நம்ம வாழ்க்கையில் தனிமையில் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும்போது தனிக்காட்டு ராஜாவாக அப்படியே வாழ்க்கை சென்றுகொண்டு இருக்கும்போது ஒரு அளவுக்கு கம்ஃப்பெர்ட்டபில் ஆன என்விராய்ன்மைன்ட்டில் இருப்பதால் மட்டும் சந்தோஷமாக இருப்பதாக சொல்லிவிட முடியாது. தனிமையில் SINGLE PLAYER என்று இல்லாமல் TEAM PLAYER ஆக கிடைக்கும் எக்ஸ்பீரியன்ஸ் லெவல் ஆப் தி சார்ட்ஸ்ஸில் இருக்கிறது. இருந்தாலுமே கடவுளால் அவருடைய சொந்த கையெழுத்தில் எழுதப்படும் வாழ்நாட்களின் விதிகள் நிறைந்த FATE என்ற புத்தகத்தில் பிறந்ததில் இருந்து இறந்து போவது வரைக்குமே இருக்கும் 80 வருடங்களில் விதிப்படி தனிமையில்தான் இந்த போர்க்களத்தில் ஒரு ஒரு தனிப்பட்ட மோதலையும் ஜெயிக்க வேண்டும் என்பது மிகவுமே பெரிய விஷயம். அடிப்படையில் ஒருவர் சுலபமாக அவருடைய சக்திகளின் அளவில் 0.2 சதவீதம் பயன்படுத்தி பிரச்சனையை முடிக்கின்றார் என்றால் அதே விஷயங்களுக்காக 200 சதவீதம் அவர்களுடைய தனிப்பட்ட ஒருவருடைய சக்தியை செலவு செய்தால்தான் வாழ்க்கையை வெற்றியடைய முடிகிறது. சரியான கருவிகளும் சிறப்பான நுணுக்கங்களும் இந்த விஷயத்துக்கு தேவை. ஒரு டெக்னாலஜி கம்பெனியின் உருவாக்கத்துக்கான ஒரு ஒரு ஸ்டைப்-களும் நெருப்பில் நடப்பது போல தனிமை என்ற விஷயத்தை தேர்ந்தெடுத்ததால் நடக்கும் விஷயங்கள் எல்லாம் சாதாரணமாக சென்றுகொண்டு இருக்காது. இது ஒரு போர். இந்த விஷயங்கள் எல்லாமே கடினமானதாக மட்டுமே இருக்கப்போகிறது. இன்னைக்கு தேதிக்கு நல்ல எண்ணங்களை வைத்துக்கொண்டு யாருக்குமே நன்மை பண்ண முடிவதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல விஷயங்களை செய்தால் துக்கமும் துயரமும் மட்டும்தான் நமக்கு கிடைக்கிறது. மக்கள் நிஜமான வாழ்க்கையையே ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு போல விளையாட ஆரம்பித்து விட்டார்கள். உண்மையான வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை பணம் இருப்பவர்கள் சும்மா பணத்தை விட்டு எறிவதன் மூலமாகவே நன்றாக சரிபண்ணிவிடுகிறார்கள். இப்படி இருக்கும்போது நல்லவராக இருந்து என்ன பிரயோஜனம் என்ற கேள்வி தனிமையில் நிராதரவாக இருந்தால் கண்டிப்பாக நமக்கு வருகிறது. இதுவும் ஒரு பக்கத்தில் முடியக்கூடிய கான்ஸேப்ட் இல்லை. ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக செல்லும் ஒரு கான்ஸேப்ட் இதுவாகும்.
No comments:
Post a Comment