ஞாயிறு, 18 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 37 - இணையம் மேம்படுத்தும் கருத்துக்களை கொண்டுள்ளது !!

 

இணையம் என்பது தவறான தகவல்களை மட்டுமே பரப்பும் இடம் அல்ல; அதில் நல்ல கருத்துக்களையும், பயனுள்ள அறிவையும் பகிரும் ஆயிரக்கணக்கான தளங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவர்கள் “நமக்கு நேரமில்லை” என்ற காரணத்தால் அவற்றைப் பின்பற்றாமல் விடுகிறார்கள்.

உண்மையில் நமது பிரச்சனை நமக்கு நேரம் இல்லாதது என்பதே அல்ல  நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருக்கின்றன; ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு நல்ல கருத்தை எடுத்துக்கொண்டால், ஒரு மணி நேரத்தில் 60 கருத்துகளைப் பெற முடியும். 

அதே நேரத்தை வீணாக பொழுதுபோக்கு நோக்கத்தில் 60 வீடியோக்களை பார்த்து நேரத்தை கழிக்கலாம்; இவைகளில் சில சம்மந்தம் இல்லாத சுத்த வேஸ்ட் காணொளி என்றும் உங்களுக்கு கிடைக்கலாம் ! ஆனால் அதே நேரத்தை அறிவை வளர்க்கும் 60 கருத்துகளாக மாற்றினால், நம்முடைய வாழ்க்கை முன்னேற்றம் அடையும். இதுவே “நேரம் இல்லை” என்ற மாயையை உடைக்கும் உண்மை.

இணையத்தில் தவறான தகவல்கள், வதந்திகள், பொய்யான செய்திகள் பரவுவது உண்மை. ஆனால் அதே சமயம் கல்வி, ஆரோக்கியம், தொழில்நுட்பம், தத்துவம், கலாச்சாரம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான தரமான உள்ளடக்கங்களும் கிடைக்கின்றன. 

அவற்றைத் தேர்வு செய்வது நம்முடைய பொறுப்பு. தினமும் 10 நிமிடங்கள் நல்ல கட்டுரைகள், கல்வி வீடியோக்கள், ஆரோக்கிய குறிப்புகள் போன்றவற்றைப் படித்தால், ஒரு மாதத்தில் என்ன ஒரு மணி நேரத்துக்கு 300க்கும் மேற்பட்ட நல்ல கருத்துகளைப் பெறலாம். 

இணையத்தை “வேடிக்கை”க்காக மட்டுமே பார்க்காமல், “வளர்ச்சி”க்காகப் பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்க்கையை மாற்றும். குறைவான நேரத்தில் அதிகமான நல்ல கருத்துகளைப் பெறுவது சாத்தியம்; அதற்குத் தேவையானது மனப்பக்குவம், சரியான தேர்வு, மற்றும் ஒழுங்கான பழக்கம் இவைகள் நம்மை முன்னேற்றம் செய்யும் !



கருத்துகள் இல்லை:

DREAMTALKS - EPISODE - 45 - வியாபார களம் மற்றும் கற்றல் நோக்கங்கள் !

முன்னேற்றுவதற்காக நல்ல செயல்களையும், நல்ல எண்ணங்களையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் என்பது ஒருமுறை கற்றுக் கொண்ட அறிவால் ...