ஞாயிறு, 18 ஜனவரி, 2026

MUSIC TALKS - ENNA VILAI AZHAGE - ORU MOZHI ILLAMAL MOUNAM AAGIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

 


என்ன விலையழகே என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே 
மலைத்தான் உடனே அவனே 
அழகைப் படைக்கும் திறமை முழுக்க 
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு 
விரல் பட மெல்லக் கனிந்திடு 
உடல் மட்டும் இங்கு கிடக்குது 
உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று 
பண்ணிய சிற்பத்தில் ஒன்று 
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு

உயிரே உனையே நினைத்து 
விழிநீர் மழையில் நனைந்து 
இமையில் இருக்கும் இரவு உறக்கம் 
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு 
தினம் தினம் உனை நினைக்கிறேன் 
துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே 
உனைவிட இல்லை புதுமையே 
உன் புகழ் வையமும் சொல்ல 
சிற்றன்ன வாசலில் உள்ள 
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனை நானும் 
சேரும் நாள் தான்

என்ன விலையழகே என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

கருத்துகள் இல்லை:

கிளாசிக் திரைப்படங்கள் - ஒரு சிறப்பு கண்ணோட்டம் - எட்டுப்பட்டி ராசா !!

  இணையத்தில் இருந்து எடுத்த பதிவு ! தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பலர், மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளனர். ஒருகாலத்...