ரொம்ப நல்லவர்களாக இருந்தால் ஏமாற்றப்படுவோம், நம்மை யாருமே ஏமாற்ற முடியாது , மிகவும் அதிக புத்திசாலித்தனம் நம்முடைய இடத்தில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம், கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பொருட்களை இழப்பது மிகவுமே கஷ்டமானது.
ஏமாற்ற நினைப்பவர்கள் நமக்கு சொல்லாமல் செய்த விஷயங்கள்தான் கஷ்டம், சமீபத்தில் உதவி செய்ய முன்வந்த ஒரு நண்பரை ஒரு பெரிய கடன் தொகையை வாங்கி (100000/- அசல் , மாதம் 10,000 வட்டி) என்று சொல்லாமலே சிக்க வைக்க முயற்சி நடந்தது. இந்த கடனுக்கு பண உதவி பண்ணிய அந்த அப்பாவி நண்பர் பொறுப்பு எடுக்க வேண்டும் என்றால் நியாயமா ?
பண உதவி பண்ணாமலே இருந்திருக்கலாம் போலவே ? கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காது, இந்த கடன் பற்றி மேன்ஷன் பண்ணாமலே இப்படி பண உதவி வாங்கிய நபர் இருந்துவிட்டால் 6 மாதங்களில் 60000/- வரை வட்டி வந்து இருக்குமே ? எப்படி சொல்லப்படாத கடனுக்கும் சொல்லப்படாத வட்டிக்கும் திடீர் பொறுப்பாளர் ஆகமுடியும் ?,
காவல் துறை மற்றும் அரசியல் புள்ளிகளை வைத்து அவசரத்துக்கு உதவி பண்ண வந்த அந்த நண்பரை பஞ்சாயத்து பண்ணி மிரட்டி நஷ்டப்பொறுப்பு எடுத்துக்கொள்ள வைத்து நண்பரின் சொந்த சொத்து பறிமுதல் வரை திட்டங்களை இந்த உதவி வாங்கிய நண்பர்கள் செய்துவிட்டார்கள்.
தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையை கத்தரித்ததோடு சென்றுவிட்டது என்று உதவி செய்ய முன்வந்த அந்த நண்பர் 20,000 தொகை இழப்போடு தேவையற்ற 10000/- செலவுகளோடு தப்பித்ததே பெரிய விஷயம் ஆனது !
இதுதான் மக்களே ரிஸ்க் , நாம் நல்லவர்கள் என்று முடிவு செய்தவர்கள் எல்லாம் சுய நலத்துக்காக உதவி செய்ய வந்த மனிதனையே புலியை போல அடித்து கொல்லவும் துணிந்து விடுகிறார்கள். இதுதான் வருத்தமான விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக