ஞாயிறு, 18 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 46 - கெடுப்பவர்களும் இங்கே இருப்பார்கள்

 


பல நேரங்களில் நாம் தவறான பழக்கங்களை நோக்கிச் செல்லும்போது, யாராவது நம்மைத் திருத்த முயன்றால் நமக்குக் கோபம் வரும். ஏனெனில் அந்த நேரத்தில் நம்முடைய மனம் அந்த பழக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ள முயலும். சிலர் நம்முடைய தவறான பழக்கங்களை ஊக்குவிப்பதாலோ அல்லது தாங்களும் அதே பாதையில் சென்று கொண்டிருப்பதாலோ, அவர்கள் நம்மை “கதாநாயகன்” போல பார்ப்பார்கள்.

அங்கேதான் நாம் தவறு செய்கிறோம். உண்மையான கதாநாயகன் என்பது தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டவன். ஆனால் பலர், கெட்ட பழக்கங்களை கடுமையாகப் பின்பற்றும் ஒருவரை கதாநாயகனாக எடுத்துக் கொண்டு, அவர்களைப் போலவே நடக்க முயல்கிறார்கள். 

இதனால், அவர்களுடைய பணம், புகழ், வாழ்க்கை எப்படியாவது கற்பனை சக்திகளால் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மாயை நிறைந்த தவறான எண்ணம் உருவாகிறது. ஆனால் மனது ஒரு கட்டத்துக்கு மேல் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டால், அது நம்மை மீட்க முடியாது என்று கைவிடும். இதுவே மனிதனின் மிகப்பெரிய வீழ்ச்சி. கெட்ட பழக்கங்கள் என்பவை கற்பனை சந்தோஷங்கள், உண்மையான சந்தோஷங்களின் கால் தூசுக்கு கூட அருகதை இல்லாதது இந்த கற்பனை சந்தோஷங்கள்.

வாழ்க்கையில் கொடுப்பவர்களும், எடுப்பவர்களும் மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். “கெடுப்பவர்களும்” இருக்கிறார்கள். இவர்களுடைய தன்மை என்னவென்றால், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், ஒருவருடைய வாழ்க்கையை கெடுப்பதில் சந்தோஷம் அடைவார்கள். நீங்க நம்பலேன்னாலும் அதுதான் நிஜம் !

அவர்களுக்கு அதனால் எந்த பலனும் இல்லை என்றாலும், மற்றவருடைய வாழ்க்கையை அழித்து, அதை தங்களுடைய வாழ்க்கையின் ஒரு நினைவுக்குறிய செயலாக நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் சமூகத்தில் மிக ஆபத்தானவர்கள். இவர்களை கவனிக்காமல் நம்முடைய வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கை பாதிக்கப்படும் மக்களே. 

எனவே, நம்முடைய வாழ்க்கையில் யாரை கதாநாயகனாக எடுத்துக் கொள்கிறோம், யாருடைய பழக்கங்களை பின்பற்றுகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உண்மையான கதாநாயகன் என்பது நம்மை முன்னேற்றம் அடையச் செய்யும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றும் ஒருவரே. நம்முடைய மனதை கெடுக்கும் பழக்கங்களையும், கெடுப்பவர்களையும் தவிர்த்து, நல்லவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதே வாழ்க்கையை பாதுகாக்கும் வழி

கருத்துகள் இல்லை:

DREAMTALKS - EPISODE - 48 - ஒரு பாதுகாப்பு அட்வைஸ் மக்களே !

  நம்முடைய வாழ்க்கையைப் பற்றி நாம் அடிக்கடி “பாதுகாப்பாக இருக்கிறது” என்ற ஒரு கருத்தில் நிலைத்து நிற்கிறோம். ஆனால் உண்மையில், பாதுகாப்பு என்...