சரித்திரங்கள் பிறந்தது எல்லாம் கேள்விகள் கேட்டதனாலே” என்ற வரி, தமிழின் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. மனித சமூகம் முன்னேறியது, மாற்றங்கள் ஏற்பட்டது, புரட்சிகள் நடந்தது.
கேள்விகளை கேட்பது என்பது நம்முடைய வாழ்க்கையின் மிக அடிப்படையான தேவை மக்களே !! ஆனால், நம்முடைய வாழ்க்கையில் அந்தக் கேள்விகளை நாம் எவ்வளவு கேட்கிறோம் என்று பார்த்தால், மிகவும் குறைவாகவே உள்ளது. அதுதானே வருத்தம் ?
நாம் பெரும்பாலும், “இன்றைய நாளை திட்டமிட்ட செயல்பாடுகள் இல்லாமல் ரேண்டம் சம்பவங்களில் கடத்திவிட வேண்டும்” என்ற மனநிலையோடு வாழ்கிறோம். அதனால், நம்முடைய மனசாட்சிக்குள் எழும் கேள்விகளை அடக்கிவிடுகிறோம்.
“ஏன் நான் இப்படி வாழ்கிறேன்?”, “என்னுடைய சமூகத்தில் ஏன் இப்படி நடக்கிறது?”, “என்னுடைய தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?” போன்ற கேள்விகளை நம்முள் எழுப்பாமல் விட்டுவிடுகிறோம். ஆனால், அந்தக் கேள்விகளே மாற்றங்களை உருவாக்கும் சக்தி கொண்டவை.
சில நேரங்களில், மாற்றங்களை விரும்பாத தலைவர்கள், “கேள்விகளை கேட்பது அவமரியாதை” என்று நினைக்கிறார்கள். அவர்கள், மக்கள் கேள்வி கேட்காமல் இருந்தால் தான் தங்களுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், கேள்விகளைத் தடுக்கிற தலைவன் ஒருபோதும் நேர்மையான ஆட்சியை வழங்கமாட்டான். அவர் தாறுமாறாக, தன்னுடைய சுயநலத்திற்காக வாழ்க்கையை நடத்துவார்.
உலக வரலாறு முழுவதும் இதை நிரூபிக்கிறது. ஒவ்வொரு புரட்சியும், ஒவ்வொரு மாற்றமும், ஒவ்வொரு முன்னேற்றமும்—அனைத்தும் கேள்விகளால் தான் பிறந்தவை. “ஏன்?” என்று கேட்டவர்கள் தான் புதிய பாதைகளைத் திறந்தவர்கள்.
எனவே, நம்முடைய வாழ்க்கையில் கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும். நம்மை வழிநடத்தும் தலைவர்கள், அந்தக் கேள்விகளுக்கு முன்னதாகவே யோசித்து, பதில்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம். கேள்விகள் இல்லாத சமூகத்தில் வளர்ச்சி இல்லை; கேள்விகள் நிறைந்த சமூகத்தில் தான் சிந்தனை, மாற்றம், முன்னேற்றம் எல்லாமே கிடைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக