நம் வாழ்வில் நேரத்தை வீணடிப்பது எளிதானது. இன்று “நேரத்தை கொல்லுதல்” என்ற போக்கு பரவலாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்வது, பயனற்ற வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பது, தேவையில்லாத விவாதங்களில் நேரத்தை செலவழிப்பது இவை நொடிகளை வீணாக்குகிறது. '
இவை நமக்கு எந்தப் பயனும் தராமல், நம் வாழ்க்கையின் அருமையான நொடிகளை சுருட்டிக் கொண்டு போகின்றன. ஆனால் உண்மையில், நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. ஒரு மாணவர், தேர்வுக்கான படிப்பைத் தள்ளிப்போட்டு, பல மணி நேரம் வீணாக செலவழித்தால், அந்த நேரம் திரும்ப கிடைக்காது.
ஒரு தொழிலாளி, தனது திறமையை மேம்படுத்தாமல், சோம்பேறித்தனத்தில் நேரத்தை வீணடித்தால், நிறுவனமும் வருவாய் இழக்கும் எதிர்காலத்தில் வரும் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஒரு குடும்பத்தில், அன்பான உரையாடலுக்கான நேரத்தை வீணடித்து, தேவையில்லாத சண்டைகளில் நேரத்தை செலவழித்தால், உறவுகள் பலவீனமாகிவிடும்.
ஆனால், அதே தொழிலாளி தன்னுடைய சொந்த நிறுவனத்திற்காகக் கடினமாக உழைத்து, நிறுவனம் வழங்கும் அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொண்டு, பதவிகளில் முன்னேறினால், அந்த தொழிலாளியின் வாழ்க்கை நிரந்தர செழிப்படையும்.
நேரத்தை வீணடிக்கும் பழக்கம் மேலோங்கி விட்டால், அது நம்மை ஒரு கனவு போன்ற நிலைக்குள் சிக்க வைக்கும். நம்முடைய வாழ்க்கையின் அருமையை உணராமல், “இன்னும் நேரம் எக்கச்சக்கம் ஸ்டாக் உள்ளது” என்று நினைத்து, நாளை நாளை என்று தள்ளிப்போடுகிறோம்.
ஆனால் நாளை எப்போதும் உறுதியானது அல்ல. இன்று நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டால், அது நம்முடைய எதிர்காலத்தை பாதிக்கும். எனவே, நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தை உடைத்து, ஒவ்வொரு நொடியையும் பயனுள்ள செயல்களில் செலவழிக்க வேண்டும்.
சிறிய திறமைகளை கற்றுக்கொள்வது, புத்தகங்களைப் படிப்பது, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது, குடும்பத்துடன் தரமான நேரம் செலவிடுவது இவை அனைத்தும் நம் வாழ்க்கையை வளமாக்கும், காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக