சனி, 17 ஜனவரி, 2026

MUSIC TALKS - MANIYE MANIKUYILE - MAALAI ILAM KATHIR AZHAGE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


மணியே மணிக்குயிலே 
மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே 
கொடி இடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி 
இங்கு நான் பாடும் 
பாமரப் பாடல் கேளடி

பொன்னில் வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான் உனையே 
வண்ணமயில் போல வந்த பாவையே

எண்ண இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும் கலையே 
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே


கண்ணிமையில் தூண்டிலிட்டு 
காதல்தனை தூண்டிவிட்டு 
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும்
ஏந்திழையே

பெண்ணிவளை ஆதரித்து 
பேசித்தொட்டு காதலித்து 
இன்பம் கண்ட காரணத்தால் 
தூங்கலையே

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் 
கொடி இடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி 
இங்கு நான் பாடும் 
பாமரப் பாடல் கேளடி

கண்ணிமைகளை வருத்தி 
கனவுகளைத் துரத்தி
மென் மனதினால் முடித்த மூக்குத்தி

என்னுயிரிலே ஒருத்தி 
கண்டபடி என்னை துரத்தி
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி

கோடிமணி ஓசைநெஞ்சில் 
கூடி வந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு 
தூபமிட்டு தூண்டிவிட்டு கூடவிட்டு
வாழ்த்தவரும் வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா 
ஆசை விளக்கேற்றுதம்மா
பூமரப் பாவை நீயடி 
இங்கு நான் பாடும் 
பாமரப் பாடல் கேளடி


கருத்துகள் இல்லை:

கிளாசிக் கணினி விளையாட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மக்களே !

  வீடியோ கேம்களை பாதுகாப்பது வெறும் நினைவுகளைப் பற்றியது அல்ல; அது நவீன கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கத்தை காப்பாற்றுவதற்கான முயற்சி. திரைப...