சொல்லப்போனால் அந்த ஹீரோ நல்லவரா கெட்டவரா என்று கூட இவர்களுக்கு கவலை இல்லை, போதையில் விழ கூடாது என்று ஹீரோ நினைத்து சரிதான் ஆனால் இந்த படத்தில் நேர்மையாக இருந்த ஹீரோவே பெர்ஸனலாக சொந்த வாழ்க்கையில் தோற்றுபோனவராக இருக்கிறார், கல்யாணம் இல்லை, குடும்ப கஷ்டம் போகவில்லை, இவர் உதவி பண்ணியவர்கள் இவருக்கு கஷ்டத்தில் ஹெல்ப் பண்ணவில்லை, இப்படி இந்த அளவுக்கு தோற்றுப்போன ஒருவரை ஹீரோவாக மக்களால் பார்க்க முடியாது.
இப்போ ஜப்பான் என்று ஒரு படம் வந்தது, கார்த்தி என்னதான் அவருடைய முழு நடிப்பு திறன் வெளிப்படுத்தி இருந்தாலும் படம் நன்றாக இல்லை, காத்திக்கு இருக்கும் நோய் மற்றும் குற்ற உணர்வு கொண்ட அந்த ஜப்பான் என்ற கதாப்பாத்திரம் ஒரு ஹீரோ என்ற அந்தஸ்தை மக்களிடம் பெறாது, தோற்றுப்போக மக்கள் வாழ்க்கையில் பழக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் படத்தில் தாங்கள் ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜெயிக்கிறார்கள் என்றால் அதனை கற்பனையில் மக்கள் சொந்த வெற்றியாக நினைக்கிறார்கள், திறமையை பொறுப்பாக வளர்த்துக்கொள்ளத்த நடிகரை ஒரு அரசியல் தலைவர் என்று நம்பவும் இந்த கற்பனை சொந்த வெற்றியாக நினைக்கும் இந்த மனநல பாதிப்புதான் காரணம். பொழுதுபோக்குத்தான் இந்த மனநல பாதிப்புக்கு காரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக