Saturday, March 30, 2024

MUSIC TALKS - VENNILAVE VENNILAVE VAANATHTHAI VITTUTU VAA - TAMIL LYRICS - பாடல் வரிகள் !

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா
இதயம் என்ன புத்தகமா ? படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா ? இடித்து அதை கட்டி விட

பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா ?
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா ? மரமா ?

அன்பே உன்கையில் நான் விரலா ? நகமா ?
நகமாய் கலைந்தாயே ? இது உனக்கே தகுமா ?

இன்னொரு ஜென்மத்தில் பெண்ணே நீ என்னைப்போல்
ஆணாக பிறந்து வருவாய்
உன் போல பெண்ணை நீ அப்போது நேசித்தால் 
என் நெஞ்சின் வேதனை அறிவாய்

உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை
ஏன் இன்னும் சொல்லவில்லை ? ஏன் இன்னும் சொல்லவில்லை ?
அவன் ஊமை இல்லை இல்லை

அன்பே என் கண்ணில் தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால் கொஞ்சம் தூரம் மரணம்
உன்னால் அடி உன்னால் என் ஆன்மா உருகும்
உன்னை தினம் தேடி நுரையீரல் கருகும்

எத்தனை காதலில் தோல்விகள் உள்ளது பூமியின் ஆழத்தில் புதைந்து
அத்தனை சோகமும் வெளியில் வந்தது என் இரு கண்களில் வழிந்து
உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில் கொலுசொலி வருதே
அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி  உயிர் தேடும் உந்தன் மடி

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா
வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா

இதயம் என்ன புத்தகமா ? படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா ? இடித்து அதை கட்டி விட

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...