ஞாயிறு, 18 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 45 - வியாபார களம் மற்றும் கற்றல் நோக்கங்கள் !





முன்னேற்றுவதற்காக நல்ல செயல்களையும், நல்ல எண்ணங்களையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் என்பது ஒருமுறை கற்றுக் கொண்ட அறிவால் மட்டும் நிற்கக்கூடிய விஷயம் அல்ல; ஒவ்வொரு மாதமும் புதிய அனுபவங்களையும், புதிய திறன்களையும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு பயணம். உங்களுடைய அறிவுத் திறன் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே இருந்தால் போதுமானது என்ற வரையறை எந்த வியாபாரத்திற்கும் இல்லை.

இன்றைய காலத்தில் வியாபாரங்கள் தொடர்ந்து புதிய முன்னேற்றங்களையும், தொழில்நுட்பங்களையும் சந்தித்து வருகின்றன. அதனால், யார் வேகமாக கற்றுக் கொண்டு, தங்களுடைய வேலைகளை முதலில் செய்து முடிக்கிறார்களோ, அவர்களே முதலில் வருமானத்தைப் பெற்று அடுத்த கட்ட விரிவாக்கத்தை உருவாக்குகிறார்கள். வியாபாரத்தில் வெற்றி பெற, தொடர்ந்து கற்றல், புதுமை, மற்றும் சுயக் கட்டுப்பாடு ஆகியவை மிக முக்கியமானவை.

ஒரு கதையையோ அல்லது திரைப்படத்தையோ உருவாக்கும் போது, அதிகமான கதைகளைப் படிக்காமலோ, திரைப்படங்களைப் பார்க்காமலோ நமக்காக ஒரு கிரியேடிவிட்டி நிறைவை வளர்த்துக்கொள்ள முடியாது. நமது வெளியீடு அவ்வளவு நேர்த்தியாக இருக்கவும் வாய்ப்புகள் குறைவு 

உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட கற்பனை இருந்தால் அது போதுமான பக்குவம் கொண்டதாக இருக்க வேண்டும். ஏனெனில், மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டியதில்லை; புதிதாக, இன்ஸ்பிரேஷன் இல்லாமல், உங்களுடைய சிந்தனையிலிருந்து உருவாக்குவது தான் உண்மையான படைப்பாற்றல் என்ற எண்ணத்தை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் ! 

ஆனால் வியாபாரம் என்றால் அது முற்றிலும் வேறுபட்டது. வியாபாரத்தில், உங்களுக்கு சம்பந்தப்பட்டதோ சம்பந்தப்படாததோ பல நிறுவனங்களைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அந்த நிறுவனங்களின் அனுபவங்கள், முறைகள், சந்தை நிலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளாமல், “நான் தனிமைப்படுத்தி என் நிறுவனத்தை மட்டும் காட்டப் போகிறேன்” என்று நினைத்தால் அது குழப்பத்தையும் தோல்வியையும் மட்டுமே உருவாக்கும். 

வியாபாரம் என்பது தனித்துவத்துடன் சேர்ந்து, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதையும், சந்தையின் மாற்றங்களைப் புரிந்து கொள்ளுவதையும் அடிப்படையாகக் கொண்டது

 

கருத்துகள் இல்லை:

DREAMTALKS - EPISODE - 47 - கவலைகளை விட்டொழியுங்கள் !

  நம்முடைய வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் நிகழும் பொழுது, அதனை கண்டு பயப்படாமல், வருத்தப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் கடந்து சென்றால...