ஞாயிறு, 18 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 43 - யோசிக்க வேண்டிய விஷயம் மக்களே !!

 


ஒரு நடிகர் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. எம்.ஜி.ஆர் போன்ற சிறந்த நடிகர் நம்முடைய மாநிலத்திற்கு நல்ல முதலமைச்சராக இருந்ததைக் காணும்போது, இப்போது ஏன் ஒரு புதிய நடிகரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று எண்ணுவது இயல்பானதே. ஆனால் உண்மையில், ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடியவர் அரசியலை ஆழமாக அறிந்தவராகவும், அவருடன் இருப்பவர்கள் மக்கள் மற்றும் சமூக சேவைகளில் அக்கறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்கவோ அல்லது சரியான அரசியல் அமைப்பை உருவாக்கவோ நாம் ஆர்வம் செலுத்துவது நியாயமானது. இருந்தாலும், சில செயல்பாடுகளை நன்றாக கவனித்தால், புதிதாக வரும் சிலர் நடப்பு ஆட்சியை குறித்து அதிகமாக வெறுப்பை பரப்புவதையும், உணர்ச்சி வசப்பட்டு மக்களை முடிவெடுக்க தூண்டுவதையும் மட்டுமே செய்கிறார்கள் என்பதை காணலாம். குறைகளைப் பார்த்தால், தெற்கு மாநிலங்கள் வடக்கு மாநிலங்களை விட மிக அதிகமாக முன்னேறி சாதனைகள் படைத்து இருப்பதை உணரலாம். எனவே, இது சரியானதா என்று பகுத்தறிவுடன் யோசித்து முடிவெடுக்க வேண்டும். வாக்கு செலுத்தும் உரிமை உங்களுக்கே சொந்தமானது; நீங்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பெண்களுக்கான நலத்திட்டங்கள் போன்ற பல சமூக நலப் பணிகள் நடப்பு ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவற்றை மக்கள் மத்தியில் போதுமான அளவுக்கு விளம்பரப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் குறைபாடு ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் பலர் அந்தச் சேவைகளை முழுமையாக அறியாமல், அதன் பயன்களைப் பெறாமல் இருக்கிறார்கள். அதேசமயம், மக்கள் சில நடிகர்களை கண்மூடி தனமாக கொண்டாடி, அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகிறது. இது ஒரு சரியான புரிதல் மிக்க, பகுத்தறிவான முடிவு அல்ல என்பதே உண்மை !! 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

TVK செம டிராமா போங்க ! பணம் வெளயாடுது, பசங்களை நல்லா குழப்பி விட்டுருக்காங்க, அரசியல்ல எதுவுமே தெரியாத ஒருத்தருக்கு கண்ணை மூடி ஒட்டு போடனும்னு பதவிக்கு பணம் எல்லாம் கொடுத்து எதிர்காலம் இருக்குனு நம்பவைக்கறாங்க

SPECIAL TALKZ - பேட்-மேன் வேர்ஸஸ் சூப்பர் மேன் !

பொதுவாக, அமெரிக்க காமிக் புத்தகங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், நாம் நிறைய சாகச அம்சங்களைக் காண்கிறோம். நான்...