X-MEN - FIRST CLASS - பொதுவாக நல்ல கதையம்சம் கொண்டு வெற்றிநடை போதும் எக்ஸ் மென் ஃப்ரான்சைஸ்க்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ்தான் இந்த படம் , ஆரம்பத்தில் சார்லஸ் சேவியர் மற்றும் மேக்னேட்டோவுக்கும் வருங்கால எக்ஸ்மென் அமைப்புக்கும் ஒரு ஆரிஜின் ஸ்டோரியாக அமைய வேண்டும் எண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பின்னாட்களில் மோத்த ஃப்ரான்சைஸ்க்கும் ஒரு ரீப்பூட்டாக மாறி இருக்கிறது. இந்த படத்தில் மியூட்டன்களை பாதுக்காக்க சார்லஸ் சேவியர் ஒரு அமைப்பை நிறுவ முயற்சிக்கும்பொது ஒரு கட்டத்தில் இளம் வயதில் ஒரு கொடிய அமைப்பினரால் பெற்றோரை இழந்ததால் பழிவாங்கும் கோபத்தோடு அலைந்துகொண்டு இருக்கும் எரிக் / மேக்னட்டோவை சந்தித்து அவரையும் அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றுகிறார். இந்த கொடிய அமைப்பின் தலைவன் சக்திகளை தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும் ஒரு அழிக்க முடியாத மியூட்டன்ட் என்பதால் எப்படி இந்த தலைவன் பண்ணும் உலக அளவிலான அரசியல் போர்க்கால சதியை தோற்கடித்தனர் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது. சக்திகளோடு பிறந்ததால் தன்னை தானே வெறுத்து வாழும் மியூட்டன்ட் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ப்ரோஃப்ஃபேஸ்ஸர் எக்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும் மியூட்டன்ட்டாக பிறந்தாலே மனிதர்கள் அழிக்கத்தான் போராடுகிறார்கள் அதனால் கண்டிப்பாக மியூட்டன்ட்கள்தான் முதலில் மனிதர்களை தாக்க வேண்டும் என்று நினைக்கும் மேக்னேட்டோ மறுபக்கம் என்று தர்ம யுத்தமாக இந்த கதைக்களம் நகர்கிறது என்றாலும் நடிப்பு திறன் பிரமாதமாக அமைந்துள்ளது. சூப்பர்ஹீரோ படங்களுக்கு உரிய தெளிவான கம்ப்யூட்டர் விஎஃப்எக்ஸ் இந்த படத்தில் இருப்பதாலும் நிறைய மியூட்டன்ட்களின் ஆரிஜின் ஸ்டோரிக்களை இந்த படம் சொல்லியிருப்பதாலும் இந்த படம் சூப்பர் ஹீரோ படங்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான படம் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. இந்த மாதிரி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதையை நகர்த்தி சிக்கி சின்னாபின்னம் ஆகிய படங்கள்தான் THE MARVELS மாதிரயான படங்கள். சோகம் என்னவென்றால் THE MARVEL - ஸ்ஸில் எக்ஸ்-மென் படங்களை இணைத்துவிட்டார்கள் !
3 கருத்துகள்:
#NewsUpdate | அரசுப் பேருந்தில் ‘பவானி - துபாய்’ என அச்சிடப்பட்ட டிக்கெட்!
#SunNews | #Bhavani | #Dubai | #TNSTC
இக்கரைக்கு அக்கரை பச்சைதான்!
Film:Akkare
Year:1984
Story:P.K.Nandana Varma
Screenplay:K.N.Sasidharan
Music:M.B.Srinivasan
Cinematography:Divakara Menon
Producer:K.N.Sasidharan
Director:K.N.Sasidharan
இப்படத்தைப் பார்ர்க்க பரிந்துரைத்த நண்பர் பிரகாஷ்அர்ஜீன் அவர்களுக்கு நன்றிகள்.
கோபி,தாசில்தார் பணியில் உள்ளவர்.அவருக்கு அழகான மனைவியும், புத்திசாலித்தனமான அழகான இரண்டு பிள்ளைகளும் உண்டு.
அவர்,கௌரவமான தாசில்தார் பணியில் இருப்பவர்.அரபு நாடுகளிலிருந்து வரும் அவருடைய நண்பர்களை சந்திக்கிறார்.அவர்களுடைய வசதிகளையும் ஆடம்பரத்தையும் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்.தானும்,அவர்களைப் போல் வெளிநாட்டிற்குப் போனால் என்ன என்று யோசிக்கிறார்.
அங்கு என்ன தொழில் செய்தால் நன்றாக வசதியாக வாழலாம் என அவர்களைக் கேட்கும் பொழுது,ஒருவர் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டால் அரபு நாட்டில் நன்றாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்று பேராசைக் காட்டுகிறார்.
மற்றொருவர்,டைப்பிங் கற்றுக்கொண்டால் வெளிநாட்டில் சுகமாக வாழலாம் என்கிறார்.
இதைப்பற்றியெல்லாம் மனைவியோடு கோபியும் ஆலோசனை செய்கிறார்.அவளுக்கும் வெளிநாட்டிற்கு போனால்,வசதியாக வாழலாம் என்கிற நினைப்பு இருப்பதால் கணவனின் பேராசைக்கு Support செய்கிறார்.
பரத்,Typing கற்றுக்கொள்ளவும் Tailoring கற்றுக்கொள்ளவும் தீவிரமாக ஈடுபடுகிறார்.
Tailoring கற்றுக்கொள்வதற்கு மட்டும் இரவில் செல்ல வேண்டிய சூழல்.அங்கு டெய்லரின் மகள் மூலமாக இவருக்கு பிரச்னை ஒன்று உருவாகுகிறது.
படம் பார்க்கும் பொழுதே,கௌரவமான அரசாங்க வேலை இருக்கும் போது, இவனுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை எல்லாம் என்றே நினைக்கத் தோன்றும்.
அதற்கான விடையை க்ளைமாக்ஸில் பார்க்கும் பொழுது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.
மிகவும் சாதாரணமான ஒரு கதையை வச்சுக்கிட்டு என்ன அழகா நமக்கு படமா காட்றாங்க.
தாசில்தாரா பரத்கோபி நடித்துள்ளார்.மனுஷன் எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் நூறு சதவீதம் தன் ஆற்றலை நிரூபிக்கக் கூடிய அற்புதமான நடிகர்.
இவருடைய முடியழகை எந்த நடிகரிடமும் நாம் காணமுடியாது.முன் மண்டை பூராம் வழுக்கை.மண்டையின் பின்புறம் மட்டும் கொத்தாக தொங்கிக் கொண்டிருக்கும்.
பெரும்பாலான படங்களில் இதே கெட்டப்பில்தான் வருகிறார்.விக் எதுவும் வைத்துக்கொள்வதில்லை.இதையெல்லாம் பெருங்குறையாக அம்மக்கள் நினைப்பதுமில்லை.அவர்கள் எதிர்பார்ப்பது,நடிகர்களிடமிருந்து சிறப்பான நடிப்பை மட்டுமே!
இவருடைய மனைவியாக மாதவி.1980'களில் இருந்த நடிகைகளில் பேரழகிதான் இந்த மாதவி.
'ராஜபார்வை',திரைப்படத்தில்
'அழகே அழகு .....தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்',எனும் பாடலை ஜேசுதாஸ் வாயிலாக கமல் மாதவியை வர்ணித்துப் பாடுவார்.
மாதவியின் அழகை கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஆழ்ந்து ரசித்த காரணத்தால்தான்,இப்படியொரு அழகான அருமையான பாடலே நமக்கு கிடைச்சிருக்கு.
படத்தில் மாதவிக்கு பெரிதாக மேக்கப் எதுவும் கிடையாது.மிக எளிமையாகவே எல்லாக் காட்சிகளிலுமே வருவார்.இருந்தாலும்,அந்த எளிமையே அவருக்கு மேலும் அழகு சேர்த்து விடும்.
ஏனோ,தமிழ்சினிமாவில் இவருக்கு மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் அமையவே இல்லை.தமிழில்,இவர் நடித்த படங்களில் முக்கியமானவை என்றால்,தில்லுமுல்லு,ராஜபார்வை,தம்பிக்கு எந்த ஊரு,டிக்டிக்டிக் போன்ற படங்களை சொல்லலாம்.
இதில் ராஜபார்வை, தில்லுமுல்லு படங்கள் ஓரளவிற்கு பரவாயில்லை என்று சொல்லலாம்.ராஜபார்வை வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றே நினைக்கிறேன்.Rajkamal production கம்பெனியில் இதுதான் முதல் படம் என்றும் நினைக்கிறேன்.
படத்தின் பெயர்,'அக்கரை',அதான் தமிழ்லே ஒரு பழமொழி இருக்கே,'இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு',அதுதான் படத்தோட Concept.
நிறுத்தி நிதானமா பார்க்க விரும்புவர்களுக்கு அற்புதமான படம்தான், 'அக்கரை'.
கௌரவ வேடத்தில் நெடுமுடிவேணுவும்,மோகன்லாலும்,மம்மூட்டியும் வருவார்கள்.இவர்கள்தான் பரத்கோபியை தூண்டிவிடுவதே.
அதுவும் நெடுமுடி வேணு வரும் காட்சி அட்டகாசம்தான்.கேமராவை கையில் வைத்துக்கொண்டு ,இரண்டு பேரையும் போட்டோ எடுப்பதாக சொல்லிக்கொண்டு ,மாதவிக்கு மட்டும் focus பண்ணுவார் பாருங்க...அங்கேயிருக்கு காட்சியின் சுவாரஸ்யம்.
படத்தின் பலமே எளிமையான காட்சியமைப்புகள்;இயல்பான உரையாடல்கள்தான்.
க்ளைமாக்ஸ்-வெகு சிறப்பு.
Available in you tube.
இத்திரைப்படத்தின் விமர்சனக் காணொளியை எனது மணிடாக்கீஸ் You tube சேனலில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
அதையும் பார்த்து சேனலை Subscribe செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,வணக்கம்.
சே மணிசேகரன்
மீள்பதிவு.
இப்படி ஒரு படம் வந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.
2017 -ல் வெளிவந்த லென்ஸ் படத்தை ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பார்.
இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்திருப்பார் .
G. V. பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசை அமைத்திருப்பார்.
இந்த படத்தில் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி நாயகன் எவ்வளவு பெரிய இன்னல்களுக்கு ஆளாகிறார் என்பதை எதார்த்தமாக சொல்லியிருப்பார்கள்.
மற்றவர்களின் அந்தரங்க காட்சியை வலை தளங்களில் காண்போருக்கும் பதிவேற்றுபவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இந்த படம் இருக்கும்.
சாப்ட்வேர் என்ஜினீயராக நல்ல வேலை அழகான மனைவி ஒரு பெண் குழந்தை இருந்தும் இன்டர்நெட் ஆபாச படங்களுக்கு அடிமையாக இருப்பார் நாயகன்.
பேஸ்புக், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களின் மூலம் மற்ற பெண்களுடன் பேசி அந்த பெண்களிடம் அந்தரங்க விஷயங்களை பெற்று அதை இணையத்தில் பதிவேற்றி தனது சபல வாழ்க்கையை உல்லாசமாக நடத்தி கொண்டிருப்பார்.
அதே சமயம் ஒரு காட்சியில் முகமூடி அணிந்து ஒரு பெண் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசி அவரிடம் பல அந்தரங்க விஷயங்களை பகிர்கிறார்.
நாயகனும் தனது சபல புத்தியால் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் .
ஒரு கட்டத்தில் அந்த பெண் ஒரு மர்ம நபரால் பேசவைக்க பட்டு நாயகனின் அந்தரங்க காட்சியை திருடி கொண்டிருக்கிறார் என்று தெரியவரும் போது மிகுந்த அதிர்ச்சியாகிறார் நாயகன்.
என்ன காரணத்தினால் அந்த நபர் நாயகனிடம் பெண்ணை நடிக்க வைத்தார்.
ஏன்? எதற்கு?
பின்னர் என்ன நடந்தது என்பதை துளியும் சமரசமின்றி சொல்ல வந்த விஷயத்தை படத்தில் சொல்லியிருப்பார்கள்.
இன்றைய கால கட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கும் சபலபுத்தியில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஆண்களுக்கும் பாடமாக இந்த படம் இருக்கும்.
மிகப்பெரிய தோல்வியடைந்த படங்களில் எனக்கு பிடித்த படமாக இதை சொல்லலாம்.
கருத்துரையிடுக