வெள்ளி, 16 ஜனவரி, 2026

TRANSFORMERS - படங்கள் தோல்வியடைந்த காரணம் !

 



AGE OF EXTINCTION (2014): இந்த படம் உலகளவில் $1.1 பில்லியன் வசூல் செய்தாலும், அதில் $320 மில்லியன் சீனாவில் மட்டுமே வந்தது. அமெரிக்காவில் வெறும் $245 மில்லியன் தான் கிடைத்தது, இது பெரிய அளவிலான FRANCHISE படத்திற்கு குறைவானது. 

165 நிமிட நீளமான படம், செம்ம குழப்பமான தாறு மாறான கதை, தடுக்கி விழுந்தால் கிராபிக்ஸ்தான் என்ற அளவுக்கு அதிகமான CGI காட்சிகள் இருந்தாலும் செம்ம போரிங் படம் மக்களே இது. 

கதை மீண்டும் மீண்டும் அதே மாதிரி போகிறது ஆனால் காதல் ஜோடிகளாக முதல் மூன்று படங்களை காப்பாற்றிய அந்த கதாநாயகனும் கதாநாயகியும் இல்லை, உணர்ச்சி பிணைப்பு இல்லை என்று ரசிகர்கள் குறை கூறினர். சீன சந்தையை கவர்வதற்காக மனசாட்சி இல்லாமல் மிக மிக அதிக PRODUCT PLACEMENT மற்றும் MARKETING செய்தது, மேற்கத்திய ரசிகர்களை விலகச் செய்தது.

தோற்க வேண்டிய படம் இன்டர்நேஷனல் ரிலீஸ் பக்கம் ஜெயித்தது, இருந்தாலும் அடுத்த படம் இருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் வாங்கிவிட்டது.

THE LAST KNIGHT (2017): இந்த படம் வந்த நேரத்தில் ரசிகர்கள் ஏற்கனவே MICHAEL BAY அதிரடி விசுவல் எபக்ட்ஸ் பாணியில் சலித்திருந்தார்கள். படம் வெளியான முதல் 5 நாட்களில் அமெரிக்காவில் வெறும் $69.1 மில்லியன் தான் வந்தது, ஆனால் தயாரிப்பு செலவு $217 மில்லியன் (மேலும் MARKETING செலவு) இருந்தது. 

உலகளவில் வெறும் $605 மில்லியன் தான் வந்தது, இது AGE OF EXTINCTION வசூலின் பாதி மட்டுமே. ROTTEN TOMATOES மதிப்பீடு 15% மட்டுமே—குழப்பமான கதை, சரியான EDITING இல்லாமை, கதாபாத்திர வளர்ச்சி இல்லாமை எல்லாமே மக்களை கொடுமைப்படுத்தியது. சீன சந்தையிலும் பெரிய அளவிலான வரவேற்பு இல்லை, அதனால் வசூல் குறைந்தது.

இரண்டு படங்களும் CRITICAL BACKLASH, அதிக செலவு, ரசிகர்களின் நம்பிக்கை குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டன. கதை இல்லாமல் சண்டை காட்சிகள் மட்டும் காட்டியதால் ரசிகர்கள் சலித்துவிட்டார்கள். 

அதே நேரத்தில் MARVEL மற்றும் DC போன்ற CINEMATIC UNIVERSES புதிய, சுவாரஸ்யமான கதைகளை கொடுத்ததால் TRANSFORMERS படங்கள் பழையதாக தோன்றின. 

PARAMOUNT நிறுவனம் சீன சந்தையை மட்டும் நம்பியதால், அங்கும் ரசிகர்கள் சலித்தபோது படம் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் BUMBLEBEE (2018) போன்ற SPIN-OFF படங்களில் கதாபாத்திர மையப்படுத்தப்பட்ட கதை சொல்லும் பாணிக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.


கருத்துகள் இல்லை:

DREAMTALKS - EPISODE - 34 - பொன்னான காலம் தவறவிடப்படுகிறது !

நம் வாழ்வில் நேரத்தை வீணடிப்பது எளிதானது. இன்று “நேரத்தை கொல்லுதல்” என்ற போக்கு பரவலாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் முடிவில்லாமல் ஸ்க்ரோல் செ...