நம்முடைய வாழ்க்கையில் தேவையில்லாத கோபம் வந்து சேர்ந்தால் அது நம்முடைய மனநிலையையும், உறவுகளையும், முன்னேற்றத்தையும் சீரழித்துவிடும். கோபம் வந்த நேரத்தில் நாம் உண்மையாக நமக்கு அக்கறை கொண்டவர்களின் அறிவுரையை புறக்கணித்து விடுகிறோம். அனுபவம் வாய்ந்த, பக்குவம் பெற்ற மனிதர்கள் நம்மை சரியான பாதையில் நடத்த முயற்சிக்கிறார்கள்; ஆனால் அவர்களை நாம் கைவிட்டு விடுகிறோம்.
அதே சமயம், போலியான மனிதர்கள் இனிமையாகப் பேசினால், அவர்களுடைய வலையில் சிரித்துக்கொண்டே விழுந்துவிடுகிறோம். இதுவே நம்முடைய மிகப்பெரிய தவறு. வாழ்க்கையில் யாராவது நமக்கு அறிவுரை கொடுத்தால், அதை கவனமாகக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை மூடிக் கொண்டு புறக்கணித்தால் அது மிகவும் ஆபத்தானது. நம்முடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதலும், அக்கறையும் கொண்டவர்கள் சரியான நேரத்தில் சரியான யோசனைகளை நமக்காக வழங்குவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அறிவுரை கொடுப்பவர்கள் மற்றும் குறை சொல்பவர்கள் இருவரும் வேறுபட்டவர்கள். அறிவுரை கொடுப்பவர்கள் நம்முடைய நலனுக்காக, நம்முடைய முன்னேற்றத்துக்காக பேசுவார்கள். ஆனால் குறை சொல்பவர்கள், நம்மை தாழ்த்துவதற்காக, நம்முடைய மனநிலையை பாதிக்கத்தான் பேசுவார்கள். எனவே, குறை சொல்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நம்முடைய வாழ்க்கையிலிருந்து நீக்க வேண்டும்.
உண்மையான அறிவுரை நம்மை முன்னேற்றம் அடையச் செய்யும்; போலியான இனிமையான வார்த்தைகள் நம்மை வீழ்ச்சியடையச் செய்யும். வாழ்க்கையில் யாரை கேட்கிறோம், யாரை பின்பற்றுகிறோம் என்பதே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக