்ரார் ஹக் கதாபாத்திரம் மூலம் பாபி ஒரு அதிரடி Comeback கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு அண்ணன் ஸன்னியும் *Gadar 2* மூலம் பெருவெற்றி பெற்றிருந்தார். தர்மேந்திரா மகிழ்ச்சியில் மூழ்கினார்… ஹேப்பி பாஜி… ஹேப்பி அண்ணாச்சி…

பாபி தியோலின் சின்னம்மா ஹேமமாலினி. ஹேமமாலினியின் மகள்கள் ஈஷா, அஹானா. ஈஷாவை நாம் மணிரத்னத்தின் *ஆயுத எழுத்து* படத்தில் சூர்யாவின் ஜோடியாக பார்த்திருக்கிறோம். ஹேமமாலினியின் சகோதரியின் மகள் மதுபாலா. மதுபாலாவின் கணவர் ஆனந்த் ஷா. ஆனந்த் ஷாவின் கஸின் ஜெய் மேத்தா. ஜெய் மேத்தாவின் மனைவி ஜூஹி சாவ்லா. ஸன்னியின் மகன் கரண் தியோல் ஹீரோ. இன்னொரு மகன் ராஜ்வீர் கூட ஹீரோ. பாபியின் கஸின் அபய் தியோலும் ஹீரோ.

*ஜனநாயகன்* படத்தில் விஜய்யின் எதிரியாக பாபி. நிச்சயம் வலுவான வில்லன் கதாபாத்திரமாக இருக்கும்.

TECH TALKS - இந்த இணையதள எடிட் பேஜ்களை வைத்து மூளை சலவை செய்யும் ஆட்கள் !!

  TAMIL : மீமெடிக் மூளைச்சலவை என்பது ஒரு நபரின் சிந்தனைச் சூழலைத் திட்டமிட்ட முறையில் 'மீம்ஸ்' (Memes) எனப்படும் கலாச்சாரத் தகவல் அல...