“எமோஷனல் இண்டெலிஜன்ஸ் - அதாவது உணர்ச்சி நுண்ணறிவு என்றால், நம்ம உணர்ச்சிகளை கவனிப்பது, புரிந்து கொள்வது, அதை கட்டுப்படுத்துவது. முதலில், நம்ம உணர்ச்சிகளை அடையாளம் காண்றது முக்கியம். ‘இப்போ நான் கோபமா இருக்கேனா? சோகமா இருக்கேனா?’ என்று நம்மையே கேட்கணும். அப்படியே உடனடி பதில் சொல்லாமல், ஒரு மூச்சு விட்டுப் பிறகு பேசினால் சண்டை குறையும். தவறுகள் நடந்தால் அதை பாடமாக எடுத்துக்கொள்ளணும், தோல்வியை பலவீனம்னு நினைக்கக்கூடாது.
தினசரி நன்றியுணர்வு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் மக்களே ! சிறிய விஷயங்களுக்கே நன்றி சொல்லுங்கள். இது மனசுக்கு அமைதியையும், ஊக்கத்தையும் தரும்.”
“மற்றவர்களோட உறவுகளிலும் EQ முக்கியம். கவனமா கேட்கணும், இடைமறியாம பேச விடணும். பரிவு காட்டுங்க ‘அவருக்கு எப்படி தோணுது?’ என்று யோசிங்க. சண்டை வந்தால் குற்றம் சாட்டாமல் தீர்வை தேடுங்க. சிரிப்பு, நல்ல உடல் மொழி, மென்மையான குரல் இவை எல்லாம் உறவை வலுப்படுத்தும். உதவி கேட்கவும், உதவி செய்யவும் தயங்காதீங்க.
குழு பணியை மதியுங்க, தாழ்மையா இருங்க. இறுதியாக, அன்பு, நன்றியுணர்வு, மனக்குவிப்பு இவை எல்லாம் EQ-ஐ வளர்க்கும் அடிப்படை. உணர்ச்சி நுண்ணறிவு என்பது பூரணமா இருக்கணும் என்பதல்ல; விழிப்புணர்வோடு, பரிவோடு, சீரான பழக்கங்களோடு வாழ்வது தான்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக