Tuesday, March 26, 2024

TAMIL TALKS - EP. 54 & EP. 55 - பரோக்ராஸ்டினேஷன் பிரச்சனைகள் !

 



ப்ரோக்ராஸ்டினேஸன்  - அதாவது நடப்பு வேலைகளை தள்ளிப்போடும் விஷயம். இது எல்லாம் பெரிய விஷயமா ? என்று ஒரு கேள்வி எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு வேலையை நமக்கு செய்ய பிடிக்கவில்லை என்றால் அது வெறுப்பு , இன்னொருவர் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது சோம்பேறித்தனம். செய்ய பிடிக்கும் ஆனால் எனக்கு நிறைய நேரம் வேண்டும் என்றால் அது நேரம் போதாமை. இங்கே இந்த கான்ஸேப்ட் முற்றிலுமே மாறுபட்டது. ஒரு வேலையை செய்ய 10 நாட்கள் மொத்தமாக கொடுக்கப்பட்டாலும். அந்த வேலையை முடிக்க 12 ஸ்டெப்ஸ் இருக்கிறது என்றால் இந்த 12 ஸ்டெப்ஸ்ஸில் ஒரு ஸ்டெப் நமக்கு பிடிக்கவில்லை , கஷ்டமாக இருக்கிறது , குழப்பமாக இருக்கிறது என்று ஏதாவது வேலையை பற்றி தவறாக நினைத்து விட்டோமேயானால் அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது. அந்த வேலையை தொடர்ந்து கால வரையறை இல்லாமல் தள்ளிப்போட்டு விடுவோம். மிகவும் குட்டியான சுலபமான வேலையாக மட்டும்தான் இருக்கும் இருந்தாலுமே தள்ளிப்போட்டு விடுவோம். இதனால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நம்பிக்கை போய்விடும். இது ஒரு ரிசர்ச் லெவல் கான்ஸேப்ட். பிடிக்காத புரஃபஷன் என்றால் எனக்கு இந்த வேலையை பண்ண பிடிக்கவில்லை என்ற ஒரு நிலையான முடிவை மனது எடுத்துவிடுகிறது ஆனால் மனதுக்கு பிடித்த வேலையாக இருந்தாலும் ப்ரோக்ராஸ்டினேஸன் பண்ணுபவர்கள் கால வரையறை இல்லாமல் தள்ளிப்போட்டு விடுவார்கள். அதுவே அவர்களுடைய வாழ்க்கைக்கு பெரிய ஆப்பாக அமைந்துவிடும். நம்ம வலைப்பூவில் எப்போதுமே தனிப்பட்ட கருத்துக்களும் வெட்டி பேச்சுக்களும் மட்டும்தானே இருக்கும் இது என்ன புதிதாக விஷயங்கள் போஸ்ட் பண்ணப்படுகிறது என்றால் இனிமேல் இந்த வலைப்பூ முந்தைய நாட்களை விட ஒரு வெர்ஷன் 2.0 அப்டேட் ஆகவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றே சொல்லலாம் அதனால் அடிப்படையில் இருந்தே நான் கடினமாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். இந்த ப்ரோக்ராஸ்டினேஸன் ஒரு மன நோய் என்றே சொல்லலாம். உடம்புக்கு சளி , காய்ச்சல் , தலைவலி என்று நிறைய நோய்கள் இருப்பது போல மனதுமே நம்முடைய உடம்பு போல வெளிப்புற நோய்களால் தாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நாம் என்னதான் பண்ணினாலும் இந்த நோயை முழுமையாக எடுப்பது கடினம். நம்முடைய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். மன நோய்கள் உடல் நோய்களை போல இல்லாமல் அதீதமாக நமது வாழ்க்கையை பாதித்துவிடும். ப்ரோக்ராஸ்டினேஸன் என்பது உலக அளவில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான். இந்த பிரச்சனையால் பெர்சனல் வாழ்க்கையிலும் ஃபினான்ஷியல் வாழ்க்கையிலும் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் இந்த வகை ப்ரோக்ராஸ்டினேஸன் பிரச்சனைகளை கண்டிப்பாக இன்டர்நெட் ரெஃபரென்ஸ் எல்லாம் பார்த்து புத்தகங்கள் படித்து உங்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுத்துவிடுங்கள். இல்லையென்றால் பெரிய பாதிப்புகள் நேரிடும் அபாயம் உள்ளது. 

No comments:

JUST TALKS - ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஷார்ட் பிலிம்கள் !

2000 : My Mother Dreams the Satan's Disciples in New York 2001 : Quiero Ser (I Want to Be) 2002 : The Accountant 2003 : This Charming Ma...