சர்க்கரை நிறைந்த இனிப்புகள் நேரடியாக சளி ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதிகமாக இனிப்பு சாப்பிடும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சர்க்கரை உட்கொண்டவுடன் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாடு தற்காலிகமாக குறைந்து, வைரஸ்களுக்கு எதிராக போராடும் திறன் சுருங்குகிறது. இதனால் சளி அல்லது காய்ச்சல் வந்தால் விரைவில் குணமடையாமல் நீண்டு போகும். மேலும், சர்க்கரை தொண்டை மற்றும் மூக்குப் பகுதிகளில் அழற்சியை தூண்டி, எரிச்சல் மற்றும் அடைப்பு அதிகரிக்கச் செய்கிறது. அதனால் பண்டிகை காலங்களில் இனிப்பு அதிகம் சாப்பிடும் போது சளி அதிகம் ஏற்படுவது போல தோன்றுகிறது.
இனிப்புகள் சளி சுரப்பை தூண்டும் தன்மையும் கொண்டவை. சர்க்கரை சுவாசக் குழாய்களில் அதிக சளி சுரப்பை ஏற்படுத்தி, கபம், மூக்கடைப்பு, நீர்க்கோல் போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கிறது. குறிப்பாக இனிப்புகளுடன் பால் சார்ந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது சளி இன்னும் அதிகமாகும். மேலும், சர்க்கரை குடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் வளர்ச்சியை ஊக்குவித்து, உடல் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைக்கிறது. இதைத் தவிர்க்க, வெந்நீர் அல்லது கஷாயம் குடிப்பது, பால்-இனிப்பு சேர்க்கையை தவிர்ப்பது, தேன் அல்லது பழங்கள் போன்ற இயற்கை இனிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது. இவ்வாறு செய்தால் இனிப்பை அனுபவித்தாலும் சளி மற்றும் காய்ச்சல் நீண்ட காலம் நீடிக்காமல் தடுப்பது சாத்தியம். இனிப்புகள் நமக்கு சளி மற்றும் காய்ச்சல் உருவாக்குகிறது என்பது நேரடியான பதிலாக ஆகாது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக