இணையத்தில் இருந்து எடுத்த பதிவு : தமிழ் குடும்பங்களில் கடந்த சில தசாப்தங்களில் “சப்பாத்தி சாப்பிடுவது தான் ஆரோக்கியம்” என்ற ஒரு கலாச்சாரம் உருவாகி விட்டது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் குறைக்க விரும்புவோர், அரிசியைத் தவிர்த்து சப்பாத்தியைத் தேர்வு செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால் உண்மையில் சப்பாத்தி அரிசியை விட எவ்வளவு ஆரோக்கியமானது?கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் ஒப்பீடு : ஒரு கிண்ணம் வெள்ளை அரிசி (சாதம்): சுமார் 280 கலோரி, 62 கிராம் கார்போஹைட்ரேட். நான்கு சப்பாத்தி (முழு கோதுமை): சுமார் 360 கலோரி, 69 கிராம் கார்போஹைட்ரேட். இதனால், அளவுக்கு அதிகமாக சப்பாத்தி சாப்பிட்டால், அரிசியை விட கலோரி, கார்போஹைட்ரேட் அதிகமாகும். முக்கிய வித்தியாசம் – நார்ச்சத்து அரிசியில் நார்ச்சத்து மிகக் குறைவு. முழு கோதுமை சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகம். இதனால், சப்பாத்தி சாப்பிடும் போது வயிறு நிறைவாக இருக்கும், கார்போஹைட்ரேட் மெதுவாக உடலில் உறிஞ்சப்படும். இதுவே glycemic index (GI) வித்தியாசத்தை உருவாக்குகிறது: வெள்ளை அரிசி GI: ~60 சப்பாத்தி GI: ~45 சப்பாத்தி சாப்பிடும் போது இரத்த சர்க்கரை திடீரென அதிகரிக்காமல், மெதுவாக உயரும். சப்பாத்தி கலாச்சாரத்தின் தோற்றம் - 1980களில் உடல் பருமன், நீரிழிவு நோய் அதிகரித்தபோது, “அரிசியை விட சப்பாத்தி சாப்பிடுவது நல்லது” என்ற கருத்து பரவியது. வடஇந்தியர்களின் உணவு முறையைப் பின்பற்றி, தென்னிந்தியர்களும் சப்பாத்தியை ஏற்றுக்கொண்டனர். ஆனால் வடஇந்தியர்கள் 2–3 சப்பாத்தி சாப்பிடுவார்கள்; நம்முடைய மக்கள் 10–12 சப்பாத்தி சாப்பிடும் பழக்கம் கொண்டதால், அதிக கலோரி, அதிக கார்போஹைட்ரேட் உடலில் சேர்கிறது. GLUTEN பிரச்சினை சப்பாத்தி (கோதுமை) யில் GLUTEN என்ற புரதம் உள்ளது. சிலருக்கு (CELIEC DISEASE - GLUTEN SENSITIVITY) இது பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்று கோளாறுகள், மூட்டு வலி, LEAKY GUT SYNDROME போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எல்லோருக்கும் பாதிப்பு இல்லை; ஆனால் உணர்திறன் GLUTEN SENSITIVITY உள்ளவர்களுக்கு சப்பாத்தி தீங்கு விளைவிக்கலாம். அரிசி, சப்பாத்தி இரண்டிலும் கலோரி, கார்போஹைட்ரேட் அதிகம். சப்பாத்தி சாப்பிடும் போது, காய்கறி, பருப்பு, புரதம் சேர்த்து சாப்பிட வேண்டும். அரிசி சாப்பிடும் போது, நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி, சாலட், பருப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். மற்றபடி “சப்பாத்தி சாப்பிட்டால் சுகர் குறையும்” என்பது தவறான புரிதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக