வெள்ளி, 16 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 32 - வாசல் வந்த வெற்றியை வரவேற்க வேண்டுமா ?

 




நிறைய நேரங்களில் “ஜன்னலைத் திற காற்று வரட்டும்” போன்ற வாசகங்கள் வெறும் கவிதைச் சொற்களா, அல்லது வாழ்க்கையின் உண்மையைச் சொல்கிறதா என்று நமக்குள் சந்தேகம் எழுகிறது. 

ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள், சுகமான அனுபவங்கள், மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் தருணங்கள் இவை அனைத்தையும் நாமே தள்ளிப் போடுகிறோமோ ? என்ற கேள்வி எழுகிறது. 

சில நேரங்களில், நம்முடைய பயம், பழக்கவழக்கம், அல்லது சோம்பேறித்தனம் காரணமாக, திறந்து வைத்திருக்க வேண்டிய கதவுகளை மூடிக் கொண்டு, நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்கிறோம் அது தவறானது மக்களே !

அதேபோல், வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நம்மை வந்து சேர தயாராக இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை ஏற்கத் தயங்குகிறோம். “ஜன்னலைத் திற காற்று வரட்டும்” என்றால் என்னதான் அர்த்தம் ?

அது புதிய சிந்தனைகளை, புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய வாய்ப்புகளை வரவேற்கும் மனநிலையை குறிக்கிறது. நாம் திறந்து வைத்திருக்க வேண்டிய மனதின் ஜன்னல்களை மூடிக் கொண்டால், அந்த நல்ல விஷயங்கள் நம்மைத் தாண்டி போய்விடும்.

வாழ்க்கையில் நம்மால் பெறக்கூடிய நல்ல விஷயங்களை, நாமே தடுக்காமல், மனதைத் திறந்து, சுதந்திரமாக ஏற்க வேண்டும். இந்த மாற்றத்தை நமக்குள்ளளே செய்தால்தான் வாழ்க்கையில் நேரடியான மாற்றம், புதுமை, சுதந்திரம், வளர்ச்சி போன்றவை காத்திருப்பதை விடுத்து உள்ளே வரும்.

நம்முடைய உள்ளம் திறந்திருக்கும்போது தான், அந்த நல்ல சக்திகள் நம்மைத் தொடும். மாறாக, ஒரு விருந்தினரை வீட்டு வாசலிலேயே நிற்க வைப்பதைப் போல, நமது வெற்றியும் கடைசி வரை நம் வீட்டின் வாசலிலேயே தங்கிவிட்டு, பின்னர் பிற்காலத்தில் விலகிச் சென்றுவிடும் என்ற கருத்தை இந்தப் பழமொழி உணர்த்துகிறது என்று நான் நினைக்கிறேன்.




கருத்துகள் இல்லை:

DREAMTALKS - EPISODE - 35 - கேள்விகளை கேளுங்கள் மக்களே !

  சரித்திரங்கள் பிறந்தது எல்லாம் கேள்விகள் கேட்டதனாலே” என்ற வரி, தமிழின் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. மனித சமூகம் முன்னேறியது, மாற்றங்க...