நமது வாழ்க்கையில் மிக முக்கியமான அடிப்படை உண்மை என்னவென்றால், நம்மை நாமே நம்பக்கூடிய அளவுக்கு ஒரு தரமான நபராக மாற வேண்டும் என்பதே. நம்மை நாமே மதிப்பிடாமல், நம்முடைய திறமைகள், நமது மதிப்புகள், நமது இலக்குகள் ஆகியவற்றை தெளிவாக நிர்ணயிக்காமல் விட்டுவிட்டால், உலகம் நம்மை எளிதில் குறைவாக மதிப்பிடும். இது சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது நமது வாழ்க்கையின் பாதையை முற்றிலும் மாற்றக்கூடியது.
ஒரு நபர் தன்னுடைய மதிப்பைத் தானே நிர்ணயிக்காமல், “நான் எதற்கும் தகுதியற்றவன்” என்று எண்ணிக்கொண்டால், மற்றவர்கள் அந்த எண்ணத்தையே உண்மையாகக் கருதி அவரை புறக்கணிக்கத் தொடங்குவார்கள். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் — அனைவரும் “இவரால் எதுவும் செய்ய முடியாது” என்ற குறைவான மதிப்பீட்டை வைத்துக்கொண்டால், அவர்கள் அந்த நபரை கை கழுவி விட்டுவிட்டு தங்கள் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள். இதனால் அந்த நபர் தனிமையில் சிக்கிக்கொண்டு, தன்னம்பிக்கை இழந்து, வாழ்க்கையை வீணாக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்.
இதற்கு எதிர்மாறாக, ஒருவர் தன்னுடைய மதிப்பைத் தானே நிர்ணயித்து, “நான் திறமையானவன், நான் சாதிக்கக்கூடியவன்” என்று உறுதியாக நம்பினால், உலகமும் அவரை அதேபோல மதிக்கும். உதாரணமாக, அப்துல் கலாம் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஏழ்மையான சூழலில் இருந்தாலும், தன்னுடைய மதிப்பைத் தானே நிர்ணயித்தார். “நான் விஞ்ஞானியாக மாற வேண்டும்” என்ற நம்பிக்கையுடன் அவர் உழைத்ததால், உலகம் அவரை “மிசைல் மேன்” என்றும், “இந்தியாவின் ஜனாதிபதி” என்றும் மதித்தது. இதுவே நம்மை நாமே நம்புவதின் சக்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக