தூள் (2003) - தரணி இயக்கத்தில், விக்ரம், ஜோதிகா, ரீம்மா சென் நடித்த இந்த மசாலா எண்டர்டெய்னர், ஏ. எம். ரத்தினம் தயாரிப்பில் ஜனவரி 14, 2003 அன்று வெளியானது. சுமார் 7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், 12–13 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது.
“தூள்” என்ற தலைப்பு அதற்கு ஏற்றவாறு படம் அதிரடி, நகைச்சுவை, காதல் கதையோடு இணைந்த சமூகக் கருத்துகளை கலந்த ஒரு விருந்தாக அமைந்தது. வித்யாசாகரின் இசை இன்னும் ரசிகர்களின் நினைவில் நிற்கிறது.
ஆறுமுகம் என்ற கிராமத்து இளைஞர், தனது கிராமத்தின் ஆற்றை மாசுபடுத்தும் ரசாயன தொழிற்சாலையை நிறுத்த அமைச்சர் காளைப்பாண்டியை சந்திக்க நகரம் செல்கிறார். அங்கே காதல், நகைச்சுவை, அதிரடி சம்பவங்கள் தொடர்கின்றன

நேரடியாக ரௌடியிஸத்தை கொண்டாடும் படங்கள் வெளிவந்த காலத்தில் ஒரு ஊரை அடக்குமுறையாக வைத்து அரசியல் சிலந்தி வலைக்குள் சிக்கி இருப்பவர்களை வெளியே வரவைக்க சராசரி மனிதராக போராடும் சண்டைதான் இந்த படத்தின் கதையாக உள்ளது. ஒரு கமெர்சியல் படமாக வெளிவந்தாலும் நேரடியாக வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக இந்த படம் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக