பண்டைய கிரேக்க தத்துவஞானி சோக்கிரட்டீஸ், “உண்மையைத் தேடுவது தான் வாழ்க்கையின் நோக்கம்” என்று நம்பினார். அப்போது, அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களால் அவர் தனது சிந்தனைகளை மறைத்திருந்தால், தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பார். ஆனால், அவர் தனது உண்மையான மதிப்புகளை விட்டுவிடாமல், “நான் அறிந்தது என்னவென்றால், நான் எதையும் அறியவில்லை” என்ற தத்துவத்தை வாழ்ந்தார். அதனால் தான், அவர் மரண தண்டனைக்கு ஆளானாலும், வரலாற்றில் உண்மையை வாழ்ந்த தத்துவஞானியாக நிலைத்தார். நம்ம வாழ்க்கையில் உண்மைகள் காதல் என்றால் பொய்கள் கற்பனைக்கு சமமானது. உண்மைகள் நேரடியான அளவுக்கு உங்களுக்கு நல்ல விஷயங்களை கொடுக்கும். இருந்தாலும் அறிவியல் பூர்வமான உண்மைகளை மட்டுமே இந்த காலத்து மக்கள் பின்பற்ற வேண்டும். பொய்கள் நீங்கள் எந்த அளவுக்கு வேல்யூ கொடுத்தாலும் அவைகள் மறுபடியும் ரிட்டர்ன் வேல்யூ கொடுப்பது சந்தேகம்தான். இது எல்லாமே பெரிய கான்செப்ட் மக்களே, இந்த உலகம் உண்மை மற்றும் பொய்கள் என்ற இரண்டு விஷயங்களும் கலந்ததுதான். குறிப்பாக சினிமா முதல் சோசியல் மீடியா வரை ஃபிக்ஷன் என்று சொல்லப்படும் நாடகத்தன்மை நிறைந்த விஷயங்கள்தான் பணத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறது.உண்மையான ஆவணப்படங்கள் புத்தகங்கள் செய்திகள் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் எண்ணிக்கையை பெறுகின்றன. கவனமாக இருக்க வேண்டும் மக்களே. இந்த உலகம் மிகவும் கொடிய ஒரு பாதைக்கு சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த பாதை நன்மை தர பொய்களை சொல்பவர்களை மட்டுமே ஆதரிக்கிறது. நேர்மையானவர்கள் உண்மைகளை சொல்வதால் அப்பாவியாக மாறுகிறார்கள். கவனமாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக