நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
வெள்ளி, 16 ஜனவரி, 2026
DREAMTALKS - EPISODE - 33 - செயல்களில் இருந்து கற்றுக்கொள்ளுதல் !!
நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்ற ஆசை இயல்பானது. ஆனால் அதுவே முதல் தவறாக மாறுகிறது. ஏனெனில் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் “சந்தோஷம் பெறுவது” மட்டுமல்ல; “உயிர் பிழைத்தல், வளர்ச்சி அடைதல், திறமைகளை வளர்த்தல்” என்பதே அதன் உண்மையான சாரம்.
சில நேரங்களில் நாம் செய்ய வேண்டிய செயல்கள் உடனடியாக எந்த பலனையும் தராது. சில வேளைகளில் அவை நமக்கு மகிழ்ச்சியையும் தராது. இருந்தாலும் அவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் உண்டு. அந்தக் கட்டாயம் தான் நம்முடைய மனவலிமையை, பொறுமையை, செயல் திறனை அதிகப்படுத்துகிறது. எளிதாகக் கிடைக்காத, சிரமமான செயல்களைச் செய்வதன் மூலம் தான் நம்முடைய திறமைகள் கூர்மையடைகின்றன.
இவ்வாறு, மகிழ்ச்சி தராத செயல்களையும் மன உறுதியுடன் செய்து முடித்தால், வாழ்க்கையில் எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க நமக்கு போதுமான பலமும், நுட்பமான திறமைகளும் உருவாகும். அப்போதுதான் நம்முடைய வாழ்க்கை முழுமையாகவும், உறுதியான அடிப்படையுடனும் இருக்கும்.
மகிழ்ச்சி என்பது ஒரு பரிசு; ஆனால் திறமை, பொறுமை, மனவலிமை இவை தான் வாழ்க்கையின் உண்மையான ஆயுதங்கள் , இன்னும் சொல்லப்போனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஒரு புதிய திறமையை, ஒரு புதிய கல்வியை அளிக்கிறது. அந்தக் கல்வி, அந்த அனுபவம், நம்முடைய வருங்காலத்திற்கு உதவக்கூடிய மிகப் பெரிய கருவியாக மாறுகிறது. வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க, எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளைத் தீர்க்க, அந்தக் கருவி நமக்கு துணை நிற்கிறது.
ஆனால், நிறைய பேர் அந்தக் கருவியின் மதிப்பை உணராமல் விட்டுவிடுகிறார்கள். சிலர் கவனிக்காமல் தவறவிடுகிறார்கள். சிலர் “இது எனக்கு இப்போது பயன் தரவில்லை” என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். ஆனால் உண்மையில், அந்தச் சிறிய திறமைகள், அந்தச் சிறிய அனுபவங்கள் தான் நம்மை பெரிய சவால்களுக்கு தயாராக்குகின்றன.
எனவே, ஒவ்வொரு செயலும் நமக்கு பலன்கள் என்று எதுவும் தரவில்லை என்றாலும் நமக்கு ஒரு கல்வி, ஒரு திறமை, ஒரு அனுபவம் தருகிறது. அதை நாம் கவனமாகப் பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றும் சக்தியாக மாறும் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக