Saturday, October 5, 2024

GENERAL TALKS - சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிளான் போட வேண்டும் !




ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினாலும் நீங்கள் ராஜாவாக உங்களை மேலே கொண்டுவந்துவிடலாம். இந்த கருத்தை உணர்த்த ஒரு சிறுகதை இருக்கிறது. 
ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிகப் பெரும் பணக்காரனாக இருந்த ஒருவன் அடுத்த சில நாட்களில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்து, மரம் வெட்டிப் பிழைப்பான் என்று அவனது விதி அவனுடைய கனவில் வந்து ஆரூடம் சொல்லியதாம். இந்த வாக்கை போலவே வாழ்க்கையில் அடுத்தடுத்த தடங்கல்களும் நஷ்டங்களும் வந்து சொத்துக்களை இழக்கும்போது முதலில் தளர்ந்து போனாலும் மூளையை விட்டுக்கொடுக்காமல் சாதுர்யமாக யோசித்து அவன் ஒரு முடிவெடுத்தான். அதன்படி, அவன் வழக்கம் போல் தனவந்தனாகவே தொடர்ந்தது மட்டுமல்லாமல், முன்பைவிடவும் அதிக செல்வந்தனானான். அப்படி என்ன அவன் செய்தான்? மரம் வெட்டிப் பிழைக்க வேண்டும் என்பது தானே அவன் விதி? அதனால், காட்டுக்குச் செல்வான். அங்கே கண்ட கண்ட மரங்களையும் வெட்டாமல், சந்தன மரம் இருந்தால் மட்டுமே வெட்டுவான். இல்லையென்றால், அன்றைய தினம் பொழுது சாய்வதற்குள் அவன் கண்களில் எப்படியாவது ஒரு சந்தன மரம் தட்டுப்பட்டுவிடும். ஆமாம், மரம் வெட்டிப் “பிழைக்க” வேண்டும் என்பது அவன் விதியாயிற்றே! அதுவும் ரொம்பவும் சிரமப்பட்டெல்லாம் உடல் வருத்தி வெட்டமாட்டான். இரண்டு அல்லது மூன்று வெட்டுகள் போட்டதுமே, மரம் சாய்ந்துவிடும். எடுத்துப் போய் ஊரில் நல்ல விலைக்கு விற்க அவனுக்கு ஆள் பலம் அம்பு எல்லாம் உண்டு! அப்புறம், அவன் வளத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன? விதி சொன்ன வார்த்தையை விதிக்கே எதிராக பயன்படுத்துவதுதான் விதியை வெல்ல சரியான வழியாக கருதப்படுகிறது. விதி யாருக்குமே நன்மை செய்வதில்லை. அப்படியே செய்தாலும் இப்போது எல்லாம் தவறான ஆட்களுக்குதான் நல்லது செய்கிறது என்பதால் நாம்தான் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். இதுதான் வாழ்க்கை. இப்படித்தான் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். 

MUSIC TALKS - ORU SILA NODI KULANDHAI-YAI POLE ! MARU SILA NODI KADAVULAI POLE ! PALA NODIGALIL ADHANINUM MELE NEE AANAY ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



யாரே நீ ? எங்கிருந்து வந்தாய் ? என் நெஞ்சில் சிறகு தந்தாய்
யாரோ நீ ? பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய்
ஒரு சில நொடி குழந்தையைப்போலே மறு சில நொடி கடவுளைப்போலே
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானாய்

உயிரினை தரும் உதிரத்தை போலே
உயரத்தை தொடும் சிகரத்தை போலே
அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்

வேறேதோ தூவுலகம் ஒன்றில் இவனாலே பூக்கிறேனா
ஊனுல்லா மின்னுணர்வு ஒன்று இவனாலே பாயிறேனா
இவனிடம் பணம் ஒரு துளி இல்லை மனிதரின் குணம் சிறு துளி இல்லை
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே !
திரை விலகிய மேடையை போலே பனி விலகிய கோடையைப்போலே
மழை நனைந்திடும் ஆடையைப்போலே ஆனேனே !

மரம் செடிகொடிகளை அணைத்தாயே ! மலர்களின் இதழ்களை துடைத்தாயே
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய் ?
வனங்களின் மகனென பிறந்தாயே புலிகளின் மடியினில் வளர்ந்தாயே
மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய் ?

மாறதே ! உன்னை உன் போல ஏற்றேனே !
ஆனாலும் உண்மை என்ன என்று கேட்டேனே ! உரைந்திடு 

யாரே நீ ? எங்கிருந்து வந்தாய் ? என் நெஞ்சில் சிறகு தந்தாய்
யாரோ நீ ? பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய்
ஒரு சில நொடி குழந்தையைப்போலே மறு சில நொடி கடவுளைப்போலே
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானாய்


MUSIC TALKS - ADI AATHI VAADAIYILE PATTA MARAM KODAIYILA KOLUNDHU VIDAATHAA ? PODI MULLUKULLA POTTA VEDHAI MUTTI MUTTI MOLAICHU VIDAATHAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா
மயங்கி மருகறேயே மறந்து நானும் போவேனா ?
மலைய நாராக்கி மாலை கட்ட மாட்டேனா ?
ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா

என்னதான் உறவிருந்தாலும் உன்னைத்தான் நினைக்கிறேன்
இருந்தும் உசுரு இல்லாம என்னமோ இருக்கிறேன்
தங்கமே உன்ன எண்ணித்தானே தவியா தவிக்கிறேன்
தரையில் துடிக்கிற மீனை தண்ணிக்குள் இழுக்கிறேன்
பொட்டு வச்ச குமரிபெண்ணே கேளடி !
நீ எட்டு வச்சா இமயமலை ஏழடி !
அழற பொன்னே கொஞ்சம் சிரிச்சிப்புடு 
அந்த சிரிப்புக்குள்ள துன்பம் எரிச்சுப்புடு

ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா
அழுது போலம்புறது அர்த்தம் இல்லை அம்மாளு !
நம்பியே நடந்து வந்தா நாளைக்கு நீ நம்மாளு !

கனவு அறுத்து விட்டாலே மீண்டும் தொடருமா ?
காதல் தொலைந்து விட்டாலே கையில் சேருமா ?
நெருப்பை ஒளிச்சு வச்சாலும் நெசமா அணையுமா ?
நெஞ்சை தொலச்சுபுட்டாலும் நினைப்பு தொலையுமா ?
நீ வாழ்வதுனா வாழ்க்கை வரும் பாரம்மா
அந்த வானமேல்லாம் பொம்பளைக்கு கீழம்மா
அடி பறக்க ஒரு ரெக்கை இருக்கு
வானம் ரொம்ப பக்கம் இருக்கு


OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 7




https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-aalaana-naal-mudhalaa.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-single-pasanga-ippo-mingle.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-kala-kalavena-pozhiyum.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-konji-pesida-venaam-un.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-un-pani-thuli-pani-thuli.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-aagaaya-sooriyanai-otrai.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-azghagiya-lailaa-aval.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-yemathi-yemaathi-imaiyale.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_24.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-engirundhaai-naan-mannil.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-pesadhe-paarvaigal-veesadhe.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-azhagina-azhagi-askaava.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-idhal-yenguthu-noguthu.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-nee-kattum-selai-madippula.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_28.html

https://tamilnsa.blogspot.com/2024/06/cinema-talks-mission-impossible-dead.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_47.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_91.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_50.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_90.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_29.html

https://tamilnsa.blogspot.com/2024/06/general-talks_69.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-ice-katti-kuruvi-urugi.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-mena-minukki-mena-minukki.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-sahaana-saaral-thoovutho.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-samikkitta-sollipputten.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-hey-dushyandhaa-hey.html

https://tamilnsa.blogspot.com/2024/06/music-talks-hey-baby-baby-moondre.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kannai-kaatu-podhum.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-embuttu-irukkudhu-aasai-un.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-vidala-pulla-nesaththukku.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-oru-thadavai-solvaaiyaa.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-aadaatha-aattam-ellam.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-ammadi-ammadi-nerungi-oru.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-yaaro-manadhile-yedho.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_7.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-oh-oh-uyire-adiye-adiye-un.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-chinna-chinna-vanna-kuyil.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_67.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_92.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_56.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-enakkena-yerkanave.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-ennai-konja-konja-konja.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_9.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-saththam-illatha-thanimai.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-poo-malarndhida-nadamidum.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-yaaro-yaarukkul-ingu-yaaro.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-sollattuma-ondru.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_14.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-ondraa-rendaa-aasaigal.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-thaalaattum-kaatre-vaa.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-nenje-nenje-nee-enge-naanum.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-oh-penne-penne-en-kanne.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kannamma-kannamma-meenu.html

https://tamilnsa.blogspot.com/2024/07/cinema-talks-garudan-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-muthu-muthaa-pencha-mazhai.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-chikku-bukku-chikku-rayilu.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-siragugal-vandhathu-engo.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_17.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_54.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kaadhal-sadugudugu-kanne.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-megam-megam-thooram.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kannum-kannum-nokia-nee.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kadhal-website-ondru-kanden.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-idhuvarai-illadha-unarvidhu.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kanaa-kangiren-kanaa.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-nee-illai-endraal.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-eppo-nee-ennai-paarpa.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-kannan-varum-velai-andhi.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_25.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-malargale-malargale-malara.html

https://tamilnsa.blogspot.com/2024/07/cinema-talks-missing-link-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_18.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_26.html

https://tamilnsa.blogspot.com/2024/07/cinema-talks-guardans-of-galaxy-vol3.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks-1.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_24.html

https://tamilnsa.blogspot.com/2024/07/cinema-talks-elemental-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_47.html

https://tamilnsa.blogspot.com/2024/07/cinema-talks-vadakkuppatti-ramasamy.html

https://tamilnsa.blogspot.com/2024/07/cinema-talks-suraa-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_29.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_84.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_93.html

https://tamilnsa.blogspot.com/2024/07/music-talks-adikkadi-mudi-kalaivadhil.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks-adi-latchavathiye-ennai.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_28.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_19.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_69.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_73.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_16.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_87.html

https://tamilnsa.blogspot.com/2024/07/general-talks_62.html











































Friday, October 4, 2024

GENERAL TALKS - உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னாலும் !




இந்த கதை நான் சமீபத்தில் படித்த ஒரு கதை. ஒரு நல்ல மனமுள்ள அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரசவையில் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “நான் தான் அரசனிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், “இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது” என்றான். துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை,“ என்றார். அரசன், “நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக் கொள்ளலாம்” என்றான்.
 இங்கே அதிகாரிகளுக்கு ஒரு சிறிய சோதனை வைத்தார் துறவி. “அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஒரு மிகப்பெரிய பாத்திரம்  வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும், “ என துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், “இதுதானா சோதனை?” என இகழ்ச்சியாகக் கேட்டான். பின் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த  மிகப்பெரிய பாத்திரம் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது  மிகப்பெரிய பாத்திரம் நிறையத் தண்ணீர் தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, எல்லோரும் பாலைத் தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது?” என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என தெரிய வந்தது. இங்கே நேரடியாக உதவி பண்ணாமல் உதவி பண்ணுவதை போல நடிப்பாவார்களும் இருக்கிறார்கள். இயலமையால் உதவி பண்ண முடியாதவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் உங்களோடு இருப்பவர்கள் எந்த ராகம் என்று நீங்கள்தான் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும். காலம் இந்த விஷயங்களில் கண்டிப்பாக நடிப்பவர்களை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிடும். 

GENERAL TALKS - இந்த கதை பாட புத்தகங்களில் கூட வந்துள்ளதாக ஞாபகம் !




இந்த கதை பாட புத்தகங்களில் கூட வந்துள்ளதாக ஞாபகம் ! ஒரு தன்னம்பிக்கையற்ற நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது. அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான். மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான். செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான். பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை! இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்துவிட்டான். மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான். அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள். அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது. அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது. திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம். இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. இதுதான் இந்த கதையின் கருத்து. நம்பிக்கை இல்லாமல் காரியத்தில் இறங்க வேண்டாம். மூட நம்பிக்கைகள் நம்மை வளைத்துக்கொள்ள பார்க்கும். உண்மையான நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொண்டால் அந்த நம்பிக்கை கொஞ்சமாக இருந்தாலும் நம்மை ஜெயிக்க வைக்கும் என்று ஒரு கணிப்பு உள்ளது. 

GENERAL TALKS - இன்னொரு கட்டம் ! இது ஒரு ஃபேஸ் - 2 பதிவு !!




இதுவரைக்கும் இருந்த ஜெனரல் டாக்ஸ் பகுதி இனிமேல் மறுபடியும் வராது என்று கடைசி பதிவில் சொல்லி இருந்தோம் ஆனால் இந்த சமுதாயத்துக்கு ஜெனரல் டாக்ஸ் பகுதி தேவைப்படுகிறது. இனிமேல் வரப்போகும் பதிவுகள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கபோகிறது என்ற நம்பிக்கை எனக்குள்ளே இருக்கிறது. இதுவரைக்கும் நடந்த விஷயங்கள் அணைத்துக்குமே என்னிடம் ஒரு எக்ஸ்ப்ளைனேஷன் இல்லை ! நடக்கும் விஷயங்கள் தவறாக நடக்கிறது என்று தெரிந்தாலும் துணைபோகவே சக்திகள் கட்டாயப்படுத்துகிறது. இருந்தாலுமே நடக்கும் விஷயங்களின் சாரம்ஸம் இப்போது புரிந்துவிட்டது. இதனை பார்க்கும்போது வேறு எந்த சக்தியும் தடுக்காதது போலத்தான் நமக்கு தோன்றும் உண்மையில் நம்மை தடுக்கும் சக்திகளை மொத்தமாக சாம்பலாக மாற்றும் அளவுக்கு அதிகபட்ச சக்திகள்தான் நமக்கு இப்போது தேவையானது என்று நினைத்தால் அதுதான் தவறானது ! உண்மையில் தேவைப்படுவது மிக சிறந்த அறிவு திறன் ! போதுமான அறிவு இருந்தால் சக்திகள் நமக்காக தானாகவே சேகரித்துக்கொள்ளலாம்.  நம்மால் அறிவோடு முடிவெடுக்க முடியவில்லை என்றால் நம்மால் கடைசியில் என்னதான் சாதிக்க முடியும் ? அப்படியே சாதித்தாலும் அத்தகைய சாதனைகள் நிலைத்துவிடுமா ? நாம் அடைந்த வெற்றிகளை காப்பாற்றிக்கொள்ள முடியுமா ? இங்கே இந்த துறையில் உடல்நல குறைபாடு அதிகமாக உள்ளது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது. மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் உடல் நலத்தை காப்பாற்ற முடியாதா ? பிஸிக்கல் வொர்க் இல்லாமல் முடி கொட்டுதல் நடக்கிறது. முரட்டு தீனி வொர்க் நேச்சர் கண்டிப்பாக சரியில்லை. நல்ல சாப்பாடு கண்டிப்பாக சாப்பிட முடியாது. வீட்டு பிரச்சனைகளில் வாழ்க்கையே போய்விடுகிறது. பிரிவிலேஜ்மென்ட் , செட்டில்மென்ட் , ரெப்புட்டேஷன் , என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. தொடர்ந்து 10 வருடம் வேலை பார்க்க கண்டிப்பாக விருப்பம் இல்லை. இந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்ணினால் கண்டிப்பாக வென் யூ கட் தி லேர்னின்க் , யூ ஆர் டெட் ! என்ற ஒரு நிலைதான் இங்கே இருக்கிறது. இருந்தாலுமே எழுத்து துறையில் ஜெயிப்பது ஒரு போரை வெற்றி அடைவதற்கு சமமானது ஆகும் !

GENERAL TALKS - ஆசைகள் நம்மை தடுத்து நிறுத்தும் காரணிகளாக மாற கூடாது !

 



ஒரு மனிதன் எப்போதும் அவனுடைய ஆசைகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். மேலும் தான் ஆசைப்படும் விஷயங்களை ஒவ்வொன்றாக அடைய முயற்சிக்க வேண்டுமே தவிர்த்து ஒரே நாளில் ஒரே நேரத்தில் அடைய முயற்சிப்பது கடினமானது. இது குறித்து சமீபத்தில் ஒரு சிறுகதை கேள்விப்பட்டேன். பள்ளிக்கூடம் முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஜாடி நிறைய வேர்க்கடலைளுடன் தரையில் யாரோ வைத்திருப்பதை பார்க்கிறான். அந்த ஜாடி குறுகிய கழுத்து பகுதியை கொண்டதாகவும், மேலும் முழுவதும் வேர்க்கடலை நிரம்பியதாகவும் இருந்தது. வேர்க்கடலையைக் கண்டதும் சிறுவன் அதை சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டான். எனவே, பதற்றத்துடன் அவன் தன் கையை ஜாடிக்குள் விட்டு, கை நிறைய வேர்க்கடலைகளை எடுக்க முயன்றான். ஆனால், அவன் கையை வெளியே எடுக்க முயன்றபோது, அவனால் கைகளை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே, அவன் ஏமாற்றமாக உணர்ந்து அழுதுவிட ஆரம்பித்தான். இந்த சோதனையை செய்யும் மனிதர் தூரத்தில் இருந்து சிறுவனின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சிறுவனிடம் வந்து அவசரப்படாதே, கொஞ்சம் கொஞ்சமாக நீ இந்த வேர்க்கடலைகளை எடுத்தால்தான், நீ உன் கையை வெளியே எடுக்க முடியும். இப்படி செய்தால் எல்லா கடலையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசையை விடு என்றும் நிதானமாக எடுத்து சாப்பிட கற்றுக்கொள் என்றும் யோசனைகளை கொடுத்தார். அவர் கூறியது போல் சிறுவன் செய்தான், வேர்க்கடலைகளை எடுத்து சந்தோஷமானான். அவன் அந்த மனிதருக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றான். இந்த கதையில் லாஜீக் குறைவுதான் என்றாலும் சொல்லவரும் மேட்டர் என்னவென்றால் எல்லா நேரமும் நீங்கள் ஆசைப்படும் எல்லா விஷயமும் குறுகிய காலத்தில் கிடைத்துவிடும் என்று நினைக்க வேண்டாம். உங்களின் ஆசைகளை ஒவ்வொன்றாகவே நிறைவேற்றுங்கள். அதுதான் நிதானமானது. 

GENERAL TALKS - தற்காலிகமான மரியாதை தேவையற்றது !




ஒரு இடத்தில் நமக்கு தற்காலிகமாக மட்டுமே மரியாதை கிடைக்கும் என்றால் அந்த இடத்தில் நாம் இருக்க கூடாது. காரணம் என்றால் தற்காலிகமாக மரியாதை கொடுக்கும் இடங்களில் இருப்பதை விட இல்லாமலே இருக்கலாம் . ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வெளியூருக்குச் சென்றார். தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் பயணம் செய்ததால் அவர் களைத்துவிட்டார். உடைகளும் அழுக்கடைந்து விட்டன. வழியில் ஒரு ஊரில் சிறிய சத்திரம் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து செல்லலாம் என அங்கு சென்றார். அங்கு பராமரிப்பதற்காக இரண்டு வேலைக்காரர்கள் இருந்தனர். செல்வந்தர் தன் அழுக்கான ஆடையுடன் அங்கு சென்றார். அங்கிருந்த வேலைக்காரர்கள் அவரது உடையைக் கண்டு அலட்சியமாக நடத்தினர். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார் பின்னர் குளித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டார் செல்வந்தர். வெளியே வந்த அவர் ஆளுக்கு ஒரு தங்கக் காசைப் பரிசாக அளித்தார். வேலைக்காரர்களுக்கு ஆச்சரியாமாகிவிட்டது! இவர் பெரிய செல்வந்தர் என்று தெரிந்திருந்தால் அவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருக்கலாமே. இன்னும் நிறைய காசுகள் தந்திருப்பாரே என்று நினைத்தனர். ஒரு சில வாரங்கள் கழித்து அந்த செல்வந்தர் வேறொரு வேலை நிமித்தமாக சென்றவர் தன் பணியை முடித்துக்கொண்டு, வழியில் அதே சத்திரத்தில் வந்து தங்கினார். வேலைக்காரர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். வேலைக்காரர்களுக்கு ஒரே சந்தோஷம்! அவருக்கு குளிக்க வெதுவெதுவென்ற வெந்நீர், துவட்டிக்கொள்ள உயர்தரமான துவாலை, உடலில் பூசிக்கொள்ள வாசனை திரவியங்கள் என்று ஏகமாய் உபசரித்து ராஜ உபசாரம் செய்தனர்! அவர் தங்களுக்கு சென்றமுறை தந்ததைவிட அதிக பொற்காசுகள் தருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் செல்வந்தர் ஆளுக்கு ஒரு செப்புக் காசு மட்டுமே அளித்தார். வேலைக்காரர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. "இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்த செப்பு காசுதானா பரிசு?" என்று வேலைக காரர்கள் கேட்டனர். அதற்கு செல்வந்தர், ”அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த தங்கக்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று நான் கொடுத்தது அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தி செய்த உபசாரத்திற்கான பரிசு!" என்று கூறியவாறே சென்று விட்டார். வேலைக்காரர்கள் தலைகுனிந்தனர். தோற்றத்தைக் கண்டு யாரையும் எடைபோடக் கூடாது. எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து யாரையும் உபசரிக்கக்கூடாது. இது எல்லாமே வாழ்க்கையில் அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். சிறப்பான விருந்தோம்பல் என்பது கடினமான நேர்த்தியான ஒரு செயல். ஒருவர் நடந்துகொள்ளும் விதமே அவர் எப்படிப்பட்டவர் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிடும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இது எல்லாம் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்காது. நாம்தான் தெரிந்து நடக்க வேண்டும் !  

MUSIC TALKS - OODHAA COLORU RIBBON - YAAR UNAKKU APPAN - NEE SOLLADI AVANUKKU NAAN SAVAAL PODANUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !







ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் 
சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் 
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ரோஜா ரோஜா ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி 
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி 
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி 
மத்தவங்க சிாிப்ப பாத்தா ஒகே வெறும் ஒகே 
நீ சிாிச்சு பேசும் போது எனக்கு வந்துடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல போரு போரு 
சிங்காாி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ 
KINGFISHER BEER-U !


மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி 
நீ உரசி போன பிறகு பாத்தா காலி ஐ எம் காலி
மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி 
நீ கடந்து போன பிறகும் குளிரு ஏசி விண்டோ ஏசி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னோடய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட ! 

தாங்க்ஸ் யா ! 

ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் 
சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் 
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ரோஜா ரோஜா ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி 
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்

MUSIC TALKS - SEMPOOVE POOVE UN MEGAM NAAN VANDHAAL ORU VAZHI UNDOW - SAAINDHAADUM SANGIL THULI PATTALUM MUTHAAGIDUM MUTHUNDE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
படைகொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஓஹோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ
இமைகள் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக 
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம்தொட்டு 
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் 
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா ?
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ 
கை வளை கைகளை கீறியதோ

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று 
காத்திருக்கு உள்ளம் நொந்து 
கண்கள் என்னும் தூண்டில் 
தும்பி பாடிச் செல்லாதோ
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு 
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தால் ஓர் ஆடை சூடிக்கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணைபுதையல் ரகசியமே
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ




Thursday, October 3, 2024

CINEMA TALKS - BLINDSPOTTING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இங்கே இன்டர்னேஷனல் சினிமா பார்க்கும்போது பெரும்பாலான நேரங்களில் சினிமா என்பது மக்களுக்கு ஒரு கருத்தை சொல்லக்கூடிய கருவியாக இருப்பதை கவனிக்க முடிகிறது. இந்த படம் கண்டிப்பாக இன்டர் நேஷனல் சினிமாவால் கவனிக்க வேண்டிய ஒரு படம். கறுப்பு இன மக்கள் மீது இருக்கும் வெறுப்பால் வெள்ளை நிற காவல்துறை அதிகாரியால் சுட்டு கொல்லப்படுகிறார் ஒரு அப்பாவி கருப்பு இளைஞர். இந்த கொலையை நேரில் பார்த்தாலும் சாட்சி சொல்லாமல் பயந்து செல்கிறார் நம்முடைய கதாநாயகர். ஒரு ஒரு நாளும் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்தவே சோகத்தை உள்ளே மறைத்து நன்பரோடு நகர்வலமாக வாழ்க்கையை நடத்த அவருக்கு ஒரு காரணம் உள்ளது. தெரு சண்டை வழக்கில் ஒரு நபரை கோபமாக அடித்ததால் கொலை முயற்சியாக வழக்கு பதிவு பண்ணப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து இருப்பதால் கண்டிப்பாக இன்னொரு வம்பில் சிக்கினால் வாழ்நாள் முழுதும் சிறையில் முடிந்துவிடும் என்பதால்தான் சாட்சி சொல்லவில்லை. அடுத்த சில வாரங்களுக்கு அவருடைய வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களும் அதனால் உருவாகும் மன மாற்றமும் என்று படம் சுறுசுறுப்பாக திரைக்கதை கொடுத்து யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்துவிடுகிறது. கிளைமாக்ஸ்ஸில் ஒரு நல்ல மெசேஜ் நமக்கு கிடைக்கிறது. நிறவெறியாளர்களின் இனவெறி எப்படி சராசரி மனிதர்களை பாதிக்கிறது என்று மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை இயல்பாக கொஞ்சம் நகைச்சுவையாக படத்தை நகர்த்தி இருப்பது சுவாரசியமான விஷயம். இது போன்று படங்களை அதிகம் பார்க்க முடியாது.

MUSIC TALKS - THE NOSTOLGIC SONG DEFINED COMMERCIAL TREND IN 2004 TAMIL CINEMA - SRI KANTH DEVA - KAIYA VECHAA WRONG AA PONADHILLA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





ஆ முதல் ஃ தானடா ஹான்
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா ஹான் ஹான்
A முதல் Z தானடா , இவள் எவர் சில்வெர் தட்டுதானேடா !
கொட்டாங்குச்சிக்குள்ளேவாயேன்டி ரெண்டு பேரும் 
கூட்டாஞ்சோறு ஆக்கி துண்ணலாம்
எட்டா நம்பர் போல தேகத்தை நானும்
இப்ப ஒன்னாம் நம்பர் ஆக்க போறேன்டா !

வாழை மரமா இருக்குறாலே வழவழப்பா சருக்குறாலே 
கந்து வட்டியா பெருக்குறாலே கண்ணு உருட்டி முறைக்குறாலே
மாங்கா ஒன்னு நீ தின்ன மாதாவரம் பால் பண்ணை 
மொண்டு மொண்டு நான் தின்ன முன்னே வாயேன்டி
உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க பச்ச புள்ளயா தாலாட்டேன்டி
இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில மனசு தள்ளாடி போச்சுதடி

ஒத்த ரூவா பொட்டுக்காரி ஒத்துழைக்க கெட்டிகாரி 
தல தலன்னு குலுங்கி வரும் தாகம் தீர்க்கும் தண்ணி லாரி
பின்னழகு பூந்தோட்டம் முன்னழகு மான்தோட்டம் 
தூர நின்னு பாதுகாக்கும் தோட்டகாரன் நான்
தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்து புட்டா
தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம் தான்
வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன்
கூட நீ இருந்தா கும்மாளம் தான்


MUSIC TALKS - SILLENDRA THEEPORI ONDRU SILU SILU SILUVENA KULU KULU KULUVENA SARA SARA SARAVENA PARAVUDHU NENJIL PAARTHTHAYAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சில்லென்ற தீப்பொறி ஒன்று 
சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென 
சர சர சர வென பரவுது 
நெஞ்சில் பார்த்தாயா

இதோ உன் காதலன் என்று 
விறு விறு விறுவென
கல கல கலவென 
அடி மன வெளிகளில் 
ஒரு நொடி நகருது கேட்டாயா

உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே

கண்ணா உன் காலணி உள்ளே 
என் கால்கள் நான் சேர்ப்பதும் 
கண்மூடி நான் சாய்வதும் 
கனவோடு நான் தொய்வதும் 

கண்ணா உன் கால் உறை உள்ளே 
என் கைகள் நான் தொய்ப்பதும் 
உள்ளுற தேன் பாய்வதும் 
உயிரோடு நான் தேய்வதும்

முத்து பையன் தேநீர் உண்டு 
மிச்சம் வைத்த கோப்பைகளும் 
தங்க கைகள் உண்ணும் போது 
தட்டில் பட்ட ரேகைகளும் 
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் 
தித்திக்குதே தித்திக்குதே

அன்பே உன் புன்னகை கண்டு 
எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்

அக்கம் பக்கம் நோட்டம் விட்டு 
ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்
தித்திக்குதே தித்திக்குதே


MUSIC TALKS - KODUTHATHELLAM KODUTHTHAN AVAN YAARUKKAGA KODUTHTHAAN ? ORUTHARUKKA KODUTHAAN ILLAI OORUKKAGA KODUTHTHAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ? ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்



Wednesday, October 2, 2024

MUSIC TALKS - PESUGIREN PESUGIREN UN IDHAYAM PESUGIREN SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !









பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா

கடல் தாண்டும் பறவைகெல்லாம் 
இளைப்பாற மரங்கள் இல்லை 
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும் 
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய் 
முடிவு என்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது 
வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் 
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை 
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம் தானே 
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது 
வழியாமல் தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே  வா
அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா



MUSIC TALKS - PANIVIZHUM MALARVANAM UN PAARVAI ORU VARAM - INI VARUM MUNIVARUM THADUMAARUM KANI MARAM ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
-
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் 
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்
-
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி


MUSIC TALKS - CHINNA SONG THAAN - MUSIC LA HEAVILY EXTENDNED - KARU KARU KARUPPAYI ! NEE VELUTHATHENNA KARUPPAYI ! THODA THODA THODAMATTEN ! THOTTA NAANUM VIDAMATTEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கரு கரு கருப்பாயி நீ வெளுத்தது ஏன் கருப்பாயி ?
தொட தொட தொடமாட்டேன தொட்டா நானும் விடமாட்டேன்
கரு கரு கருப்பாயி நீ வெளுத்தது ஏன் கருப்பாயி ?
தொட தொட தொடமாட்டேன தொட்டா நானும் விடமாட்டேன்
சிரி சிரி சிரிப்பழகா !  சிலுத்தது ஏன் சிரிப்பழகா 
விடு விடு விடமாட்டேன்... நீ தொடம நான் விடமாட்டேன்
சுடும் சுடும் நெருப்ப போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்ப போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா

திருப்பாச்சி அருவா போல வளைஞ்சு நிக்குற உடம்பு இது
மணியாச்சு வீரத்தை நான் பார்த்ததுல மயங்கி புட்டேன்
சொப்பன சுந்தரியே ரொம்ப தான் கொஞ்சுறியே
எல்லைய மிஞ்சுறயே தொந்தரவு பண்ணுறியே
உன் பேச்சு சொழட்டி விட்ட சோழியடி
பித்தாச்சு உன் நினைப்பு எனக்கு இப்ப பொழப்பாச்சு
எனக்கு இப்ப பொழப்பாச்சு ! பொழப்பே தான் நெனப்பாச்சு
நடந்ததா நெனச்சுக்குவோம் நெனச்சதை நடத்திக் குவோம்
எப்போ எப்போ கட்டிலில் பாய் விரிச்சு பரிசம் போட்டுக்குவோம்
சுடும் சுடும் நெருப்ப போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன் பத்திக்கலாமா !
கரு கரு கருப்பாயி நீ வெளுத்தது ஏன் கருப்பாயி ?
தொட தொட தொடமாட்டேன தொட்டா நானும் விடமாட்டேன்


MUSIC TALKS - VANGA KADAL YELLAI NAAN SINGAM PETHA PULLA SEERI PAAYUM ENNAI NEE SEENDI PAAKADHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




வங்க கடல் எல்லை நான் சிங்கம் பெத்த புள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத
பஞ்சவர்ண கூட்டம் இது பாரிஜாத தோட்டம் 
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா ! 

அரைச்ச சந்தனத்தை போல மயக்க வைக்குறியே ஆளை 
வயசு பொண்ணு இருக்கு பூத்து வந்து மஞ்சள் தண்ணி ஊத்து
யம்மா யம்மா யம்மா யம்மா மோப்பம் விடாதே
என்ன பார்த்து என்ன பார்த்து ஏப்பம் விடாதே
ஜமாய் ஜமாய் ஜமாய் ஜமாய் சக்கரகட்டி
சமாய் சமாய் சமாய் பண்ணு வித்தைய காட்டி

வங்க கடல் எல்லை நான் சிங்கம் பெத்த புள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத
பஞ்சவர்ண கூட்டம் இது பாரிஜாத தோட்டம் 
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா

பூக்காரனே உன் காதிலே பூ வைக்கவா சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூ வைக்கவே யாரும் இல்லை அடடா மன்மதா
மழை  மழை மழை மேனிதான் குளு குளு குளு கேணிதான்
மொத்தமாக அத்தனையும் உனக்குதான் !
கொக்கரிக்கும்  சுந்தரி கோபக்கார போக்கிரி
சூரியன கூப்பிடாத ராத்திரி
கரும்பு தின்ன ஒரு கூலி  ! எறும்புகில்ல இங்க வேலி
புடவை கட்டி வந்த தேனி  பொழுது போயிருச்சு போ நீ
குண்டு மாங்கா குண்டு மாங்கா தோப்புக்கு வாயா 
கொத்து கொத்தா காச்சிருக்கு சாப்பிட்டு போயா
அடேங்கப்பா அடேங்கப்பா ஆசைய பாரு
சுறா இது மாட்டிக்காது வேலைய பாரு

படகோட்டியே பட்டு மெத்தை நான் போடவா அடியே வேணான்டி
பாய் போடவே பக்கத்தில ஆளும் உண்டு தொடு தொடு மச்சானே
புது புது மோகம்தான்  புயல் அடிக்கிற வேகம் தான்
வேகத்துக்கு வேக தடை போடுடா
முண்டகண்ணு மோகினி எங்க போச்சு தாவணி 
மாராப்புக்கு வேற ஆள பாரு நீ
நெருப்பு பாம்பை போல நெளிய இறுக்கி கட்டிக்கடா கிளியை
கொக்கி போடுதடி கொலுசு தாங்க முடியலையே ரவுசு
ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பள பார்த்தேன்
உன்ன மட்டும் உன்ன மட்டும் மாப்பிளை பார்த்தேன்
கோட்டை தாண்டி ஓடி வந்த பொம்பள மானே
கோடு போட்டு வாழுகிற ஆம்பிளை நானே


MUSIC TALKS - ILA NENJE VAA THENDRAL THERINIL ENGUM POI VARALAAM , ADA ANGE PAAR MANJAL VAAN MUGHIL KAIYAAL NAAM THODALAAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



இள நெஞ்சே வா நீ இங்கே வா 
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
இள நெஞ்சே வா நீ இங்கே வா 
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

பச்சைப் புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்

சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே இந்நேரம்


இள நெஞ்சே வா நீ இங்கே வா 
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
இள நெஞ்சே வா நீ இங்கே வா 
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்

அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன் 
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே 
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே இந்நேரம்

இள நெஞ்சே வா நீ இங்கே வா 
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
இள நெஞ்சே வா நீ இங்கே வா 
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்


GENERAL TALKS - சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிளான் போட வேண்டும் !

ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினால...