ஞாயிறு, 18 ஜனவரி, 2026

DREAMTALKS - EPISODE - 38 - இது நியாயமான கருத்து தானே ?

 


இந்த உலகில் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சில மனப்பான்மைகள் அடிப்படையில் தவறானவை. முதிர்ச்சியற்றவர்களை கொண்டாடும் பழக்கம், பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதனால் உந்தப்படுபவர்களை வெற்றிகரமான நபர்களாகப் போற்றும் மனநிலை  இவை அனைத்தும் சமூகத்தில் தவறான முன்னுதாரணங்களை உருவாக்குகின்றன. 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், ஒரு கமர்ஷியல் நடிகருக்காக உயிரைக் கொடுக்கத் தயங்காத ரசிகர் ஒருவர், தன்னுடைய சொந்த சம்பளத்தில் அந்த நடிகருக்காக கட்டு-அவுட்டு , போஸ்டர், வைப்பதும், விளம்பரப்படுத்துவதும், நடிகர் பெயரில் அன்னதானம் செய்வதும் பற்றி பெருமையாகச் சொன்னார்.

ஆனால் அந்த நேர்காணலை எடுத்த ஒருங்கிணைப்பாளர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்: “நீங்கள் உங்களுடைய குடும்பத்துக்கு எந்த விதத்திலும் எதுவும் செய்யவில்லை. அதே நேரத்தில், நீங்கள் கடவுளாக மதிக்கும் அந்த நடிகருக்கு, அவருடைய குடும்பமே அவருடைய மகனே இவ்வளவு செலவு பண்ணி பாராட்டாத நிலையில், உங்களுடைய சொந்த சம்பளத்தில் பாராட்டு கொடுக்கிறீர்கள். இது நியாயமா?” என்று.

இந்த கேள்வி நம்மை சிந்திக்க வைக்கிறது. உண்மையான வெற்றி என்பது பணம், புகழ், ரசிகர்கள் ஆகியவற்றால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. ஒருவர் தன்னுடைய குடும்பத்தையும், சமூகத்தையும் புறக்கணித்து, வெளிப்புறத்தில் இருக்கும் ஒருவருக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பது, முதிர்ச்சியற்ற மனப்பான்மையின் வெளிப்பாடு. நம்முடைய வாழ்க்கையில் முதன்மை பொறுப்பு நம்முடைய குடும்பத்திற்கும், நம்முடைய நெருங்கியவர்களுக்கும் தான். 

அவர்களை புறக்கணித்து, வெளிப்புறத்தில் இருக்கும் ஒருவரை கடவுளாகக் கருதி, அவருக்காக எல்லாவற்றையும் செய்வது, நம்முடைய வாழ்க்கையை வெறுமையாக்கும். வெற்றிகரமான வாழ்க்கை என்பது, நம்முடைய குடும்பத்தையும், சமூகத்தையும் முன்னேற்றம் அடையச் செய்வதில்தான் இருக்கிறது. மற்றவர்களை போற்றுவதற்கு முன், நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய பொறுப்புகளை, நம்முடைய உறவுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்

1 கருத்து:

குரு சொன்னது…

TVK தான்டா , 200 உ.பி. , முடிஞ்சதை பாத்துக்க

SPECIAL TALKZ - பேட்-மேன் வேர்ஸஸ் சூப்பர் மேன் !

பொதுவாக, அமெரிக்க காமிக் புத்தகங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், நாம் நிறைய சாகச அம்சங்களைக் காண்கிறோம். நான்...